பணிஓய்வுப் பாராட்டு விழா
தோழர் R .நடேசன் முன்னாள் கோட்டச்செயலர் P4 திருப்பூர் மற்றும் தோழர் .தாமஸ் , தபால்காரர் ஆகியோருக்கு பணிஓய்வுப் பாராட்டு விழா திருப்பூர் கிழக்கு அஞ்சலகத்தில் 30 /7 /2011 அன்று மாலை சிறப்புடன் நிகழ்ந்தேறியது . திருப்பூர் அஞ்சல் மூன்று கோட்டச்சங்க நிர்வாகிகள் பங்கேற்றுப் பாராட்டினர் .தோழர் R .நடேசன் முன்னாள் கோட்டச்செயலர் P4 திருப்பூர் அவர்களின் தொழிற்சங்கப் பணிகளை திருப்பூர் அஞ்சல் மூன்று கோட்டச்சங்கம் மகிழ்வுடன் நினைவு கூர்கிறது . பாராட்டுகிறது .
பணி ஓய்வு பெறவிருந்த காரணத்தால் கடநத மூன்று நாட்களுக்கு முன்னரே கோட்டச்செயலர்
பதவியிலி ருந்து விலகி புதிய கோட்டச்செயலர் P4 தோழர் .v .தர்மலிங்கம் அவர்களை அடையாளம் காட்டி ஜனநாயக வழியிலே தேர்வாகிட அஞ்சல் மூன்றையும் சாட்சிக்கு அழைத்த காட்சி அவரது தொழிற் சங்கப்பணி க்கு ஜனநாயக மாண்புக்கு ,மரபுக்கு கட்டியம் கூறுவது போல் அமைந்தது . புதிய P4 கோட்டச்செயலர் தோழர்.v .தர்மலிங்கம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் ,பாராட்டுக்களையும் திருப்பூர் அஞ்சல் மூன்று தெரிவிக்கிறது .