Monday, January 11, 2016

தோழர் N பாலு அவர்களின் நினைவேந்தல் கூட்டம் - சில பதிவுகள்

முன்னாள் தமிழ் மாநில செயலர் அஞ்சல் 3 , தோழர் N பாலசுப்ரமணியன் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் தமிழ் மாநில NFPE COC சார்பாக 10-01-2016 அன்று சென்னை அண்ணா சாலை அலுவலகத்தில் தோழர் P மோகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .தோழர் AG பசுபதி , தோழர் KVS , தோழர் S ரகுபதி , தோழர் NG , தோழர் J ராமமூர்த்தி  ,தோழர் A வீரமணி தோழர் ஸ்ரீவெங்கடேஷ் ,தோழர் V பார்த்திபன், தோழர் மனோகரன் NFPE செயல் தலைவர் , தோழர் கண்ணன் மாநில செயலர் அஞ்சல் 4 , தோழர் பரந்தாமன் மாநில செயலர் R4 உட்பட பல தோழர்கள் கலந்து கொண்டனர் .

தோழர் பாலுவிற்கு தோழர் AGP  மலர் அஞ்சலி 


அஞ்சலி கூட்டத்தின்  பகுதி 


தோழர் AGP  -  முன்னாள்  மாநில செயலர் (அஞ்சல் 4)


தோழர் KVS - முன்னாள் அகில இந்திய பொது செயலர் (அஞ்சல் 3)


தோழர் ரகுபதி - அகில இந்திய துணை பொது செயலர் (அஞ்சல் 3)


தோழர் J ராமமூர்த்தி - அகில இந்திய தலைவர் & தமிழ் மாநில செயலர் (அஞ்சல் 3)


தோழர் J ஸ்ரீ வெங்கடேஷ் - முன்னாள்  தமிழ் மாநில தலைவர் (அஞ்சல் 3)


தோழர் P மோகன் - தமிழ் மாநில தலைவர் (அஞ்சல் 3)


தோழர் A வீரமணி - அகில இந்திய உதவி செயலர் & தமிழ் மாநில நிதி செயலர் (அஞ்சல் 3)


தோழர் V பார்த்திபன் - முன்னாள்  தமிழ் மாநில செயலர் (அஞ்சல் 3)










Saturday, January 9, 2016

ஈரோடு முதுநிலை தபால் அதிகாரி (Senior Postmaster) இடமாற்றம்

ஊழியர்களை - குறிப்பாக பெண் ஊழியர்களை - துன்புறுத்தி, அற்ப மகிழ்ச்சியடைந்த ஈரோடு முதுநிலை தபால் அதிகாரி (Senior Postmaster ), ஈரோடு கோட்ட JCA  நடத்திய இடைவிடாத போராட்டத்தின் காரணமாக சேலம் தலைமை அஞ்சலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  மாநில சங்கத்தின் தொடர்ச்சியான தலையீடும் இந்த வெற்றிக்கு துணையாக இருந்தது.  இது ஒரு நிரந்தர தீர்வாக கருத முடியாது.  தலை வலி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இந்த அதிகாரி ஏற்கனவே பல இடமாற்றங்களை சந்தித்தும் தனது போக்கினை மாற்றிக்கொள்ளவில்லை .  எனவே உரிய நடவடிக்கை எடுத்து அவரை திருத்த வேண்டிய பெரும்பொறுப்பு மண்டல/ மாநில நிர்வாகத்திற்கு உள்ளது.  இல்லையெனில் ஈரோட்டு போராட்டம் சேலத்தில் தொடரும் ஆபத்து உள்ளது.  இதனை சம்பந்தப்பட்ட அதிகாரியும் உணர்ந்து சரி செய்திடுவார் என்று நம்புகிறோம் .

ஊழியர் நலன் காத்திட தொடர் போராட்டம் நடத்திய ஈரோடு கோட்ட JCA விற்கும் , அனைத்து ஊழியர்களுக்கும் , மாநில சங்கத்திற்கும் நமது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும், தெரிவித்துக்கொள்கிறோம் .

Thursday, January 7, 2016

Com JR nominated to Department Council (JCM)

Com. J.Ramamoorthy, our Circle Secretary and All India President has been nominated as a member of the staff side of the Department Council (JCM).  Congratulations to Com JR.

Wednesday, January 6, 2016

LSG பதவி உயர்வு

LSG  பதவி உயர்வு பட்டியல் இன்று (06.01.2016) வெளியிடப்பட்டுள்ளது.
நமது திருப்பூர் கோட்டத்தில் திருமதி A .ஹுசைன் பானு, PA , திருப்பூர் HO மற்றும் K .உஷா , PA , மேட்டுப்பாளையம்  HO  ஆகியோர் LSG பதவி உயர்வு பெற்றுள்ளார்கள் . இருவருக்கும் நமது வாழ்த்துக்கள் .  மாநில அளவில் 58 எழுத்தர்கள் LSG பதவி உயர்வு பெற்றுள்ளார்கள். அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்.

சும்மா வருவதல்ல சுதந்திரம் ! வழி காட்டும் தமிழக அஞ்சல் மூன்று சங்கம் !

இனி எந்த  இலாக்கா தேர்வுகளிலும் ஒரு ஊழியர் மீது CONTEM PLATION  OF DISC. PROCEEDINGS, OR ON  DISC. PROCEEDINGS OR UNER SUSPENSION OR  AWARDED WITH  THE PENALTY OF CENSURE  இருந்தால் கூட அவரை அந்த காரணம் காட்டி  இலாக்கா  தேர்வு  எழுத  அனுமதி மறுக்க முடியாது என்பதற்கு   கடந்த 10.12.2015 அன்று  இது குறித்து அடிப்படை விதிகளின் மீதான தெளிவான  இலாக்காவின் விளக்க  உத்திரவை  நாம் பெற்றுள்ளோம். DICIPLINARY CASES PENDING இருந்தால் பரிட்சை எழுத முடியாது என்ற நிலை நம் மாநில சங்கத்தின் முயற்சியால் தற்போது மாற்றப் பட்டுள்ளது.இது நமது  அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின்  இடை விடாத  முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.


"MEMORIAL GATHERING" TO SHARE THE MEMORIES OF COM. BALU ON 10.01.2016