Wednesday, June 27, 2012

மத்திய செயற்குழு


வேலூர் கோட்டத்தில்  அஞ்சல் மூன்றின்

 மத்திய செயற்குழு 


39 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் அகில இந்திய செயற்குழுக் கூட்டம் ! ..........

CENTRAL WORKING COMMITTEE MEETING AT TAMILNADU CIRCLE AFTER 39 YEARS

நமது காலத்தில் ஒரு வரலாற்று நிகழ்வு !.................


கடைசியாக 1973 இல் நடைபெற்ற அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு, RMS மூன்று , RMS நான்கு இணைந்த மத்திய செயற்குழு கூட்டம் சென்னை வடகோட்டத்தில் ..... அதற்குப் பின் இதுவேநிகழ்வு  !

நமது அன்புக்குரிய பொதுச் செயலர் தோழர். KVS அவர்கள் பொறுப்பில் நடைபெற்ற கடைசி செயற்குழு .............
புதிய பொதுச் செயலர் தோழர். சிவநாராயணா அவர்களைப் பெற்ற செயற்குழு..............
இது நடைபெற்ற வேலூருக்கும் ஒரு சிறப்பு உண்டு.........
நமது அன்புக்குரிய KVS அவர்கள் முதன் முதலில் மாநிலச் செயலர் ஆனவுடன் , முதல் மாநிலச் செயற்குழுக் கூட்டம் நடத்தப் பட்டது வேலூர் கோட்டத்தில் ...
நமது அன்புக்குரிய KVS அவர்கள் பொதுச் செயலராக இருந்து இலாக்கா பணி நிறைவடையும்
போது அவர் காலத்தில் கடைசியாக
நடை பெற்ற அகில இந்திய செயற்குழுக் கூட்டமும் வேலூர் கோட்டத்தில் ....

வேலூர் கோட்ட 'வீரர்' களுக்கு மாநிலச் சங்கத்தின் மனமார்ந்த பாராட்டுக்கள் .... வாழ்த்துக்கள் ........

...................
மத்திய செயற்குழுக் கூட்டம் கடந்த 23 மற்றும் 24.6.2012 தேதிகளில் வேலூரில் உள்ள S.K.M. மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அஞ்சல் மூன்றின்  அகில இந்தியத்   தலைவர்   தோழர்.    M. கிருஷ்ணன் அவர்கள் தலைமை ஏற்க , சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் தோழர் . B.G. தமன்கர் அவர்கள் பொது அரங்கை துவக்கி வைத்து உரையாற்றினார்.
சம்மேளனத்தின் முன்னாள் பொதுச் செயலரும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் செயல் தலைவரும் ஆகிய தோழர். K.R., நமது பொதுச் செயலர் தோழர் . K.V.S., AIPAEA பொதுச் செயலர் தோழர். சத்தியநாராயணா, AIPAOEU பொதுச் செயலர் தோழர் . பிரணாப் பட்டாசார்யா , R IV பொதுச் செயலர் தோழர். சுரேஷ், AIPSBCOEA பொதுச் செயலர் தோழர். அப்பன்ராஜ், NFPE துணைப் பொதுச் செயலர் தோழர். ரகுபதி , AIPEU GDS NFPE பொதுச் செயலர் தோழர் பாண்டுரங்க ராவ், AIPCPCCWF WORKING PRESIDENT தோழர்.
நாகபூஷணம் , P IV AGS தோழர். கோபு . கோவிந்தராஜன், R III AGS தோழர். M.B. சுகுமார் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றி னார்கள்.
செயற்குழுவில் அனைத்து மாநிலச் செயலர்களும், அகில இந்திய சங்க நிர்வாகிகளும், அகில இந்திய மகிளா கமிட்டியின் நிர்வாகிகள் தோழியர். நந்தா சென்(W.B.), மௌசுமி மஜும்தார் (Assam) , புஷ்பேஸ்வரிதேவி (A.P.) மணிமேகலை (T.N.) ஆகியோரும் கலந்துகொண்டு ஊழியர் பிரச்சினைகள் குறித்தும், அகில இந்திய சங்கத்தின் செயல் பாடுகள் குறித்தும், போராட்டங்களில் பங்குகொள்ள வேண்டிய அவசியம் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஆழமாக விவாதித்தனர் .
தோழர். K.V.S. அவர்களுக்கு வேலூர்,   பெண்  கொடுத்த  ஊர் என்பதால் அவருக்கு , அவரது பணி நிறைவை ஒட்டி மாப்பிள்ளைக் கான மரியாதை செய்வது போல , 25 க்கும் மேற்பட்ட சீர்வரிசைகளை தட்டுகளில் ஏந்தி தோழியர்களும் தோழர்களும் , திருமண வீடு போல , ஆளுயர மாலை அணிவித்து , மலர் கிரீடம் அணிவித்து மரியாதை செய்தனர். இந்த நிகழ்வு புதுமையானதாகவும் , சிறப்பானதாகவும் , வேலூர் கோட்ட தோழர்கள்/தோழியர்களின் அன்பை வெளிப் படுத்துவதாகவும் அமைந்தது வெகு சிறப்பு.
மத்திய செயற்குழு ஏகமனதாக துணைப் பொதுச் செயலர் தோழர். சிவநாரயணா அவர்களை அடுத்து அகில இந்திய மாநாடு வரை OFFICIATING GENERAL SECRETARY ஆக பணி யாற்ற முடிவெடுத்தது. மேலும் தோழர். KVS அவர்களை அடுத்த மாநாடு வரை தலைமையகத்தில் பணியாற்ற கேட்டுக் கொண்டது .
சம்மேளனத்தால் அங்கீகரிக்கப் பட்ட AIPEU GDS NFPE சங்கத் திற்கு அனைத்து உறுப்பு சங்கங்களின் ஆதரவை எல்லா விதங்களிலும்  அளித்திட வேண்டியும், அஞ்சல் மூன்றின் முழு ஆதரவை அளிப்பதாகவும்  தீர்மானம் ஏகமனதாக நிறை வேற்றப் பட்டது.
ஏனெனில் AIPEU GDS NFPE  சங்கம் மட்டுமே NFPE  இன் உறுப்பு சங்கமாக , அதாவது  "ASSOCIATE MEMBER" ஆக இருக்க விருப்பம் தெரிவித்து  அதற்கான  விண்ணப்பத்தை சம்மேளனத்திடம் அளித்துள்ளதாக  நமது மா பொதுச் செயலர் தெரிவித்தார்.

 AIPEDEU  சங்கம்  NFPE  இன் உறுப்பு சங்கமாக இருக்க  மனுச் செய்யவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.  AIPEDEU  சங்கம்  NFPE  யின்  ASSOCIATE MEMBER  ஆக இருந்திட ஏற்கனவே நாம்  அளித்த அழைப்பை  நிராகரித்தது அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்பது இங்கே  குறிப்பிடத் தக்கது. 
CWC  கூட்டம் புதிய  பொறுப்பு பொதுச் செயலர் தோழர். சிவநாராயணா  அவர்கள் நன்றி கூற இனிதே முடிவுற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இனிதே செய்து முடித்த  வரவேற்புக் குழு  தோழர்கள் ..................

வரவேற்புக் குழுத் தலைவர்  தோழர் S. சந்தானராமன் அவர்களுக்கும்  , பொதுச் செயலர்  தோழர் S. வீரன் அவர்களுக்கும்  வரவேற்புக் குழுவின் இதர நிர்வாகிகள் 

தோழர். B. அம்ருத கணேசன், மாநில உதவித் தலைவர், வேலூர்
தோழர் . A. குமரன், கோட்டச் செயலர், அரக்கோணம்
தோழர். G. ராமமூர்த்தி, கோட்டச் செயலர், செங்கல்பட்டு
தோழர். K. பிச்சாண்டி , கோட்டச் செயலர், திருவண்ணாமலை
தோழர். V. சுப்பிரமணி, கோட்டச் செயலர், திருப்பத்தூர்
தோழர். A. கேசவன், கோட்டச் செயலர், காஞ்சிபுரம்
தோழர். S. தனசேகரன் , கிளைச் செயலர், ராணிப்பேட்டை
தோழர். D. சுப்புராஜ் , கிளைச் செயலர், ஆரணி,
தோழர். C. நெடுஞ்செழியன், கிளைச் செயலர், குடியாத்தம்
ஆகியோருக்கும்  கூட்டுப் பொறுப்பாகநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்த வேலூர் கோட்டத் தோழர்கள்

கோட்டச் செயலர் தோழர். S. வீரன்,  இதர தோழர்கள்
S. சுந்தரராஜன்,  R. இளந்திரையன் , N. சங்கர் ,
K. ஜெயச்சந்திரன், K. புருஷோத்தமன்,  மற்றும்  பம்பரமாக சுழன்று  பணியாற்றிய GDS  தோழர் .
V. பிரபு அவர்களுக்கும்  நம் மாநிலச் சங்கத்தின்  நெஞ்சார்ந்த நன்றி.

வேலுரை விட்டு வரும்போது  எதிர்கால வரலாற்றில் இந்த  நிகழ்வு பொறிக்கப் படும் என்று எண்ணியவாரே நாம்  ஊர் திரும்பினோம்.
*****************
நமது திருப்பூர் கோட்டத்திலிருந்து  தோழர்.N.S , 
தோழர்.A .ராஜேந்திரன்II ,  தோழர்.Kசெல்வராஜ் ,தோழர்.D.சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்





                       வேலுரில் நடந்தேறிய மத்திய செயற்குழு 
நாள்: 23,24 ஜூன் 2012













Tuesday, June 19, 2012

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் 
                           அறை கூவல் ...
            . பாராளுமன்றம் நோக்கி பேரணி ****
அதற்கான விளக்கக்கூட்டம் -
 தமிழகப் பெரு நகரங்களில் 





                                                          திருச்சி கூட்டம்.







                                                               
























மதுரை கூட்டம்


                                                           




























கோவை கூட்டம் 


NFPE செயல் தலைவர் முழக்கம் -  கோவையில் 

                சென்னை கூட்டம்


Felicitation meeting to
           Com. K. V. s
A felicitation meeting is organized by TN Circle Union to Com. KVS, GS on the eve of his retirement at Alamelumanga Kalyanamandapam, Near T. Nagar HPO, Chennai 600017 on 05.08.2012 in a befitting manner. Thus we got a occasion to honour our beloved leader.

நமக்காக உழைத்துக் கொண்டிருக்கும் அண்ணன் K. V. s அவர்களுக்கான பாராட்டுவிழாவிற்கு அலைகடலென த் திரள்வீர் . அணிவகுப்பீர் . ஆர்ப்பரிப்பீர் .

Saturday, June 16, 2012

தோழர் .ஆதி அவர்களின் நினைவு நாள்


           
ஊரக அஞ்சல் ஊழியரின் உயர்வையே தன் கொள்கை என ஓய்வறியா உழைப்பாளி தோழர் .ஆதி அவர்களின் நினைவு நாள் .

திருப்பூர், மேட்டுபாளையம்  அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு மற்றும் 
திருப்பூர், மேட்டுபாளையம், தாராபுரம் NFPE -GDS சங்கங்கள் தோழர் .ஆதி 
அவர்களை  நினைவு கூர்கிறது 


            DEATH ANNIVERSARY OF
                COM. K. ADINARAYANA
            17-06-2012

Tuesday, June 12, 2012

CURRENT NEWS



                        CURRENT NEWS
ON 12/6/2012 BIMONTHLY MEETING WITH PMG WESTERN REGION IS TO BE HELD


NFPE P3 PARTICIPANTS


1. N.SUBRAMANIAN  REGIONAL SECRETARY P3
2 C.CHANDRASEKAR WORKING PRESIDENT NFPE

CALL FROM CONFEDERATION டெல்லிக்குச் செல்வோம் ! வெல்வோம !!





CALL FROM CONFEDERATION


டெல்லிக்குச் செல்வோம் ! வெல்வோம !!

மத்திய அரசின் புதிய பென்ஷன் திட்டத்தை எதிர்த்து 1.1.2004 க்கு முன்னரில்  இருந்து நாம் நடத்தி வரும் தொடர்  இயக்கங்களாலும்
போராட்டங்களாலும் , இதுவரை மத்திய அரசினால் PFRDA BILL க்கான
சட்ட ரீதியான ஒப்புதலை பாராளுமன்றத்தில் கொண்டு வர இயலவில்லை.

கடந்த நவம்பர் 25 - 2011 அன்று நாம் நடத்திய பாராளுமன்றம் நோக்கிய
பேரணியின் விளைவாகவும் 10 லட்சம் ஊழியரிடமிருந்து கையெழுத்து
இயக்கம் நடத்தி  அன்றைய தேதியில் பிரதம அமைச்சரிடம் கொடுத்ததன்
விளைவாகவும்  அப்போது  பாராளுமன்றத்தில் எதிர்ப்பு மிகக் கடுமையாக
எழுந்தது  உங்களுக்கு நினைவிருக்கும். அதன் காரணமாக அன்றைய
தேதியில் தாக்கல் செய்யப்பட இருந்த மசோதா  பாராளுமன்றத்தில் போதிய ஆதரவில்லாததால் மீண்டும் ஒத்தி வைக்கப் பட்டது .

தற்போது BJP,  திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட  கட்சிகளின் ஆதரவைத்
திரட்ட வேண்டி ஏற்கனவே இருக்கும் மசோதாவில் புதிதாக மூன்று
திருத்தங்களை  மத்திய காபினெட்  கொண்டு வர முடிவு செய்துள்ளது .
இது கூட  நாம் அறிவித்துள்ள 26.07.2012 அன்றைய  பாராளுமன்றம் நோக்கிய
பேரணியின்  விளைவே ஆகும்.

இந்த மூன்று திருத்தங்களும்  முதலீட்டாளர்களுக்கு ஓரளவு  பாதுகாப்பு அளிக்கக் கூடிய  விஷயமே. ஆனாலும் , இந்த திருத்தங்களுடன் , இடைச்
செறுகலாக , புதிதாக  ஒரு திருத்தமாக,  இதுவரை இந்த முதலீட்டை
அரசின்  பாதுகாப்பான நிதியங்களில் (Govt. securities)   செலுத்தி வந்ததற்கு
பதிலாக , பாதுகாப்பற்ற  தனியார் /பன்னாட்டு  மூலதனங்களிலும்
இந்த முதலீட்டை  செலுத்தலாம் என்று  ஒரு திருத்தத்தை  கொண்டு வர
காபினெட்  முடிவு செய்துள்ளது  மிகவும் ஆபத்தானது.

எது எப்படி இருந்தாலும் , 46 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் , பலகோடி
மாநில/ பொதுத் துறை ஊழியர்களும்  ஒன்று பட்டு இந்தப் பென்ஷன்
திட்டத்தை  ஒழித்திட ,  மூச்சு விடாமல்  போராடியே ஆகவேண்டும்.
இல்லையேல்  நம் எதிர்காலம் கேள்விக்குறியே.

உடன் பாராளுமன்றம் நோக்கிய பேரணிக்கு ஊழியர்களை ஒன்று திரட்டுங்கள்!  உடன்  ரயில் டிக்கெட்  முன்பதிவு செய்திடுங்கள் !

ஏழாவது ஊதியக் குழு வேண்டியும் ,  பஞ்சப் படி  அடிப்படை ஊதியத்துடன்
இணைக்க வேண்டியும்,  புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்திட
வேண்டியும்  அனைத்து மத்திய அரசு ஊழியர் சங்கங்களின்
தலைவர்களின்  பிரச்சார இயக்கக் கூட்டங்கள் கீழ் வரும் நகரங்களில்
நடைபெறுவதாக  அறிவிக்கப் பட்டுள்ளது . ஆங்காங்கு உள்ள நம்முடைய
NFPE  இயக்கத் தோழர்கள், அவரவர்கள்  பகுதியில் நடைபெறும் கூட்டங்களில்
பெருவாரியான அளவில் ஊழியர்களைத் திரட்டி, கூட்டங்களை சிறப்பிக்குமாறு  மாநிலச் சங்கம்  வேண்டுகிறது .
TAMILNADU: - Tiruchy- 12.6.2012, Madurai- 13.6.2012, Coimbatore- 14.6.2012, Chennai- 15.6.2012 - K.Ragavendran, K.V.Sreedharan, Ashok B Salunkhe, M.Duraipandian, K.Venkatasubramanian.
State Secretary , Com. M. Duraipandian. Phone No. 097898 33552

போராட்ட வாழ்த்துக்களுடன்............. J.R.  மாநிலச் செயலர் .