Monday, December 23, 2013

Sunday, December 8, 2013

Chennai City Region - P3 Study Camp

    NFPE – AIPEU GROUP-C  TAMBARAM


சென்னை நகர பிராந்தியம் (Chennai City Region)

அஞ்சல் ஊழியர் பயிலரங்கம் (Study Camp)

      நாள்: 29.12.2013                                     இடம்: புனிதவதி திருமண மண்டபம் 
      காலை 10.00 மணிக்கு               பெருங்களத்தூர்(பேருந்து நிலையம் அருகில்)  
                                                                            சென்னை 600063.

சிங்கார சென்னையின் தலைவாசல், தாம்பரம் கோட்டம்.
சிந்தனையுடன் அறிவு பட்டை தீட்டும் பயிலரங்கம்.
பெருமை மிகு சென்னை பெருங்களத்தூரில் பெருந்திரளாய்
புறப்பட்டு வாரீர், NFPE யின் பெருமைசேர் பயிலரங்கம்.

விதியே என வேலை செய்து களைத்தது போதும் , தோழா
விதிகளை (RULEஅறிய விரைந்திடுவீர் தாம்பரம் கோட்டம்.
பிரச்சினைகளை – பெரும் பிரச்சினையாக பார்த்து பயந்தது போதும்
புறப்பட்டு வா தாம்பரம் கோட்டத்திற்கு அனைத்திற்க்கும் தீர்வு காண.

கற்போரும் கற்பிப்போரும் களம் காணும் பயிலரங்கம்
கேள்வி கணைகளை தொடுக்க வாரீர் ! விடைக்கனிகளை பறித்துச்செல்வீர்
மூத்த தொழிற்சங்கவாதிகளின் ! முத்தாய்ப்பான வகுப்புகள்
முத்து முத்தாய் எளிய முறையில் எடுத்துரைக்கும் இனிய பாங்கு.

அஞ்சல் விதிகளை ஆங்கில மொழியிலும், தமிழிலும் தாங்கள் விருப்பப்படி
அனைத்து சந்தேகங்களுக்கும் – அழகாய் தீர்வு காண அழைக்கின்றோம்
தாம்பரம் கோட்டம்.

இன்றே தயாராகுங்கள் இதுபோல் வாய்ப்பு எப்போது வாய்க்கும் ?   
இருகரம் கூப்பி இன்முகத்துடன் வரவேற்கின்றோம் ! வருக , வருக
தாம்பரம் கோட்டம்.

எண்ணம் எழுத்து.                                                  
தோழர் மெய். கஜேந்திரன்.
உதவி கோட்ட செயலர்.                                     உங்கள் தோழமையுள்ள
                                                           B.செல்வகுமார்
                                        கோட்ட செயலர் தாம்பரம் கோட்டம்.