Wednesday, February 29, 2012

HISTORIC FEB 28TH GENERAL STRIKE - A GRAND SUCCESS


HISTORIC FEB 28TH GENERAL STRIKE - A GRAND SUCCESS

            பிப்ரவரி 28  பொது வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றி !            

இந்திய நாட்டின் மிகப் பெரும் தொழிற்  சங்கங்களான 

ஆளும் இந்திய தேசிய காங்கிரசின்                                             .......  INTUC
எதிர்க் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின்                       .......  BMS
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்                                                        ....... AITUC
மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  கட்சியின்                                             ....... CITU 
மற்றும் AICCTU, HMS, UTUC,  TUCC, SEWA,  ஆளும் மத்திய அரசில்  அங்கம் வகிக்கும்  
தி. மு. க. வின் LPF உள்ளிட்ட 11  தொழிற் சங்க மையங்கள் அறிவித்த வேலை நிறுத்தம்.

ஆளும் மத்திய அரசின் தொழிலாளர்  விரோத ,  மக்கள்  விரோத  முதலாளித்துவ  கொள்கைகளுக்கு எதிரான  வேலை நிறுத்தம்.  

பங்கு மார்க்கெட்டில் சூதாடும் புதிய பென்ஷன் திட்டத்தை எதிர்த்து 
வேலை நிறுத்தம் .

தொழிலாளர் நலச் சட்டங்கள் பறிக்கப் பட்டு, கால  அளவின்றி
  தொழிலாளர் வேலை   வாங்கப் படுவதை எதிர்த்து வேலைநிறுத்தம். 

அரசு மற்றும் பொது துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் 
நாசகார கொள்கையை எதிர்த்து வேலை நிறுத்தம்.
   
இதுவரை இந்திய தொழிற் சங்க வரலாற்றில் இப்படி ஒரு ஒற்றுமை 
தொழிற் சங்கங்களிடையே கண்டதுமில்லை . கேட்டதுமில்லை . 

ஏனெனில் தொழிலாளிக்கு இது வாழ்வா  சாவா  பிரச்சினை. 
அதனால் தான் ஆளும் கட்சி தொழிற் சங்கம் கூட இந்த 
வேலை நிறுத்த  அறிவிப்பு   வெளியிட்டது. 

இதை கம்யூனிஸ்டுகளின் போராட்டம் என்று கதை விட்ட 
"கை நாட்டு" கூட அஞ்சலில் உண்டு. அப்படியானால் INTUC  
கூட   CITU ஆகிவிடுமா ? 

கட்டபொம்மன் பிறந்த மண்ணில் தான் எட்டப்பனும் 
பிறந்தான் என்பது வரலாறு. எட்டப்பர்கள் நம்மிடையேயும். 

இதையும் மீறி நம் ஒன்று பட்ட சக்திக்கு மாபெரும் வெற்றி !
தமிழகமெங்கும் அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு, GDS 
கலந்துகொண்ட வேலை நிறுத்தம் அஞ்சலில்  80%.
RMS  இல் நூற்றுக்கு நூறு  சதம். 

வேலை நிறுத்தம் வெற்றி பெற இரவு பகல் பாராது 
பாடுபட்ட போராளிகளுக்கு  மாநிலச் சங்கத்தின் சிரம் 
தாழ்ந்த வீர வணக்கம்!. 
முழு வீச்சில் வெற்றிக் களம் அமைத்த கோட்ட/ கிளைச் 
செயலர்களுக்கு, மாநிலச் சங்க  நிர்வாகிகளுக்கு 
நம் நெஞ்சார்ந்த நன்றி !.     

தொழிலாளிக்கு தொழிற் சங்கம் கேடயம் . 
தொழிற் சங்கத்திற்கு போராட்டம் ஆயுதம் . 
அதிகாரிக்கு அரசாங்கம் கேடயம் . 
அரசாங்கத்திற்கு அடக்குமுறை ஆயுதம்.  

அடக்குமுறை வேரறுப்போம் ! 
தொழிலாளி உரிமை காப்போம்!

வீர வாழ்த்துக்களுடன் 
J.R. மாநிலச் செயலர்.    

Tuesday, February 28, 2012


வீரவாழ்த்து

திருப்பூர் அஞ்சல் கோட்டத்தில் P3 ,P4 தோழர்கள் சுமார் 80 விழுக்காட்டிற்கும் மேல் பங்கு பெற்ற 28 /2 /2012  வேலைநிறுத்த அறப்போர் மிகப்பெரும் வெற்றி அடைந்துள்ளது . GDS தோழர்களும் பெருமளவில் பங்கேற்றனர் .  அஞ்சல் மூன்று ,அஞ்சல் நான்கு கோட்டச் சங்கங்கள் ( திருப்பூர் ,மேட்டுபாளையம் , தாராபுரம் பகுதி உள்ளிட்ட ) வீரமறவர்க்கும், வீராங்கனைகளுக்கும் நெஞ்சார்ந்த வீரவாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது .


                    தோழமையுடன் 
 K.S. RAVINDRAN PRESIDENT NFPE P3 TIRUPUR
 N.SUBRAMANIAN  DIVISIONAL SECRETARY NFPE P3 TIRUPUR
 N.M. MANICKAM  NFPE P3 METTUPALAYAM
 K.SELVARAJ  SECRETARY NFPE P3 METTUPALAYAM
 AMMASAIAPPAN PRESIDENT NFPE P4 TIRUPUR

 V.DHARMALINGAM DIVISIONAL SECRETARY NFPE P4 TIRUPUR
 V.MURUGESAN  SECRETARY NFPE P3 METTUPALAYAM

வீரவாழ்த்து

திருப்பூர் அஞ்சல் கோட்டத்தில் P3 ,P4 தோழர்கள் சுமார் 80 விழுக்காட்டிற்கும் மேல் பங்கு பெற்ற 28 /2 /2012 வேலைநிறுத்த அறப்போர் மிகப்பெரும் வெற்றி அடைந்துள்ளது . GDS தோழர்களும் பெருமளவில் பங்கேற்றனர் .  அஞ்சல் மூன்று ,அஞ்சல் நான்கு கோட்டச் சங்கங்கள் ( திருப்பூர் ,மேட்டுபாளையம் , தாராபுரம் பகுதி உள்ளிட்ட ) வீரமறவர்க்கும், வீராங்கனைகளுக்கும் நெஞ்சார்ந்த வீரவாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது .


                    தோழமையுடன் 
 K.S. RAVINDRAN PRESIDENT NFPE P3 TIRUPUR
 N.SUBRAMANIAN  DIVISIONAL SECRETARY NFPE P3 TIRUPUR
 N.M. MANICKAM  NFPE P3 METTUPALAYAM
 K.SELVARAJ  SECRETARY NFPE P3 METTUPALAYAM
 AMMASAIAPPAN PRESIDENT NFPE P4 TIRUPUR
 V.DHARMALINGAM DIVISIONAL SECRETARY NFPE P4 TIRUPUR
 V.MURUGESAN  SECRETARY NFPE P3 METTUPALAYAM



வீரவாழ்த்து 



Tuesday, February 21, 2012

TARAPADA MUKHERJEE--- 
Father of  P&T Trade union Movement


    His Lahore speech on 9/10/1921.........


" Organise if you want real living wage;
   Organise if you want to have your working 
   hours reduced;
   Organise if you desire better treatment from
   your superior officer;
  Organise if you want that authorities should 
  consult and consider your opinion on all 
  administrative measures affecting you"


இன்றளவும் பொருந்தும் கருத்துரைகள் .


பாபு தாரா பா தா , ஹென்றி பார்டன் ,தாதா கோஷ் 
KG . போஸ் இவர்களைத்தொடர்ந்து
 இன்றைய தினம்   KR ,கிருஷ்ணன் ,KVS காட்டுகின்ற சரியான பாதைதான் நமது 
திசைவழி . சுயநலம் பெரிதா , சங்கம் பெரிதா என்ற தொடர் போரில் சங்கமே பெரிது என்பதைத் தொடர்ந்து வென்றெடுத்த நமது சிறப்பான தலைவர்களின் சீரிய வழியில் தொடர்ந்து பயணம் செய்வோம் .


வெல்லட்டும் 28 /2/2012 போராட்டம் ;
 போராடத்தான் துணிவும்
 தைரியமும் வேண்டும் ;
சாக்குப்போக்கு காரணங்கள் கூற 
கோழைத்தன மான நாக்கும் சுயநலமும் போதும் .
 சங்கம் சொல்வதை ஏற்று நடப்பது
 உறுப்பினர் கடமை ;
போரிடும் தருணம் ,சீறிடும் நேரம் பதுங்கி மறைவது மடமை ;
வீரனுக்கு வருவது ஒருநாள் மரணம் ;
 கோழைகள் வாழ்வில் தினம் தினம் மரணம் .


 நாமெல்லாம் வீரர்கள்தான் என்பதை நிரூபிப்போம் 28 /2/2012 அன்று .
 இந்தியத் திருநாட்டின் 10 கோடி உழைப்பாளிகள் பங்குபெறும் போராட்டம் .அனைத்துக்கட்சிகளின் தொழிற்சங்கமும் ஒன்றிணைந்த அறப்போராட்டம் வெல்லட்டும்; வெற்றியைக் காலம் சொல்லட்டும்


=====   திருப்பூர் அஞ்சல் மூன்று ,நான்கு



வேலைநிறுத்தம்

வருகிற 28 /2 /2012 அன்று நடைபெறவுள்ள வேலைநிறுத்தம் நமது NFPE  மட்டுமன்றி
 FNPO ,GDS சங்கங்களும் பங்குபெற முடிவெடுத்துள்ள நிலையில் தல மட்டத்தில் அத்துணை தோழர்களையும் அரவணைத்து போராட்டத்தை வென்றெடுப்பது நமது கடமை யாகிறது .போராடும் வலிமையையும் துணிவும் ஒருங்கே கொண்ட நாம் பொறுமையுடன் இருப்பதோடு , விலகி ஓட காரணம்
 தேடும் வாய்ச்சொல் வீரர்களையும் ஒருங்கிணைத்து , அவர்களுடைய நலனுக்காகவும் போராடுவோம். 


---  திருப்பூர் அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கின் 
           வீரமிகு தோழர்களும் தோழியர்களும் 


Thursday, February 16, 2012

Our General Secretary’s Desk


General Secretary’s Desk

One Day Strike on 28.02.2012
The call for Nationwide industrial action on 28.02.2012 organised by all the 15 Central Trade Unions including INTUC, AITUC, CITU, BMS, HMS etc. is the last option since all their avenues of protest like dharnas, demonstrations, rallies and finally the Jail Bharo Programmes besides raising the issues relating to labour and common people at various forums yielded no results. It is rather found that labour was becoming an unwanted agenda for the Governments.

The Postal JCA after long discussions called upon all the Postal workers to join the strike and save the nation and protect the labour from neo economic policies adopted at the centre. The strike notice was served to the department on 10.02.2012.

All Branch/Divisional/Circle Secretaries are requested to organize the workers by holding meetings at various work spots and ensure 100% participation in the ensuing 28.02.2012 strike.

Puri Workshop – An Historic Success
The workshop organized by the CHQ at Puri from 04.02.2012 to 05.02.2012 ended with resounding success. The aim for which it was convened has been fulfilled and in the examination held among the participants, many secured very good percentage which exhibits the success of the workshop. Full details of the workshop is being published in the Website/Bhartiya Post. The valuated answer sheet has been despatched to all the participants respectively.

Let us convene our next workshop shortly. The willing circle to host the next workshop may please be come forward immediately in order to organize the next workshop either in the month of July or August 2012.

Central Working Committee Meeting – Patna
It is decided to hold the next Central Working Committee Meeting of our union at Patna from 10.04.2012 to 11.04.2012, All CHQ office bearers are requested to book their tickets well in advance. Formal notice will be despatched to them after the finalization of venue and agenda.

JCM Departmental Council
JCM Departmental Council was held on 10.02.2012 and 49 new subjects were discussed. Earlier on 02.02.2012, the standing committee was held to discuss about the pending issues placed in the JCM meeting. The minutes of both the meetings will be published after its receipt. The demands already placed for discussions in the meeting but discussed during strike charters were not discussed again. The Secretary assured that all the items discussed and decided earlier will be finalized at the earliest possible.

System Administrators case – Separate cadre
The case was again discussed in the standing committee meeting of the Departmental Council held on 02.02.2012. It was informed that further action on this case will be taken after finalization of the proposal of the cadre Review committee. However the Member (Personnel) reiterated that creation of a separate cadre may not be feasible. She explained that there will be a limited chance for ‘System Administrators’ further promotion in a separate cadre and further DOP&T may insist on direct recruitment only. The chance for absorption of the existing system administrators will also be remote as separate qualification etc will be fixed for the post. In short the Postal Board is not in favour of creation of separate cadre. Our demand for separate cadre is also not rejected. A final decision will be taken only after the finalisation of the proposals by the Cadre review committee in which we are demanding the formation of System Assistant Posts with further promotional avenues.

GDS Protection of TRCA
In order to implement the assurances of Hon’ble State Minister of communication to Staff side on 20.01.2012, Postal Board constituted a committee of officers to examine the GDS cases including cash handling norms remittances from BO to AO etc for brought under norms, protection of TRCA etc under the chairmanship of Sri. V. P. Singh DDG (Establishment). The Committee will submit its report within a month.

Committee on Casual labourers problems
Member (Personnel) informed that the committed on Casual Labourers problems headed by Assam Chief PMG has submitted its report and it is under examination by the Directorate. The staff side has also submitted its suggestions on casual labourers. It was assured that a decision will be arrived within one month.

Clear Quota, Bhartiya Post Dues & Publications
Many divisions are still keeping dues and not clearing the full Quota, Dues on journals and publications. The two financial years for determination of delegates will end on 31.03.2012. All Branch/Divisional Secretaries are requested to clear the Quota, and all dues forthwith without  inviting reminders.

Hand Book 2012
Many divisions/branches have not indented Hand Book 2012 and the CHQ has sent only one copy to them. It is needless to say that it should be supplied to all new entrants as well as all office bearers atleast. Branch/Divisional Secretaries are requested to kindly make required indent immediately.

Let us meet in the next and till then with greetings,

Comradely yours,


K. V. Sridharan
General Secretary

Wednesday, February 15, 2012

BANKING ON INDIA POST


BANKING ON INDIA POST
            If India Post were to encourage the private sector to ride piggyback on its network to promote its products, its deficit might prove to be less of a burden.
          The Communications Minister, Mr Kapil Sibal, wants the Reserve Bank of India (RBI) to grant a banking license to India Post. The proposal makes eminent sense, especially at a time when financial inclusion has become a pervasive buzzword. With 1.55 lakh post offices in the country, of which 1.39 lakh are in rural areas, India Post's reach is bigger than the 75,000 branches (just 22,000 rural) of all scheduled commercial banks put together. Moreover, it is already in the business of banking in a sense: The various savings schemes operated by post office across India have outstanding balances of some Rs 600,000 crore. There is no reason for not extending this function to the next stage — channelising depositors' money for lending out to others and providing cheque facilities. The best example of why it is not an outlandish idea is provided by Japan's post office, which, as the largest holder of personal savings in the world, offers banking and life insurance services, apart from selling stamps and delivering letters. Allowing India Post to undertake regular banking functions would serve two objectives. First, it would make the institution more viable than it is at present on account of its being restricted to loss-making postal operations. Second, its unique outreach would equip it to serve social objectives.
          India Post has a clear advantage over banks as a vehicle for promoting financial inclusion. The use of mobile banking and banking correspondents, for all their undeniable promise, can hardly bridge the gap in rural outreach. Besides, the usurious excesses of micro-finance have robbed it of some of its sheen. With less than 40 per cent of the rural households covered by institutional lending, the potential of the post office to address the crisis of credit in rural India can hardly be over emphasised. Its financial inclusion potential has already come to the fore in the context of implementation of the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme, where 46.7 million accounts had been opened and wages amounting to over Rs 18,000 crore had been distributed as on October 31 last year. It is also proving useful as the nodal agency for distribution of UIDAI cards.
          While India Post runs up an annual loss of some Rs 7,000 crore, its long-term deposit bias would, however, give it a cost advantage in the lending business. It can make micro-loans and plug into the self-help group network. India Post is also serious about promoting electronic and phone banking solutions for its customers. If, apart from offering banking services, India Post were to encourage the private sector to ride piggyback on its network to promote its products, its deficit might prove to be less of a burden. In the final analysis, a postman doubling up as banker may well turn out to be the best inclusive banking solution of all.
(This article was published on February 5, 2012, The Hindu Business Line)

Wednesday, February 8, 2012

                 நமது திருப்பூர் அஞ்சல் மூன்று -கோட்டச்செயலர் தோழர் .சுப்பிரமணியன் POSTMASTER  GRADE -II  பதவி உயர்வு பெற்று , மேற்கு மண்டலத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளார் . பணியிடம் விரைவில் தெரியவரும்.

-------- கோட்டச்சங்கம் P3 திருப்பூர் 

Tuesday, February 7, 2012

" HAND BOOK -2012 "


நமது அகில இந்தியச் சங்கத்தால் தொகுத்து வெளியிடப்பட்டுள்ள
 " HAND BOOK -2012 " திருப்பூர் P3 கோட்டச்சங்கத்தால் அனைத்து  P3  உறுப்பினர்களுக்கும் வழங்கப்படவுள்ளது .

" HAND BOOK -2012 "  நமது பொதுசெயலர் KVS அவர்களின் கடும் உழைப்பில் உருவான சிறந்த புத்தகம் . 250 பக்கங்கள் கொண்ட  அதில் நமது துறையின் விதிகளும் சுற்றறிக்கை களும் நமக்கு உதவிடும் வகையிலே தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. அனைவரும் பயனுற கோட்டச்சங்கம் விழைகிறது .
தாராபுரம் , திருப்பூர் உறுப்பினர்களுக்கு கோட்டச்சங்கத்தாலும் ,
மேட்டுப்பாளையம் உறுப்பினர்களுக்கு ,மேட்டுபாளையம் 
கிளை ச்சங்கத்தாலும் வழங்கப்படும் . 

தோழமையுடன் 

N .SUBRAMANIAN  DIVISIONAL  SECRETARY  P3  திருப்பூர்  

K .SELVARAJ   BRANCH  SECRETARY P3   மேட்டுபாளையம் 
          
  


Monday, February 6, 2012

தினமணி தலையங்கம்


தினமணி பத்திரிக்கையின்  தலையங்கம் - 04.01.2012

இந்திய அஞ்சல் துறையை புதுமைப்படுத்தும் புதிய கொள்கை நிகழாண்டில் அமலுக்கு வரும் என்றும், இதன் மூலம்அஞ்சல் நிலையங்கள் வங்கிகளாக மாறும், கூரியர் நிறுவனங்கள் அஞ்சல் துறையில் பதிவுசெய்து உரிமம் பெறுவதுகட்டாயமாக்கப்படும் என்றும் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியிருக்கிறார். இவர்பொறுப்பேற்ற நேரத்திலும்கூட இதையேதான் சொன்னார். இப்போதும் சொல்கிறார்.

 அஞ்சல் நிலையங்களின் மிக முக்கியப் பணியான கடிதங்கள், பார்சல்கள் பட்டுவாடா செய்வது கூரியர் நிறுவனங்களின்வருகையால் பாதிக்கும் மேலாகக் குறைந்து மிகப்பெரும் வருவாய் இழப்பை அஞ்சல்துறை சந்தித்துக்கொண்டிருக்கிறது. பல கிளைகள் மூடப்பட்டு வருகின்றன. ஆனால் இப்போதுதான், கூரியர் நிறுவனங்கள் பதிவுசெய்தநிறுவனமாக உரிமம் பெற்றால் மட்டுமே செயல்பட முடியும் என்கிற கட்டாயத்தை உருவாக்குவது பற்றிசிந்திக்கிறார்கள்.

 கூரியர் நிறுவனங்கள் வருகையால் மிகப்பெரும் வருவாய் இழப்பைச் சந்திக்க நேர்ந்ததை உணர்ந்துகொண்ட அரசு, 2002-ம் ஆண்டிலேயே இந்திய அஞ்சல் அலுவலகம் (திருத்த) வரைவு மசோதாவை தயாரித்து மக்கள் கருத்துக்காகவெளியிட்டது. இதில் முக்கியம் தரப்பட்ட இரண்டு விஷயங்கள்: ஒன்று- கடிதம் என்பதற்கு வரையறை என்ன? இரண்டு-அஞ்சல் செய்யப்படும் பொருளைச் சேகரித்தல், கொண்டு செல்லுதல், விநியோகித்தல் ஆகிய சேவைகளைச் செய்வோர்பதிவு செய்த நிறுவனங்களாக மட்டுமே இருக்க வேண்டும்.

 இந்த வரைவு மசோதா வெளியானபோது கூரியர் நிறுவனங்கள் 2002-ம் ஆண்டிலேயே எதிர்ப்பு தெரிவித்தன. அஞ்சல்செய்யப்படும் பொருள் எடை 500 கிராமுக்கு அதிகமாக இருந்தால் மட்டுமே கூரியர் நிறுவனங்கள் அதைக் கொண்டுசெல்ல அனுமதிக்கலாம் என்கின்ற நிபந்தனை இந்த மசோதாவில் இருக்கிறது. இது கூரியர் நிறுவனங்களுக்குஎதிரானது என்று குரல் கொடுத்தார்கள். லைசன்ஸ் ராஜ் தலையெடுக்கிறது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதன்பிறகு மத்திய அரசு, இந்தச் சட்டத் திருத்தம் பற்றிப் பேசவே இல்லை. இப்போது ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்குப் பிறகு,இதே விவரத்தை மத்திய அமைச்சர் கபில் சிபல் கையில் எடுத்திருக்கிறார்.

 அஞ்சல் அலுவலக (திருத்த) சட்டம் என்பது வெறுமனே அஞ்சல் துறையின் வருவாய் இழப்பை ஈடுசெய்வதற்கானசட்டம் என்று சொல்லிவிட முடியாது. இதில் நுகர்வோர் நலனுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்ததுஎன்பதுதான் இதன் சிறப்பு.
 மீண்டும் 2006ம் ஆண்டு, இந்திய அஞ்சல் அலுவலக(திருத்த) சட்டத்திலும் இதே விஷயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.இந்த வரைவு மசோதாவில் கடிதம் என்பது என்ன என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. எடை குறித்த நிபந்தனைகள்மாறுதலுக்கு உட்பட்டாலும், கடிதம் என்றால் என்ன என்ற வரையறைதான் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

 இந்தக் கடிதங்களை, அஞ்சல் பொருள்களை சேகரிக்க, விநியோகிக்க, கொண்டு செல்ல விரும்பும் நிறுவனங்கள்அஞ்சல்துறையிடம் பதிவு செய்தால் மட்டுமே இந்த சேவைத் தொழிலில் ஈடுபட முடியும். இந்த நிறுவனங்களின்சேவைக் குறைபாடு தொடர்பாக புகார் வந்தால், அல்லது அஞ்சல்துறை கண்டறிய நேர்ந்தால் இந்த நிறுவனத்தின்பதிவை/அங்கீகாரத்தை ரத்து செய்துவிட முடியும்.

 மேலும், சேவையில் குறைபாடு இருந்தால் அஞ்சல் துறையின் நடுவர் மன்றத்தில் நுகர்வோர் முறையிட முடியும். ஒருகூரியர் நிறுவனத்தின் ஆண்டு விற்றுமுதல் ரூ.25 லட்சத்துக்கும் அதிகம் என்றால், அந்த நிறுவனத்தின் சேவையில்குறைபாடு ஏற்பட்டால் இழப்பீடு வழங்கும் வகையில், ஆண்டு விற்றுமுதலில் 10 விழுக்காட்டினை அஞ்சல்துறையிடம்முன்வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும் என்றெல்லாம் சில நல்ல நிபந்தனைகள் அந்த வரைவு மசோதாவில்இருந்தன.

 அதனை அப்போதே அமலுக்குக் கொண்டு வந்திருந்தால், இந்நேரம் அஞ்சல் துறைக்கு மிகப்பெரிய அதிகாரமும்,இவர்களைக் கட்டுப்படுத்தும் திறனும் ஏற்பட்டிருப்பதோடு, இவர்களுடன் போட்டியிட சமவாய்ப்பும் உருவாகியிருக்கும்.ஆனால் மத்திய அரசு அதைச் செய்யத் தவறிவிட்டது. இப்போது இந்தியாவில் மிகப்பெரிய தொடர் சங்கிலி அலுவலகவசதிகள் கொண்ட கூரியர் நிறுவனங்கள் சுமார் 50 உள்ளன. இந்த நிறுவனங்களுடன் சேர்ந்தும், தனித்தும் செயல்படும்நிறுவனங்கள் இந்தியாவில் சுமார் 2800 உள்ளன. இந்த ஆண்டும்கூட இந்தச் சட்டத்தை அமலுக்குக் கொண்டுவராவிட்டால், அஞ்சல்துறையை மீட்பது மிகவும் கடினம்.

 இந்த அஞ்சல் அலுவலக திருத்த வரைவு மசோதாவில், இன்றைய தகவல் தொழில் நுட்பத்தையும்,கணினிபயன்பாட்டையும் கருத்தில்கொண்டே டிரான்ஸ்மிஷன் அல்லது  டெலிவரி என்ற வார்த்தைகள் எச்சரிக்கையுடன்பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை மத்திய அரசு முழுமையாக, யாருக்காகவும் சமரசம் செய்துகொள்ளாமல் நிறைவேற்றிஅமல்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

 இந்தியாவில் 1.55 லட்சம் அஞ்சல் கிளைகள் உள்ளன. அதாவது, நாட்டுடைமையாக்கப்பட்ட அனைத்து வங்கிக்கிளைகளின் எண்ணிக்கையைவிட இது அதிகம். ஆனால் இன்னும், இந்திய அஞ்சல் நிலையங்களை, வங்கியாகமாற்றுவதற்கு நிதியமைச்சரிடம் கடிதம் எழுதியிருக்கிறோம், ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கேட்டிருக்கிறோம் என்றுஏதோ தனியார் நிறுவனம் போல இந்திய அஞ்சல் துறை ஏன் பரிதாபக் குரல் எழுப்புகிறது என்று புரியவில்லை.

 இந்திய அஞ்சல் துறைபோன்று உள்கட்டமைப்பு உள்ள அரசுத் துறை வேறு எந்த நாட்டிலும் இந்த நூற்றாண்டில்இருக்கிறதா என்பது சந்தேகம். வெறும் 50 காசுகளில் தொலைபேசியில் பேசலாம். ஆனால் எழுத்துப்பூர்வமான பதிவு 50காசுகளில் முடியும் என்றால் ஒரு அஞ்சல் அட்டை போதும். இவ்வளவு அற்புதமான ஒரு துறையைக் காப்பாற்றப்போகிறார்களா? கைவிடப் போகிறார்களா?
............... தினமணி , 04.01.2012