Monday, December 7, 2015

தமிழக அஞ்சல் மூன்று சங்கத்தின் கோரிக்கை வெற்றி !


தமிழக அஞ்சல் மூன்று சங்கத்தின் 
நீண்ட நாள் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி !


நம்முடைய NFPE  சம்மேளனத்தினால் 4 அம்சக் கோரிக்கைகளின் மீது அறிவிக்கப் பட்ட  டிசம்பர் 1 மற்றும் 2, 2015 ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தை ஒட்டி இலாக்கா  முதல்வருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையின்  போது  நம்முடைய  சம்மேளன மாபொதுச் செயலருக்கு அளிக்கப் பட்ட  MINUTES  நகல்  கீழே  அளிக்கப் பட்டுள்ளது.  படித்துப் பார்க்கவும்  . 

இதில் முதல் இரண்டு  பொதுக் கோரிக்கைகள்  தவிர  மூன்றாவது மற்றும்  நான்காவது கோரிக்கைகள் தமிழக  அஞ்சல் மூன்று சங்கத்தால் எடுக்கப் பட்டதாகும்.  குறிப்பாக   SANCTIONED  STRENGTH மற்றும் WORKING  STRENGTH  இரண்டுக்கும் இடையேயான காலியிடத்தை  நிரப்பிட வேண்டும் என்ற கோரிக்கையாகும். அதற்கு இலாக்கா அளித்த  பதில்  தனியே  கீழே அளிக்கப் பட்டுள்ளது.

"INSTRUCTIONS WILL BE ISSUED TO THE CIRCLES TO RE CALCULATE THE VACANCIES , TAKING INTO ACCOUNT THE RESIDUAL VACANCIES, LR ETC.BY 31.03.2016 "
இது ஏற்கனவே கடந்த 26.1.2015 இல் திருச்சியில் நடைபெற்ற கோட்ட / கிளைச் செயலர்கள் கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவின் படி 26.3.2015 ஒருநாள் தமிழகம் தழுவிய வேலைநிறுத்தத்தின் கோரிக்கையும்  ஆகும். இன்று  இதன் மீது எழுத்து பூர்வமாக  இலாக்காவிடம் இருந்து ஒப்புதல் பெற்றுள்ளோம். CPMG TN  இதன் மீது உடனடி நடவடிக்கை  எடுக்க  வேண்டுகிறோம்.









No comments :

Post a Comment