Thursday, January 19, 2012

பாராளுமன்ற நிலைக் குழுவுடன் மாநிலச் சங்கத்தின் சந்திப்பு


 பாராளுமன்ற நிலைக் குழுவுடன் மாநிலச் சங்கத்தின் சந்திப்பு 

தமிழக அஞ்சல் துறையின் சேவைத் திறன் குறித்தும் செயல்பாடுகள் 
குறித்தும் ஆய்வு செய்திட வருகை புரிந்த பாராளுமன்ற நிலைக் குழு
விடம் நேரில் சென்று ஊழியர் பிரச்சினைகள் , சேவைத் தன்மைகள் 
குறித்து தமிழக அஞ்சல் மூன்றாம் பிரிவு சங்கத்தின் சார்பாக விவாதித்து 
இன்று மனு அளிக்கப்பட்டது.  புதுப்பிக்கப்பட்டு புத்தம் புதுப் பொலிவுடன் 
சகல வசதிகளும் ஏற்படுத்தப்பட்ட அடையார் அஞ்சலகத்திற்கு 
பாராளுமன்ற நிலைக்குழு நிர்வாகத்தால் அழைத்து வரப்பட்டு சுற்றிக் காண்பிக்கப்பட்டது. எனவே அங்கு சென்று ஊழியர் பிரச்சினை குறித்த
மனு அளித்திட நாம் முடிவு செய்தோம். உடனடியாக மனு தயாரிக்கப்பட்டு
நமது சங்கத்தின் அகில இந்திய செயல் தலைவர் தோழர் N.G. அவர்கள் மூலம் நிலைக்குழு உறுப்பினரும்  கோவை நாடாளுமன்ற உறுப்பினருமான  தோழர் .P.R. நடராஜன் அவர்களிடம் தொடர்பு கொள்ளப்பட்டது. அவரும் அடையாறு அஞ்சலகத்திற்கு நேரில் வருமாறு நேரம் ஒதுக்கி கொடுத்தார் .

உடனடியாக தோழர் N.G. யுடன்  மாநிலச் செயலர் தோழர் J.R. , மாநில உதவித் தலைவர் தோழர்  V.வெங்கட்ராமன் ,  மற்றும் தென் சென்னை 
அஞ்சல் நான்கின் கோட்டச் செயலர் தோழர் . ரவிச்சந்திரன் ஆகியோர் 
சென்று பாராளுமன்ற நிலைக்குழுவினரை சந்தித்தோம் . கோவை 
பாராளுமன்ற உறுப்பினர் தோழர் P.R. நடராஜன்(CPM) அவர்கள் மூலம் 
நிலைக்குழு உறுப்பினர்களிடம் பிரச்சினைகளை எடுத்துக் கூறி ஆவன 
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டினோம் . அவருடன் தமிழகத்தைச் 
சேர்ந்த ம. தி.மு.க. ராஜ்ய சபா உறுப்பினர் திரு . கணேச மூர்த்தி (ஈரோடு)
அவர்களிடமும் மனு அளித்துப் பேசினோம்.  நாளை(20.01.12) நடைபெற
உள்ள கூட்டத்தில் இது குறித்து விவாதித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக 
உறுதியளித்தார்கள்.  அவர்களுக்கு நம் மாநிலச் சங்கத்தின் நன்றிகள். 


---------  JR  Circle secretary


No comments :

Post a Comment