Monday, November 30, 2015

பணி ஓய்வு பிரிவு உபச்சார பாராட்டு விழா

 திருப்பூர் தலைமை அஞ்சலகத்தில்  உதவி போஸ்ட்மாஸ்டராக   பணியாற்றிய  தோழியர் P.பாகீரதியம்மாள்  அவர்கள் 30.11.2015 அன்று 
பணி ஓய்வு பெற்றார்கள்அவர்களது பணி  ஓய்வு  பிரிவு உபச்சார  விழா 
திருப்பூர் தலைமை அஞ்சலகத்தில் 30.11.2015 அன்று தலைமை அஞ்சல் 
அதிகாரி தோழர் PK.ராமசாமி அவர்கள் தலைமையில் சிறப்புடன்  
நடைபெற்றதுதோழியரின் ஓய்வு  கால  வாழ்க்கை சிறப்புடன் அமைய 
வாழ்த்துக்கள் .        


பணி  ஓய்வு  வாழ்த்துக்கள்


               நமது திருப்பூர் தலைமை அஞ்சலகத்தில் உதவி அஞ்சல் அதிகாரியாக பணியாற்றி வரும் திருமதி P.பாகீரதியம்மாள்  அவர்கள்  வயது மூப்பின் அடிப்படையில் இன்று பணி ஓய்வு  பெறுகிறார்கள். அவர்களது பணி ஓய்வு வாழ்க்கை இனிமையாக அமைந்திட நமது நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்

Saturday, November 28, 2015

தேவை - ஒரு ஒன்றுபட்ட கால வரையற்ற வேலைநிறுத்தம்

மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் செயற்குழு கூட்டம் 27.11.2015 அன்று டெல்லியில்  நடைபெற்றது .  ஏழாவது ஊதியக்குழுவின் சிபாரிசுகளின் மீது விரிவான விவாதம் நடத்தி கீழ்க்கண்ட முடிவுகளை எடுத்துள்ளது.

1.  ஏழாவது ஊதியக்குழுவின் பல சிபாரிசுகள் பிற்போக்கானது.  அவை அரசினால் அமுலாக்கப்படுவதற்கு முன்பாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.  குறிப்பாக மிகவும் குறைத்தும் தவறாகவும்   நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்த பட்ச ஊதியமும் சம்பள நிர்ணய பார்முலாவும் மாற்றப்படவேண்டும் .மேலும் பல்வேறு அலவன்சுகளை ரத்து செய்ய வகை செய்யும் சிபாரிசுகள்   நிராகரிக்கப்படவேண்டும்.

2.தேசிய கூட்டு நடவடிக்கை குழு (NJCA ) குடையின் கீழ்  இரயில்வே , ராணுவம் மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனம் இணைந்து நடத்தும் ஒன்று பட்ட போராட்டம் ஒன்றே ஏழாவது ஊதியக்குழுவின் மோசமான பரிந்துரைகளை மாற்ற அல்லது நிராகரிக்க வேண்டிய கட்டாயத்தை மத்திய அரசுக்கு ஏற்படுத்தும் என சம்மேளனம் உறுதியாக கருதுகிறது .

3. அத்தகைய ஒன்று பட்ட போராட்டம் என்பது, அரசு சம்பள கமிசனின் சிபாரிசுகளை  அமுலாக்குவதில் விரைவாக இருப்பதால் , குறிப்பிட்ட கால  கெடுவுக்குள் அறிவிக்கப்படும் கால வரையற்ற வேலை நிறுத்தமாக
இருக்கவேண்டும் என  தீர்மானிக்கிறது . அதற்கு முன்பாக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவதுடன் ஊழியர்கள் மத்தியில் விரிவான பிரச்சாரம் செய்து  அவர்களை அணி திரட்டவேண்டும் .

4. NJCA  கோரிக்கை சாசனத்தில் GDS கோரிக்கைகளை சேர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறது .அனைத்து காலியிடங்களையும்  நிரப்பிடவேண்டும் என்ற கோரிக்கையும் இடம்பெற வேண்டும் என தீர்மானிக்கிறது .

5. ஒருவேளை, NJCA  இன் கீழ் எதிர்பார்க்கும் இயக்கங்கள் சாத்தியமாகாமல் போகுமானால் மத்திய அரசு  ஊழியர்கள் மகா சம்மேளன செயற்குழு கூடி தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது

Friday, November 27, 2015

டிசம்பர் 1 & 2 வேலை நிறுத்தம் தள்ளிவைப்பு .


டிசம்பர் 1 & 2 வேலை நிறுத்தம் தள்ளிவைப்பு .
அன்புள்ள தோழர்களே !
26.11.2015 அன்று டெல்லி யில் கூடிய நமது சம்மேளன செகட்ரியேட் கூட்டம், ஏழாவது சம்பள கமிஷன் தனது அறிக்கையை அரசிடம் கொடுத்துவிட்ட சூழல்,  மற்றும் GDS  ஊழியர்யளுக்கென  ஓய்வு  பெற்ற அதிகாரியின் தலைமையில் ஒரு கமிட்டி  அமைக்கப்பட்ட பின்பு  உள்ள சூழலை ஆய்வு செய்தது
மேலும் இந்த புதிய சூழலில் GDS  ஊழியர்களின்  சம்பள ஆய்வினை ஏழாவது ஊதிய குழுவிற்கு உட்படுத்த வேண்டும் என்பது உட்பட ,அவர்களின் நியாயமான கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக NFPE  மற்றும் AIPEU GDS (NFPE ) டிசம்பர் 1 & 2 தேதிகளில் விடுத்துள்ள  வேலை நிறுத்த அறைகூவல் குறித்தும் பரிசீலனை செய்தது .
அரசு மற்றும் அஞ்சல் வாரியத்திடம் கொடுக்கப்பட்ட கோரிக்கை சாசனத்தின் மிக முக்கியமான கோரிக்கை, GDS  ஊழியர்களின்  சம்பள ஆய்வினை ஏழாவது ஊதிய குழுவிற்கு உட்படுத்த வேண்டும் என்பது தான் . இந்த  கோரிக்கையை  வென்றெடுப்பதற்காக  தர்ணா ,உண்ணாவிரதம் , GDS ஊழியர்களின் பாராளுமன்ற பேரணி, NFPE  & FNPO இணைந்த JCA சார்பாக பாராளுமன்ற பேரணி, 12.12.2012 ஒரு நாள் வேலை நிறுத்தம், 12.02.2014 & 13.02.2014 இரண்டு நாள் வேலை நிறுத்தம் என பல்வேறு இயக்கங்களை NFPE  நடத்தியுள்ளது.  நமது இத்தகைய போராட்ட இயக்கங்களினால்தான் GDS  ஊழியர்களை ஏழாவது சம்பள கமிஷன் பரிசீலனைக்குள் கொண்டு வர வேண்டும் என்ற பரிந்துரையை  தபால் வாரியம் தனது சாதகமான சிபாரிசுடன் நிதி அமைச்சகத்திற்கு அனுப்பியது ஆனால் நிதி அமைச்சகம்  மூன்று முறை நிராகரித்த பின்னணியில்தான் GDS  ஊழியர்களை ஏழாவது சம்பள கமிஷன் பரிசீலனைக்குள் கொண்டு வர அரசை வலியுறுத்தி  NFPE & AIPEU  GDS  (NFPE )  டிசம்பர்  1& 2 , 2015  இரண்டு நாட்கள்  வேலை நிறுத்தம்  செய்திட அறைகூவல் விடுத்தது .
GDS  ஊழியர்களை  ஏழாவது சம்பள கமிஷனில் சேர்ப்பதற்கு அரசு மறுத்துவிட்டபோதும்GDS  ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கி  அவர்களுக்கு விகிதாச்சார அடிபடையில் இலாகா ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து பயன்களும் வழங்கப்படவேண்டும் என்ற  அவர்களது  முக்கியமான கோரிக்கையை ஏழாவது சம்பள கமிஷன் பரிசீலித்ததுஆனால் ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான சம்பள கமிஷன்  நமது கோரிக்கையை பரிசீலித்து GDS  ஊழியர்கள் அரசு பதவியை வகித்தாலும் அவர்கள் அரசு ஊழியர்கள் அல்ல என்று திட்டவட்டமாக அறிவித்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானதுஏழாவது சம்பள கமிஷனின்  இத்தகைய கருத்துரைக்குப்பிறகு, GDS  ஊழியர்கள் ஏழாவது சம்பள கமிசனில்  சேர்க்கப்பட்டாலும்  அவர்களது கோரிக்கையில்   நல்ல தீர்வு  கிடைத்திடாது .  எனவே அரசின் முன்பு நாம் வைக்கும் கோரிக்கையினை மாற்றிட வேண்டிய நிர்ப் பந்தத்தை இது நமக்கு ஏற்படுத்தியுள்ளது.
NFPE  ஆரம்பம் முதலே அதிகாரி கமிட்டி நியமனத்தை எதிர்த்து வந்தது . NFPE  & AIPEU GDS  (NFPE) , அதிகாரி கமிட்டி நியமனத்தை தவிர்ப்பதற்கும் , GDS  ஊழியர்களை ஏழாவது ஊதிய குழுவில் சேர்ப்பதற்கும்  நமது இலாகாவை வலியுறுத்தி வந்ததுஆனால் NDA  அரசு நமது கோரிக்கையை  நிராகரித்து  ஓய்வு  பெற்ற அதிகாரி தலைமயில் ஒரு கமிட்டியை தன்னிச்சையாக நியமித்து மூன்று லட்சம் GDS  ஊழியர்களை ஏமாற்றிவிட்டது . ஓய்வு  பெற்ற அதிகாரிகள் கமிட்டி  GDS  ஊழியர்களுக்கு ஒருபோதும் நீதி வழங்கியது கிடையாது என்பது  நமது கடந்த கால அனுபவமாகும்.
அரசு ஊழியர் அந்தஸ்து என்ற நமது கோரிக்கையை ஏழாவது சம்பள கமிசன் நிராகரித்து,   அரசும் GDS  ஊழியர்களுக்கான அதிகாரி கமிட்டி யை  நியமித்துள்ள பின்னணியில் , ஏழாவது  சம்பள கமிசனின் பரிசீலனைக்கு GDS  பிரச்னையை அனுப்பிட கோரி வேலை நிறுத்தம் செய்வது பொருத்தமாகாது  என்று நமது சம்மேளன செகட்ரியேட் கருதுகிறது . தற்பொழுது NDA  அரசு GDS  ஊழியர்களை அரசு ஊழியராக கருதி நிரந்தரமாக்கும் ஒரு கொள்கை முடிவை  எடுத்தால்தான் GDS  ஊழியர்களுக்கு நீதி கிடைக்கும்அத்தகைய கொள்கை முடிவை அரசு தானாக எடுத்திடாதுஅரசின் கொள்கையில் அத்தகைய மாற்றத்தினை ஏற்படுத்திட மிகப்பெரிய அளவில் GDS  உள்ளிட்ட தபால் ஊழியர்களை திரட்டி , அனைத்து  மத்திய அரசு ஊழியர்களின் ஆதரவினை மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் மூலமும்  மற்றும் JCM  தேசிய குழுவில் உள்ள ஊழியர் அமைப்புகளின் ஆதரவோடு  வேலை நிறுத்தம் செய்வது அவசியம். எனவே , டிசம்பர் 1&2 தேதிகளில் நடைபெற இருந்த வேலைநிறுத்தத்தை தள்ளி வைப்பது என சம்மேளன செகட்ரியேட் ஏக மனதாக முடிவு செய்துள்ளது .
அரசிற்கு நமது வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதற்கும் GDS  ஊழியர்களை இலாகா  ஊழியர் ஆக்கிட வலியுறுத்தியும் NFPE சம்மேளன மாபொதுசெயலர் மற்றும் சம்மேளனத்தைச்  சார்ந்த அனைத்து பொதுச்செயலர்கள்  டிசம்பர் 1&2 தேதிகளில் டெல்லியில் அஞ்சல் இயக்குனரகம் முன்பு இரண்டு நாள் உண்ணாவிரதம் இருப்பதென  முடிவு செய்யப்பட்டுள்ளது .கோட்ட , மண்டல  மற்றும் மாநில அளவில் 11.12.2015 அன்று நாடு தழுவிய உண்ணா விரதம்  இருந்திட அறைகூவல் விடுத்துள்ளது .


Saturday, November 21, 2015

கறுப்பு தினம் - 27.11.2015

மத்திய அரசு ஊழியர்களின் தேசிய கூட்டு நடவடிக்கைகுழு (NJCA) கூட்டம்

             நாம் மிகவும் எதிர்பார்த்த ஏழாவது  சம்பள கமிஷன்  தனது சிபாரிசினை வழங்கிவிட்டது. பொது மக்கள் மத்தியில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.5% சம்பள உயர்வு என தவறான பிரச்சாரம் செய்யப்படுகிறது.  ஆனால் உண்மையில் நமக்கு 14.29% உயர்வே வழங்கபட்டுள்ளது.   வெறும் இரண்டு பஞ்சப்படி உயர்வு வழங்கினால் வரக்கூடிய உயர்வே நமக்கு சிபாரிசுசெய்யப்பட்டுள்ளது . 20.11.2015 அன்று நடைபெற்ற ரயில்வே , பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் கூட்டு அமைப்பான  NJCA கூட்டத்தில் , ஏழாவது  சம்பள கமிசனின் பிற்போக்கான , மோசமான சிபாரிசுகளுக்கு எதிராக போராடுவது என ஏக மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது .

சம்பள உயர்வல்ல ! சம்பள குறைப்பு !

குறைந்த பட்ச ஊதியம் Rs 26000/- என்ற ஊழியர் தரப்பு கோரிக்கையை, ஏழாவது ஊதிய குழு முற்றிலுமாக நிராகரித்து விட்டு சர்ச்சைக்குரிய  விதத்தில் Rs18000/- என நிர்ணயித்துள்ளது . குறைந்த பட்ச சம்பளம் நிர்ணயம் செய்வதற்கான பார்முலா வினை சிதைத்து  தன்னிச்சையான முறையில் நிர்ணயம் செய்துள்ளது.சிபாரிசு செய்யப்பட்டுள்ள குறைந்த பட்ச ஊதியம் வெறும் Rs .2250/- உயர்வினையே தந்துள்ளது.(சிபாரிசு செய்யப்பட்டுள்ள குறைந்த பட்ச ஊதியம் Rs 18000 - தற்போதைய குறைந்த பட்ச ஊதியம்(Rs 7000+125% DA)  Rs 15750 ).
இந்த  Rs .2250/- உயர்விலும் ஏழாவது சம்பள கமிசன் சிபாரிசின் படி CGEGIS Rs 1500/- மற்றும் புதிய ஓய்வு திட்டத்திற்கான 10% தொகையில் உயர்வு Rs 1100/- என இரண்டையும் கழித்தால் சம்பள குறைப்பு Rs 350/- என்பதுதான் யதார்த்தம்.


ஒரு கண்ணில் சுண்ணாம்பு ! ஒரு கண்ணில் வெண்ணை!

அடிமட்ட ஊழியர்களை வஞ்சித்துள்ள சம்பள கமிசன் ,துறை செயலர் அளவில் உள்ள அதிகாரிகளுக்கு Rs 225000/- மற்றும்   Rs 250000/-  என வழங்கியுள்ளதுகுறைந்த பட்ச  மற்றும் உயர்ந்த பட்ச ஊதியத்திற்கிடையிலான விகித்தாசாரம் 1:8 என்ற ஊழியர் தரப்பு கோரிக்கையை நிராகரித்து அது 1:13.8 என்ற அளவில் சிபாரிசு செய்துள்ளது. இருக்கின்ற சம்பள விகிதங்களின் எண்ணிக்கையை குறைத்து முறைபடுத்த வேண்டும் என்ற நமது கோரிக்கையையும் நிராகரித்து 18 சம்பள விகிதங்களை  சிபாரிசு செய்துள்ளது.

இருப்பதையும் பறித்து கொண்டால் ??

*வீட்டு வாடகைப்படி தற்போதுள்ள 30%,20%,10% என்பதில் இருந்து 24%,16%,8% என குறைக்கப்பட்டுள்ளது .

 *Small  Family  Allowance , Cash  handling  allowance , Treasury  allowance , SB Allowance  என பல Allowanceகளை  ரத்து செய்ய சிபாரிசு செய்துள்ளது.

*Festival  Advance ,Cycle/Motorcycle  Advance என பல Advanceகளை  ரத்து செய்ய சிபாரிசு செய்துள்ளது.

*தற்போதுள்ள  MACP இல் உள்ள குறைபாடுகளை நீக்கிடாமல்  MACP வழங்குவதற்கு கடுமையான நிபந்தனைகளை - தேர்வு உட்பட - உருவாக்கியுள்ளது 
.
*புதிய ஓய்வு  திட்டத்திற்கு எதிராக எந்த ஒரு சிபாரிசினையும் வழங்கிடவில்லை.

*Child  Care  Leave  இல் முதல் 365 நாட்களுக்கு முழு சம்பளம் என்றும் அடுத்த 365 நாட்களுக்கு 80% சம்பளம் எனவும் ஊதிய குறைப்பிற்கு  சிபாரிசு செய்துள்ளது.

*PERFORMANCE RELATED  PAY  என்ற பெயரில் புதிய ஆபத்து

*இருபது வருட சேவை முடிவில் EFFICEINCY  என்ற போர்வையில் ஊழியர்களை வேலையை விட்டு , வீட்டுக்கு போகச்சொல்லும்  ஆபத்து 


கறுப்பு தினம்

சுருக்கமாக சொல்லுவதென்றால் ஏழாவது ஊதிய குழுவின் சிபாரிசு மத்திய அரசு ஊழியர்களுக்கு வெறுப்பையும் ,விரக்தியையும், ஏமாற்றத்தையும் தந்துள்ளது. எனவே NJCA  27.11.2015 அன்று அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் கலந்து கொள்ளும் வலுவான ஆர்ப்பாட்டத்தினை இந்தியா  முழுவதும் நடத்திட அறைகூவல் விடுத்துள்ளதுஅன்று கறுப்பு பேட்ச் அணிந்து கறுப்பு தினம் அனுசரிக்கவும் அறைகூவல் விடுத்துள்ளது.  08.12.2015 அன்று மீண்டும் NJCA  கூடி அடுத்த கட்ட நடவைக்கை குறித்து முடிவெடுக்கும்.

ஆர்ப்பாட்டம்

நமது திருப்பூர் தலைமை அஞ்சலகம் முன்பு 27.11.2015 அன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெறும்அனைவரும் பெருந்திரளாக கலந்து கோரிக்கையை வென்றெடுக்க அணி திரள அறைகூவி அழைக்கின்றோம்

இது வெறும்  ஆர்ப்பாட்டம்  அல்ல  !                                உங்களின்  உணர்வு !
இது  வெறும்  போராட்டமல்ல !                                           உங்களின்  வாழ்வு !
பரவட்டும் !                                                                           போராட்ட  தீ  பரவட்டும் !
முழங்கட்டும்  !                                               உரிமை  முழக்கம்  முழங்கட்டும் !
எட்டட்டும்  46 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் உரிமைக் குரல் மத்திய  அரசின் செவிகளுக்கு எட்டட்டும் !