அனைவர்க்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
Saturday, January 26, 2013
Friday, January 11, 2013
சீரிய பணி
மறைந்த தலைவனை நினைந்து அனைவரும் இணைந்து போற்றிய அஞ்சலி க் கூட்டம் .
நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம்
அங்கீகாரம் பெற்ற பின்னர் , சிதறிக் கிடந்த NFPE
உறுப்பு சங்கங்களை ஒன்று இணைத்ததும் ,
ஒன்று பட்ட ஒரே முகமாக NFPE இயக்கத்தை
தமிழகத்தில் வெளிப்படுத்தியதும் நம்
வெற்றியாகும் .தொடர்ந்த அதன் சீரிய
செயல்பாட்டின் வெளிப்பாடாய் ஓன்றுபட்ட
அஞ்சலி க் கூட்டம் .
நமது மாநிலச்செயலர் JR அவர்கள் அறிவுஜீவி அன்புத்தலைவன் KVS வழிகாட்டுதலில் கடுமையாய் உழைக்கிறார் .அனைவரையும் அரவணைத்து நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்றை வலிவுடனும் பொலிவுடனும் துடிப்புடனும் செயல்பட்டு வழி நடத்தும் போக்கு பாராட்டுக்குரியது . ஒற்றுமையே வெற்றிக்கு
வழி ! வெல்லட்டும் உன் சீரிய பணி
-- தோழமையுடன் திருப்பூர் & மேட்டுபாளையம் அஞ்சல் மூன்று
CONDOLENCE MEETING TO SHARE WITH THE MEMORIES OF COM. O.P GUPTA
அன்புத் தோழர்களே ! இனிய வணக்கம். !
இன்று (10.01.2013) மாலை சுமார் 06.30 மணியளவில் சென்னை எழும்பூர் SRMU சங்கத்தின் நக்கீரன் அரங்கத்தில் , NFPE தமிழ் மாநில அஞ்சல் RMS இணைப்புக்குழுவின் சார்பில் மறைந்த முது பெரும் தலைவர் தோழர் O.P. குப்தா அவர்களின் மறைவை ஒட்டி நினைவஞ்சலிக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது .
கூட்டத்தின் சிறப்பம்சம் , அனைத்து பகுதி மூத்த முன்னோடித் தலைவர்கள் கலந்து கொண்டு மறைந்த தலைவரின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டது தான்.
"என்ன தந்தும் ஒற்றுமை - என்னையே தந்தும் ஒற்றுமை" என்பது மறைந்த முது பெரும் தலைவர் தோழர் O.P. குப்தா அவர்களின் காலத்தால் மறையாத வாசகங்கள்.
இந்த வரலாற்று வரிகளின் உதாரணமாக , பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட , பல்வேறு சித்தாந்தங்களை கொண்ட , பல்வேறு அரசியல் கருத்தோட்டங்களை கொண்ட மூத்த தொழிற் சங்கத் தலைவர்களை ஒரே மேடையில் தோழர். குப்தா அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொள்ள வைத்து , அந்த மாபெரும் தலைவனுக்கு அஞ்சலி செலுத்தியது தான் , அந்தத் தலைவனுக்கு நாம் செலுத்திய உண்மையான அஞ்சலி ஆகும்.
தமிழ் மாநில அஞ்சல் RMS இணைப்புக் குழுவின் தலைவர் தோழர் . K . ராஜேந்திரன் அவர்கள் தலைமை ஏற்க , இணைப்புக் குழுவின் முன்னாள் கன்வீனர் தோழர். M . கண்ணையன் அவர்கள் முன்னிலை வகிக்க , இந்நாள் கன்வீனர் தோழர். J.R. அவர்கள் துவக்கி வைக்க , நினைவஞ்சலிக் கூட்டம் , மறைந்த தலைவரின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் வண்ணம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
NFPE இயக்கத்தின் மூத்த தோழரும் , மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தமிழ் மாநில தலைவருமான தோழர் . A.G. பசுபதி அவர்கள் தோழர் குப்தா அவர்களின் திருவுருவப் படத்தை திறந்து வைக்க , மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் அகில இந்திய உதவித் தலைவர் தோழர். K.R. அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் .
கூட்டத்தில் கீழ்க் கண்ட தலைவர்கள் , கடந்த கால தொழிற் சங்க இயக்கங்கள் , 1947 UPTW காலம் தொட்டு 1954 NFPTE பேரியக்கம் உருவான வரலாறு முதல் , 1960 மற்றும் 1968 போராட்டங்கள் உள்ளிட்ட NFPTE இன் இயக்க வரலாறு குறித்தும் அதில் கடந்த 66 ஆண்டுகளில் தோழர் குப்தா அவர்களின் பங்கு குறித்தும் , தோழர். குப்தா அவர்களுடன் தங்களின் அனுபவங்கள் குறித்தும் உணர்ச்சி மேலிட எடுத்துரைத்தார்கள்.
அஞ்சலி உரையாற்றிய தோழர்கள் :-
1. தோழர். சோமசுந்தரம், முன்னாள் மாநிலச் செயலர் , FNPO R 3
2. " R.K. , முன்னாள் சம்மேளனச் செயலர் , NFTE, தொலைத் தொடர்பு.
3. " நூர் அகமது , முன்னாள் அ .இ .பொதுச் செயலர் , R 4, FNPO .
4. " S . செல்லப்பா , மாநிலச் செயலர் , BSNLEU, தமிழ் நாடு.
5. " K . குணசேகரன், மாநிலச் செயலர், P 4, FNPO .
6. " R . பட்டாபிராமன், மாநிலச் செயலர், NFTE , தமிழ் நாடு.
7. " முத்தியாலு, முன்னாள் மாநிலச் செயலர் , NFTE .
8. " பரந்தாமன், மாநில உதவிச் செயலர் , AIPEDEU , தமிழ் நாடு.
9. " K.V.S. , முன்னாள் பொதுச் செயலர் , அஞ்சல் மூன்று, NFPE .
LEADER STAFFSIDE JCM
10. " S . ரகுபதி, உதவி மா பொதுச் செயலர், NFPE .
11. " J . ராமமுர்த்தி , மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று, NFPE .
12. " K . சங்கரன் , மாநிலச் செயலர், RMS மூன்று, NFPE .
13. " N . கோபாலகிருஷ்ணன், செயல் தலைவர், அஞ்சல் மூன்று, CHQ .
14. " R . பார்த்திபன், முன்னாள் மா. செயலர், அஞ்சல் மூன்று, NFPE .
15. " K .R ., முன்னாள் மா பொதுச் செயலர், NFPE .
16. " A .G . பசுபதி, தலைவர், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம்,T.N.
நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம் அங்கீகாரம் பெற்ற பின்னர் , சிதறிக் கிடந்த NFPE உறுப்பு சங்கங்களை ஒன்று இணைத்ததும் , ஒன்று பட்ட ஒரே முகமாக NFPE இயக்கத்தை தமிழகத்தில் வெளிப்படுத்தியதும் நம் வெற்றியாகும் .
மாற்றுச் சங்கமான FNPO வையும் ஒருங்கிணைத்து , தொழிலாளர் ஒற்றுமையை வெளிப்படுத்தி , பல்வேறு போராட்டங்களை JCA வடிவில் தமிழகத்தில் வெளிப்படுத்தியதும் நம் வெற்றியே .
பிரிந்து கிடந்த , அஞ்சல் பகுதி , RMS பகுதி மற்றும் தொலைத் தொடர்பு பகுதிகளின் பல்வேறு பட்ட தொழிற்சங்கங்களையும் ஒருங்கிணைத்து ஒன்று பட்ட நிலையை ஏற்படுத்தி இருப்பது இன்றைய வெற்றியாகும் .
அனைத்து மத்திய அரசு ஊழியர் சங்கங்களையும் ஒருங்கிணைத்து பல்வேறு போராட்ட இயக்கங்களை தற்போது ஒன்று பட்டு நடத்தி வருவதும் நம் வெற்றியே .
இந்த நிகழ்வு இனி வருங்காலங்களில் பல்வேறு போராட்டங்களில் தொடர் நிகழ்வாக அமையும் என்றும் இனி உழைக்கும் வர்க்கம் ஒரே குரலாக , ஓரணியில் திரளும் என்பதும் , தோழர். குப்தா அவர்களின் நினைவஞ்சலி கூட்டத்தில் நமது அஞ்சல் RMS இணைப்புக் குழு சார்பாக நாம் அளித்த உறுதி மொழியாகும். இதுவே தோழர் குப்தா அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மை அஞ்சலி ஆகும். அவர்தம் நினைவை ஏந்தி , ஊழியர் பணியில் உழைக்கும் வர்க்கத்தை ஓரணியில் திரட்டுவதுவே நம் முன் உள்ள இன்றைய கடமையாகும் அந்த திசை நோக்கி நாம் சிந்திப்போம்.
தோழமையுடன்,
தோழர். J.R. , கன்வீனர்,
அஞ்சல் - RMS -MMS -GDS
சங்கங்களின் இணைப்புக் குழு,
தமிழ் மாநிலம் .
Monday, January 7, 2013
CONDOLENCE ON THE DEMISE OF COM.RAJENDRA BABU
EX-CIRCLE SEC., IP/ASP ASSN, TN
கண்ணீர் அஞ்சலி
IP/ASP ASSOCIATION இன் முன்னாள் தமிழ் மாநிலச் செயலர்
தோழர். S . ராஜேந்திர பாபு அவர்கள்
மாரடைப்பு காரணமாக இன்று இயற்கை எய்தினார்
என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தோம்.
அவரது மறைவிற்கு தமிழ் மாநில அஞ்சல் மூன்றின்
சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.
------ P3 P4 GDS , NFPE TIRUPUR
With profound grief it is intimated that Com. O.P. Gupta, veteran leader of P&T Trade Union movement, Ex-Secretary General, NFPTE & Ex.-General Secretary R-4 passed away on 6th January at 5 P.M. NFPE conveys its respectful homage and heartfelt condolences. RED SALUTE TO COM. O.P. GUPTA. = M. Krishnan, Secretary General NFPE.
**************
Tirupur, Mettupalayam ,Dharapuram P3 ,P4,GDS express heartful condolences.
Tuesday, January 1, 2013
Subscribe to:
Posts
(
Atom
)