Friday, February 22, 2013

STRUGGLING IS THE PART OF LIFE AND IT ONLY LEADS  TO GROWTH.--- NS TIRUPUR

Thursday, February 21, 2013

திருப்பூர் கோட்டத் தில் NFPE உறுப்பினர்களில் 97 சதவீதம் தோழர்கள் வேலைநிறுத்தத்தில் பங்குபெற்றனர் .அனைவர்க்கும் போராட்ட வாழ்த்துக்கள் .

மேற்கு மண்டலத்தில் நீலகிரியில் 100  சதவீதம், கோவை 98 சதவீதம்,ஈரோடு 98 சதவீதம், திருப்பத்தூர் 98  சதவீதம்,சேலம் கிழக்கு 90 சதவீதம்,பொள்ளாச்சி 90  சதவீதம் என போராட்ட வீச்சு இருந்தது .
நமது NFPE அனைத்து கோட்டங்களிலும் வெகுண்டெழுந்து போராடியது .

Tuesday, February 19, 2013

அன்பார்ந்த தோழர்களே ,


அன்பார்ந்த தோழர்களே ,
நமது திருப்பூர் ,மேட்டுபாளையம் மற்றும் தாராபுரம் பகுதிகளில் உள்ள அனைத்து தோழர்களுக்கும்  கூட்டுச் சுற்றறிக்கை ஏற்கனேவே அனுப்பப்பட்டுள்ளது . அனைத்து  அஞ்சல் மூன்று ,நான்கு மற்றும் GDS  தோழர்களும் முடிந்தவரை அவரவர் சார்ந்த பகுதிகளில் 20 , 21/2/2013 இருநாட்கள்  வேலைநிறுத்தத்தை சக தோழர்களிடம்  விளக்கிட வேண்டுகிறோம் .

போராட்டம் நாம் விரும்பி அழைப்பதல்ல . நம் மீது  திணிக்கப்படும்போது வீரத்துடன் 
எதிர்கொள்வது . போராடாமல் ஒரு அடிகூட முன்னேற்றமில்லை என்பதுதான் வரலாறு .
போராடும் களத்தில் NFPE முன்னணியில் இருக்கும் .பின்னால் வருகிற தோழர்கள் நம்முடன் தொடர்கிறார்களா என்பதை திரும்பிப் பார்க்காமல் முன்னேறிச்செல்வது தான் நமது பாரம்பரியம் .

போராட்டங்கள் இல்லாமல் யாராட்டமும் செல்லாது . உரிமைக்கான போராட்டம் தான் 
சரியான தேசபக்தி . போராடுவோம் . நாட்டைக் காப்போம் .

தோழையுடன் 
P 3, P 4 ,GDS  NFPE   திருப்பூர் கோட்டம் 

ALL COMRADES ARE REQUESTED TO INTIMATE OTHERS TO SEE OUR WEBSITE FREQUENTLY. 
A SOUND WAKE UP  CALL FROM OUR CIRCLE UNION ; 

  IF NOT TODAY , NEVER TOMORROW

வேலை நிறுத்தம் வெல்லட்டும் !

நாடு தழுவிய அளவில் 10 கோடி தொழிலாளர்களுக்கு மேல்  , எந்த வித அரசியல் பாகுபாடும் இல்லாமல் எதிர் வரும் பிப்ரவரி 20 மற்றும் 21 தேதிகளில் நடைபெறவுள்ள  48 மணி நேர வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்ள உள்ளார்கள். 

ஆளும் கட்சியான இந்திய தேசிய காங்கிரசின் அங்கீகரிக்கப் பட்ட தொழிற் சங்கமான INTUC  இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதும் அதன் இணைப்பு சங்கமான  அஞ்சல் பகுதியின் FNPO  இந்த வேலை நிறுத்தத்தை முன்னின்று  நடத்துவதும் இதற்கு உதாரணமாகும். எப்போதும் தனியே நிற்கும்  தோழர். மகாதேவையா தலைமையில் ஆன AIPEDEU  சங்கமும்  இந்த வேலை நிறுத்தத்தில்  தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளதாக அவரது வலைத்தளத்தில்  வெளியிட்டுள்ளார் என்பதும் இங்கு  குறிப்பிடத்தக்கது. 

மத்திய அரசின்  தனியார் மயக் கொள்கைகளை தடுத்திட நாம் தொடர் போராட்டங்கள் பல காலமாக நடத்தி வந்துள்ளோம். NATIONAL  POSTAL POLICY 2012 என்பது அறிவிக்கப்பட்டு , PPP  என்று சொல்லப்படும்  PRIVATE -PUBLIC -PARTNERSHIP  என்ற கொள்கை அஞ்சல் துறையில் தன்னிச்சையாக அறிவிக்கப் பட்டுள்ளது உங்களுக்கு தெரிந்திருக்கும். INDIA  POST  வலைத்தளத்தில் இது பிரசுரிக்கப்பட்டுள்ளது. 

இந்த சூழ் நிலையில் தனியார் கூரியர் நிறுவனங்களுக்கு அஞ்சல் சேவையில் பங்கு என்பது  தற்போது பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது.  ஒவ்வொரு அஞ்சலகத்திலும்  கூரியர் நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கிக் கொடுக்க இந்த வரைவு வழி வகை செய்துள்ளது . இதனை நாம் எதிர்க்க வேண்டிய  கட்டாயத்தில்  உள்ளோம். நாம் மட்டுமே தனியாக போராடினால் மத்திய அரசின் கொள்கை முடிவுகளை எதிர்த்திட முடியுமா என்பதை உங்களின் சிந்தனைக்கு விடுக்கிறோம். 

நாடு முழுதும் உள்ள கோடிக்கணக்கான  மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத் துறை ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் , அமைப்பு சாரா ஊழியர்கள், பாதுகாப்புத்துறை ஊழியர்கள்  திரண்டெழுந்து போராடும் போது  நாம் மட்டும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாமா ?

இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் , பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்தால்  , நாம்  போராடும் போது  எவர் வருவார் என்பதை  சிந்திக்க வேண்டுகிறோம் .

எப்போதும் போல  நம்மில் ஒரு சிலர்  இது அரசியல் கட்சிகளின் போராட்டம் என்று கூறி ,  ஊழியர்களை  பிளவு படுத்த நினைப்பது எந்த வகையில் சரி என்பதை  உங்களின் சிந்தனைக்கே  விடுகிறோம் .  

நாளை BSNL  போல நமது துறையும்  சீரழிக்கப் படும்  . BSNL  ஊழியர்கள் , அவர்களது துறை காக்க போராடும் காலமெல்லாம்  அதனை கொச்சைப் படுத்திய  சில பிளவு வாத சக்திகள் , இன்று  4 ஆண்டுகளாக அந்த ஊழியர்களுக்கு BONUS  நிறுத்தப் பட்டுள்ளதற்கு  என்ன பதில் சொல்வார்கள் . போதிய நிதி இல்லை என்று கூறி BSNL  இல்  மாத சம்பளமே சில மாதங்களுக்கு முன்னர் நிறுத்தப் பட்டது உங்களுக்கு நினைவிருக்கும் . அவர்களுக்கு LTC  கிடையாது . தற்போது ஒரு லட்சம் ஊழியர்கள் உபரி என்று அறிவிக்கப் பட்டு  VRS  இல் செல்ல நிர்ப்பந்திக்கப்  படுகிறார்கள் 

இது போல நமது துறையிலும் , கூரியர் நிறுவனங்களுக்கு கதவு திறந்து விடப்பட்டு , CBS  திட்டம் மூலம்  கிளை அஞ்சலகங்கள் வரை centralised  server  உடன்  இணைக்கப் படுமானால் ,  துணை  அஞ்சலகங்களில் வேலை  பாதியாகக் குறையும் .  தலைமை அஞ்சலகங்களில் SBCO,  SO SB BRANCH, MO PAID BRANCH   போன்றவை இருக்காது .

 ECS  மூலம் சம்பளம் உட்பட அனைத்து  ஊழியர்  BILL களும் பட்டு வாடா செய்யப் படும் போது  ACCOUNTS  BRANCH  எப்படி  இருக்கும் ?  அப்போது  ஊழியர்கள் உபரி என்று  இந்த இலாக்காவும் , அரசாங்கமும் அறிவிக்க எவ்வளவு நேரம் ஆகும் ?  BSNL  போல  நமக்கும்  போனஸ்,  சம்பள  நிறுத்தம் வருமா வராதா ?  இந்தக் கொடுமை எல்லாம் எதிர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறதா இல்லையா ? இதனை எதிர்க்க இந்திய தேசமெங்கும்  அனைத்து பகுதி ஊழியர்களும் அணி திரளும் போது 
நாம் மட்டும் ஒதுங்கிக் கொள்ளலாம் என்று சிலர் பிரச்சாரம் செய்வது   கோழைத்தனமா ?  குழு மனப்பான்மையா ?

பொது நன்மை தேவையா ?  தனி மனிதர்களின் விருப்பு வெறுப்பு  தேவையா ? சிந்திக்க வேண்டுகிறோம் .  இன்று 10 கோடி பேருடன் இணைந்து  போராட வில்லையானால் , நாளை   தனியே போராடி மட்டும்  தலைகீழாக  மத்திய அரசின் கொள்கை முடிவுகளை புரட்டிப் போட்டுவிட முடியுமா ?  ஒவ்வொரு துறையிலும் ஊழியர்கள் பாதிக்கப் படும் போது , ஆங்காங்கே போராடி  தடுக்க முடியாத போது , தற்போது  அனைத்து பகுதி ஊழியர்களும் ஒன்று  திரண்டுள்ளோம் !

இன்றில்லையேல்  என்றும் இல்லை ! 
களம் இறங்கிப் போராடுவோம் !
போராட்டத்தை முழு வெற்றியாக்குவோம் !

மாநிலச் சங்க நிர்வாகிகள் ஒவ்வொருவரும்  அந்தந்தப் பகுதி கோட்ட/ கிளைச்செயலருடன்  தொடர்பு கொண்டு  வேலை நிறுத்தத்தை தீவிரப்படுத்திட வேண்டுகிறோம் . 

மாநிலச் சங்க நிர்வாகிகள் ,  இன்று மாலை  தல மட்டத்தில் எவ்வளவு தீவிரமாக போராட்டக் களம் அமைத்துள்ளார்கள் என்பதை  மாநிலச் செயலருக்கு தெரிவிக்க வேண்டுகிறோம். 

போராட்ட வாழ்த்துக்களுடன் 

J.R. ,  மாநிலச் செயலர்,  அஞ்சல் மூன்று 

Monday, February 18, 2013DECLARATION

DEAR COMRADES,
 THE  POSTMASTERS  AND TREASURERS ARE REQUESTED TO  SEND DECLARATION ABOUT THEIR PARTICIPATION IN STRIKE . PLEASE INTIMATE OVER PHONE TO THE O/o SPOs TIRUPUR ( PHONE NUMBERS 0421-2206900, 2206800, 2206700 OR 2239785).

                  DECLARATION  

       I------------------ (Name, designation,office) decide to PARTICIPATE in the
 proposed two days strike on 20/2/13 and 21/2/13 as per my trade union ( NFPE) call.

----------------------------------   SIGNATURE 
PLACE
DATE 


ALL OUR COMRADES ARE REQUESTED  TO INTIMATE TO ALL SPMs and TREASURERS
சேலம் மேற்கு கோட்ட மாநாடு  

சேலம் மேற்கு கோட்ட 22 வது மாநாடு 17.02.2013 அன்று சிறப்பாக நடைபெற்றது .
தோழர் C .சஞ்சீவி தலைமையிலான அணியினர் வெற்றி பெற்று 

மீண்டும்  பொறுப்புகளை  ஏற்றுகொண்டனர் . மாநாட்டில் 

மாநில செயலர் தோழர் JR ,கோவை மண்டல செயலர் தோழர் NS ,

கோவை கோட்ட செயலர்  தோழர்  காந்தி ,நெல்லை கோட்ட செயலர் தோழர் 

SK .ஜேக்கப்ராஜ் ,கிருஷ்ணகிரி கோட்ட செயலர் தோழர் ச.செலவம்,மாநில 

உதவி தலைவர் &  Divisional Secretary of SALEM East Dn தோழர் நேதாஜி  ,ஆகியோர் கலந்து கொண்டனர் ,மாநாட்டில் 

முன்னாள் மாநில தலைவர் தோழர் செம்பான்  அவர்களுக்கு  பாராட்டு விழாவும் சிறப்பாக நடைபெற்றது . 

TIRUPUR DIVISIONAL UNION CONGRATULATES  Com. SANJEEVI AND HIS TEAM.
                                                                         

Friday, February 15, 2013

உரிமைக்கான போராட்டம்

அன்பார்ந்த தோழர்களே ,
நமது திருப்பூர் ,மேட்டுபாளையம் மற்றும் தாராபுரம் பகுதிகளில் உள்ள அனைத்து தோழர்களுக்கும் கீழே உள்ள கூட்டுச் சுற்றறிக்கை ஏற்கனேவே அனுப்பப்பட்டுள்ளது .கிடைக்காத தோழர்கள் பார்த்துக்கொள்ளவும் . அனைத்து  அஞ்சல் மூன்று ,நான்கு மற்றும் GDS  தோழர்களும் முடிந்தவரை அவரவர் சார்ந்த பகுதிகளில் 20 , 21/2/2013 இருநாட்கள்  வேலைநிறுத்தத்தை சக தோழர்களிடம்  விளக்கிட வேண்டுகிறோம் .

போராட்டம் நாம் விரும்பி அழைப்பதல்ல . நம் மீது  திணிக்கப்படும்போது வீரத்துடன் 
எதிர்கொள்வது . போராடாமல் ஒரு அடிகூட முன்னேற்றமில்லை என்பதுதான் வரலாறு .
போராடும் களத்தில் NFPE முன்னணியில் இருக்கும் .பின்னால் வருகிற தோழர்கள் நம்முடன் தொடர்கிறார்களா என்பதை திரும்பிப் பார்க்காமல் முன்னேறிச்செல்வது தான் நமது பாரம்பரியம் .

போராட்டங்கள் இல்லாமல் யாராட்டமும் செல்லாது . உரிமைக்கான போராட்டம் தான் 
சரியான தேசபக்தி . போராடுவோம் . நாட்டைக் காப்போம் .

தோழையுடன் 
P 3, P 4 ,GDS  NFPE   திருப்பூர் கோட்டம் 

ALL COMRADES ARE REQUESTED TO INTIMATE OTHERS TO SEE OUR WEBSITE FREQUENTLY.
Monday, February 11, 2013

Friday, February 8, 2013

தமிழக அஞ்சல் கைப்பந்து அணி


                          தமிழக அஞ்சல் கைப்பந்து அணி 


Monday, February 4, 2013

அகில இந்திய அஞ்சல்துறை கைப்பந்துப் போட்டி

அகில இந்திய  அஞ்சல்துறை  கைப்பந்துப் போட்டி

கொ ல்கத்தாவில்  நடைபெற்ற  அகில இந்திய  அஞ்சல்துறை  கைப்பந்துப் போட்டியில் தமிழக அணி  மூன்றாமிடம்  பெற்று  நமக்கு பெருமை சேர்த்துள்ளது .

பங்கேற்ற வீரர்கள் 


1. கிருஷ்ணமூர்த்தி (திருப்பூர் ) 
2.அருள் சர்மா (ஈரோடு ) ( captain )
3. சபரிநாதன்  (PSD  Coimbatore )
4.ராஜ்குமார்  ( CBE RMS )
5.யுவராஜ் ( CBE RMS )
6.அருண்குமார்  (தர்மபுரி )
7. ஹேமகுமார் ( திருப்பத்தூர் )
8. பார்த்திபன் ( திருநெல்வேலி )
9. சந்திரசேகரன் ( கும்பகோணம் )
10.கண்ணன் ( நாகர்கோயில் )
11.முருகன் ( நீலகிரி )
12. சதீஷ் ( CBE RMS )

MANAGER :  JAYACHANDRAN  ERODE  HO 
COACH   :  GIRIBABU  AIRPORT  STG 

அனைத்து  வீரர்களையும் மனமாறப் பாராட்டுகிறோம் .