Tuesday, June 12, 2012

CALL FROM CONFEDERATION டெல்லிக்குச் செல்வோம் ! வெல்வோம !!





CALL FROM CONFEDERATION


டெல்லிக்குச் செல்வோம் ! வெல்வோம !!

மத்திய அரசின் புதிய பென்ஷன் திட்டத்தை எதிர்த்து 1.1.2004 க்கு முன்னரில்  இருந்து நாம் நடத்தி வரும் தொடர்  இயக்கங்களாலும்
போராட்டங்களாலும் , இதுவரை மத்திய அரசினால் PFRDA BILL க்கான
சட்ட ரீதியான ஒப்புதலை பாராளுமன்றத்தில் கொண்டு வர இயலவில்லை.

கடந்த நவம்பர் 25 - 2011 அன்று நாம் நடத்திய பாராளுமன்றம் நோக்கிய
பேரணியின் விளைவாகவும் 10 லட்சம் ஊழியரிடமிருந்து கையெழுத்து
இயக்கம் நடத்தி  அன்றைய தேதியில் பிரதம அமைச்சரிடம் கொடுத்ததன்
விளைவாகவும்  அப்போது  பாராளுமன்றத்தில் எதிர்ப்பு மிகக் கடுமையாக
எழுந்தது  உங்களுக்கு நினைவிருக்கும். அதன் காரணமாக அன்றைய
தேதியில் தாக்கல் செய்யப்பட இருந்த மசோதா  பாராளுமன்றத்தில் போதிய ஆதரவில்லாததால் மீண்டும் ஒத்தி வைக்கப் பட்டது .

தற்போது BJP,  திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட  கட்சிகளின் ஆதரவைத்
திரட்ட வேண்டி ஏற்கனவே இருக்கும் மசோதாவில் புதிதாக மூன்று
திருத்தங்களை  மத்திய காபினெட்  கொண்டு வர முடிவு செய்துள்ளது .
இது கூட  நாம் அறிவித்துள்ள 26.07.2012 அன்றைய  பாராளுமன்றம் நோக்கிய
பேரணியின்  விளைவே ஆகும்.

இந்த மூன்று திருத்தங்களும்  முதலீட்டாளர்களுக்கு ஓரளவு  பாதுகாப்பு அளிக்கக் கூடிய  விஷயமே. ஆனாலும் , இந்த திருத்தங்களுடன் , இடைச்
செறுகலாக , புதிதாக  ஒரு திருத்தமாக,  இதுவரை இந்த முதலீட்டை
அரசின்  பாதுகாப்பான நிதியங்களில் (Govt. securities)   செலுத்தி வந்ததற்கு
பதிலாக , பாதுகாப்பற்ற  தனியார் /பன்னாட்டு  மூலதனங்களிலும்
இந்த முதலீட்டை  செலுத்தலாம் என்று  ஒரு திருத்தத்தை  கொண்டு வர
காபினெட்  முடிவு செய்துள்ளது  மிகவும் ஆபத்தானது.

எது எப்படி இருந்தாலும் , 46 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் , பலகோடி
மாநில/ பொதுத் துறை ஊழியர்களும்  ஒன்று பட்டு இந்தப் பென்ஷன்
திட்டத்தை  ஒழித்திட ,  மூச்சு விடாமல்  போராடியே ஆகவேண்டும்.
இல்லையேல்  நம் எதிர்காலம் கேள்விக்குறியே.

உடன் பாராளுமன்றம் நோக்கிய பேரணிக்கு ஊழியர்களை ஒன்று திரட்டுங்கள்!  உடன்  ரயில் டிக்கெட்  முன்பதிவு செய்திடுங்கள் !

ஏழாவது ஊதியக் குழு வேண்டியும் ,  பஞ்சப் படி  அடிப்படை ஊதியத்துடன்
இணைக்க வேண்டியும்,  புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்திட
வேண்டியும்  அனைத்து மத்திய அரசு ஊழியர் சங்கங்களின்
தலைவர்களின்  பிரச்சார இயக்கக் கூட்டங்கள் கீழ் வரும் நகரங்களில்
நடைபெறுவதாக  அறிவிக்கப் பட்டுள்ளது . ஆங்காங்கு உள்ள நம்முடைய
NFPE  இயக்கத் தோழர்கள், அவரவர்கள்  பகுதியில் நடைபெறும் கூட்டங்களில்
பெருவாரியான அளவில் ஊழியர்களைத் திரட்டி, கூட்டங்களை சிறப்பிக்குமாறு  மாநிலச் சங்கம்  வேண்டுகிறது .
TAMILNADU: - Tiruchy- 12.6.2012, Madurai- 13.6.2012, Coimbatore- 14.6.2012, Chennai- 15.6.2012 - K.Ragavendran, K.V.Sreedharan, Ashok B Salunkhe, M.Duraipandian, K.Venkatasubramanian.
State Secretary , Com. M. Duraipandian. Phone No. 097898 33552

போராட்ட வாழ்த்துக்களுடன்............. J.R.  மாநிலச் செயலர் . 

No comments :

Post a Comment