Wednesday, December 2, 2015

உண்ணாவிரதம் : 11.12.2015



மத்திய அரசு தனது 19.11.2015 தேதியிட்ட அரசானை மூலம் GDS  சம்பளம் மற்றும் இதர பிரச்னைகளை ஆய்வதற்காக  ஓய்வு பெற்ற அஞ்சல் வாரிய உறுப்பினர் திரு கமலேஷ் சந்த்ரா  தலைமையில் ஒரு நபர் கமிட்டியினை  அமைத்ததன் மூலம், மூன்று லட்சம் GDS ஊழியர்களை ஏமாற்றிவிட்டது.

ஓய்வு  பெற்ற அதிகாரிகள் கமிட்டி  GDS  ஊழியர்களுக்கு ஒருபோதும் நீதி வழங்கியது கிடையாது என்பது  நமது கடந்த கால அனுபவமாகும். NFPE  ஆரம்பம் முதலே அதிகாரி கமிட்டி நியமனத்தை எதிர்த்து வந்தது . இந்த கோரிக்கையை  வென்றெடுப்பதற்காக, தர்ணா, உண்ணாவிரதம் , GDS ஊழியர்களின் பாராளுமன்ற பேரணி, NFPE  & FNPO இணைந்த JCA சார்பாக பாராளுமன்ற பேரணி, 12.12.2012 ஒரு நாள் வேலை நிறுத்தம், 12.02.2014 & 13.02.2014 இரண்டு நாள் வேலை நிறுத்தம் என பல்வேறு இயக்கங்களை NFPE  நடத்தியுள்ளதுஆனாலும் அரசு,  நமது கோரிக்கைகளை நிராகரித்து, தன்னிச்சையாக ஒரு நபர் அதிகாரி கமிட்டியினை அமைத்துள்ளது.

அரசின் இந்த தன்னிச்சையான போக்கினை கண்டித்தும், GDS  ஊழியர்களை இலாகா ஊழியராக்கி நியாயமான தீர்வு கண்டிட வலியுறுத்தியும் NFPE  அறைகூவலுக்கிணங்க  11.12.2015 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் திருப்பூர் தலைமை அஞ்சலகம் முன்பு உண்ணாவிரதம் நடைபெறும்உண்ணாவிரதத்தில் ஊழியர்கள் பெருந்திரளாக கலந்து  வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறோம். விடுப்பு எடுத்து முழுமையாக உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள முடியாத GDS தோழர்கள், பணி  முடிந்ததும் பங்கேற்றும்,  அனைத்து தோழர்களும் மாலை 06.00 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்தும் போராட்டம் வெற்றிபெற செய்ய வேண்டுகிறோம் .

No comments :

Post a Comment