Wednesday, December 14, 2011

வென்றது பயிலரங்கம்


                    வென்றது பயிலரங்கம் -
மாநிலச் சங்க செயல்பாட்டில்
           ஒரு மைல்கல்
திருப்பூர் ,மேட்டுபாளையம் தோழர்கள் பேர் 
பயிலரங்கதிலும் பயிற்சிப்பட்டரையிலும் கலந்து கொண்டனர் .

கடந்த 11  மற்றும் 12 ஆம் தேதிகளில் குடந்தை அருகேயுள்ள சுவாமிமலையில் தமிழக அஞ்சல் மூன்றின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான  இரண்டு நாள் தொழிற் சங்க பயிற்சி முகாம் வெகு சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்றது.அந்தந்த நிகழ்ச்சிகளும்நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டவாறே சரியான  நேரத்தில் துவங்கப் பட்டு சரியான நேரத்தில்  முடிக்கப்பட்டது - இதுவரை இல்லாத புதுமைஅதுபோலவே கலந்துகொண்ட அனைத்து சார்பாளர்களும், பார்வை யாளர்களும்  ஒரு நிமிடம் கூட வெளியில் எங்கும் செல்லாமல் அரங்கத்தில் அமர்ந்து தொடர்ந்து  விவாதங்களில் கலந்துகொண்டது என்றும்இல்லாத ஒரு நிகழ்வுஆகும்

மேலும் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டது போல   வகுப்பு எடுப்போர் தவிர வேறு எவரும்  மேடையில் நின்று உரை நிகழ்த்தி வகுப்பின்  நோக்கத்தை திசை திருப்பாதிருந்தது,அதைவிடசிறப்பு

எரிந்த கட்சி - எரியாத கட்சி  என்பது போல , அடுத்தவரைத் தாக்கிப்  பேசி  , நிகழ்ச்சியின்  நேரத்தை ஒருவர் கூட வீணடிக்கவில்லை என்பது பெரு மகிழ்ச்சி

இரண்டு நாள் நிகழ்ச்சியிலும்  கிட்டத்தட்ட 84 பேர் விவாதங்களில் கலந்துகொண்டார்கள் என்பது நல்ல  வளர்ச்சி

இவையெல்லாம் ஆரோக்கியமான தொழிற் சங்கப் பயணத்தின்  தொடக்கம். இதுவே இந்த நிகழ்ச்சியின்  வெற்றி ஆகும்  .  

இந்திய தபால் தந்தி  தொழிற்சங்க வரலாறை , நம் முன்னோர்களின் தியாகங்களை , தந்த

உயிர்ப் பலிகளை , அதனால் இன்று நாம் பெற்றிருக்கும் 

உரிமைகளை விளக்கியும் , எதிர் வரும் 17.01.2012 முதல் தொடங்க விருக்கும் 
காலவரையற்ற வேலை நிறுத்தத்தின் தேவை குறித்தும்  நமது சம்மேளன 
மா பொதுச் செயலர் தோழர் கிருஷ்ணன் அவர்கள் அளித்த வகுப்பு பல தோழர்களை  உணர்ச்சிப் பிழம்பாக்கியது. 

 மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் , தேசிய கூட்டு ஆலோசனை குழு , இலாக்கா கூட்டு ஆலோசனை குழு , பொது தேவைகள் , கூட்டு இயக்கங்கள் 
மத்திய அரசின்  தனியார்  மய மோகம் , இதனால் அஞ்சல் துறையில் ஏற்படும் 

தாக்கம் குறித்து மத்திய அரசு ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் தோழர்  K.R. 
அவர்கள் எடுத்த வகுப்பு  மிகச் சிறப்பு .

இலாக்காவின் இன்றைய நிலைமை , MCKENSY இன்  தாக்கம் , RMS மூடல் ,
அஞ்சலக மூடல், CADRE  RESTRUCTURING  நிலை,   HSG I RECTT. RULES, PM CADRE
III  யின் நிலை,  GDS  ஊழியர் பிரச்சினைகளில் இலாக்காவின் நிலை, JCM DEPTL
COUNCIL  இல்  விவாதத்தில் இருக்கும்  பிரச்சினைகள் , எதிர் வரும் காலவரை யற்ற வேலை நிறுத்தத்தில் நாம் வைத்திருக்கும் கோரிக்கைகள் குறித்து  நமது 
பொதுச் செயலர் தோழர் KVS அவர்கள் எடுத்த இரண்டு மணி நேர வகுப்பும்
 தொடர்ந்து 1 1/2  மணி நேர சூடான , சுவையான விவாதங்களும் , வந்திருந்த
அனைத்து தோழர்களுக்கும் ஒரு விழிப் புணர்ச்சியை ஏற்படுத்தியது . 

இது போலவே தோழர் . M.R. மீனாட்சி சுந்தரம் அவர்கள் எடுத்த CONTRIBUTORY 
NEGLIGENCE குறித்த வகுப்பு இருளில்  இருக்கும் தோழர்களுக்கு வழி காட்டும்  ஒளி விளக்காக  அமைந்தது . எவருக்கும் இஷ்டம் போல RECOVERY போடும் அதிகாரிகளை எதிர்த்து சட்ட ரீதியாக  இனி ஒவ்வொரு தோழனும் எதிர்கொள்ள  முடியும் என்பதை மிகத் தெளிவாக விளக்கினார்கள்  தோழர்  M.R.M.  அவர்கள்

தனது தள்ளாத 80 வயதில் தோழர் பேச்சிமுத்து அவர்களும் 75 வயதில் தோழர் 

ராஜ்மோகன் அவர்களும் எடுத்த  DEFENCE  வகுப்புகள் , CCS(CCA) RULES 1965, CCS(CONDUCT) 

RULES 1964, RTI ACT 2005  ஊழியர் பாதுகாப்புக்கான வகுப்புகள்,

ஒன்றுமே தெரியாதவர்களுக்குக் கூட ஓராயிரம் விஷயங்களைக் கற்றுக்

கொடுத்தது . கிட்டத்தட்ட 1 1/2 மணி நேரத்துக்கு மேல் இந்த வயதிலும் அவர்கள்
  
இருவரும் கூட்டாக அனைவரின் கேள்விகளுக்கும்  பதில் 

அளித்தது  , மனம் முழுக்க நிறைந்த காட்சியாகும் .

மொத்தத்தில் அங்கு வந்திருந்த அனைவருக்கும் வாழ்வில் மறக்கவியலாத 

நிகழ்வாக இந்த தொழிற் சங்க பயிற்சி முகாம் அமைந்தது  என்றால் அது 

மிகையில்லைமாநிலச் சங்கத்தின் சார்பாக மாநிலச் செயலர் தோழர் JR 
அவர்கள் அளித்த  90  பக்க 'STUDY MATERIAL '  என்ற புத்தக வடிவிலான 

குறிப்பேடு , இந்த அறிவார்ந்த தலைவர்களின்  பாடங்களை தாங்கி 
நம் இலாக்கா வாழ்கைப் பயணத்திற்கு  முன்னேற்றப் படிக்கட்டாக 

அமைந்தது வெகு சிறப்பு . இதனை  நிகழ்ச்சியின் இறுதியாக அளிக்கப்பட 
FEED BACK  படிவத்தில் பெரும் பகுதி தோழர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்
என்பது மாநிலச் சங்கத்தின் முயற்சிக்குக் கிடைத்த ஆதரவு, அங்கீகாரம்
என்றே சொல்லலாம் 

குடந்தைக்  கோட்டச் செயலர் தோழர்பெருமாள் , வரவேற்புக் குழு பொதுச்

செயலராகவும்  மாநில அமைப்புச் செயலரும் புதுகை கோட்டச் செயலருமான தோழர் R. 
குமார் , தலைவராகவும் , குடந்தை கோட்டத்தின் இயக்க முன்னோடித்  தோழர் V . ஜோதி  பொருளராகவும் கொண்டு வரவேற்புக் குழு மிகச் சிறப்பான ஏற்பாடுகளை  ஐந்தே  நாட்களில் செய்து முடித்தது அபாரம்.

ஒரு மாநில மாநாட்டுக்கு இணையான வகையில் , மண்டபங்கள், அரங்க

ஏற்பாடுகள், வரவேற்பு  BANNER கள் , தோரணக் கொடிகள் ,  VIP, மாநிலச் சங்க ,அகில

இந்தியச் சங்க நிர்வாகிகள், சார்பாளர்கள், பார்வையாளர்கள், வரவேற்பு குழு என தனித்

தனியே  BATCH கள், காலை தொடங்கி  இரவு வரை தஞ்சை மாவட்டத்திற்கே உரிய  இனிய 
உபசரிப்புடன் சுவையான உணவு வகைகள்,

 160 க்கும் மேற்பட்ட சார்பாளர்களும் , கட்டணம் செலுத்திய பார்வையாளர்களும் கலந்து கொண்டனர் . 55 கிளைகளில் இருந்து  கோட்ட /
கிளை செயலர்களும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர் .9 கிளைகளில் 
இருந்து பல்வேறு காரணங்களால் வர  இயலாமை குறித்து கடிதம்/தகவல்

அனுப்பி இருந்தனர் .  150  பேர்   FEED BACK  படிவம் அளித்திருந்தனர் . மத்திய
மண்டலம் தவிரவும் குறிப்பாக மேற்கு மண்டலம், தென் மண்டலம் சார்ந்த
மண்டலச் செயலர்களும் , பல்வேறு கோட்ட/ கிளைச் செயலர்களும்
நிகழ்ச்சி சிறக்க, கேட்காமலேயே நன்கொடை அளித்தது  பெருமையே.
அவர்கள் அனைவருக்கும்  மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி .

அது போல விழாக் குழுவினருக்கும் , குடந்தை, பாபநாசம்,மன்னார்குடி

நாகை , மயிலாடுதுறை  பகுதியில் இருந்து  தன்னார்வமாக தொண்டாற்றிய

VOLUNTEERS  அனைவருக்கும் , நிகழ்ச்சி சிறக்க பெருமளவில் உதவிய 
ஒய்வு பெற்ற குடந்தை கோட்ட முன்னோடி சுவாமிமலையைச் சேர்ந்த  நாகசுப்ரமணியன் அவர்களுக்கும்  நம் நெஞ்சார்ந்த நன்றி

இது ஆரோக்கியமான தொழிற் சங்கத்திற்கு ஒரு நல்ல தொடக்கமே.
இது போல் பல நிகழ்வுகள் மேலும் .....  பல்வேறு பகுதிகளில் ... தொடரும் .
.
ஊழியரிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும் , போராட ஒன்று திரட்டவும்
நம்  இயக்கப் பணி தொடரும் ...... உங்கள் கரம் சேர்த்தே ... தொடரும் . 

என்றும் நன்றியுடன்

J.R. , மாநிலச் செயலர். மாநிலச் சங்கத்திற்காக. 




Friday, December 9, 2011

கருத்தரங்கம் - திருப்பூரில்

                                   ருத்தரங்கம் - திருப்பூரில் 

திருப்பூர் அஞ்சல் மூன்று & அஞ்சல் நான்கு கோட்ட கிளைச்சங்கங்கள் நடத்தும் சிறப்புக் கருத்தரங்கம் 18 /12 /2011  அன்றுதிருப்பூரில் நிகழ உள்ளது .  பெரும் தலைவர்கள் பங்குபெறும் இக்கருத்தரங்கின் அழைப்பிதழ் ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டது.  அழைப்பிதழ்கிடைக்காதவர்கள் இதையே அழைப்பென ஏற்கவும் .
----------------- NFPE  P3   P4 -திருப்பூர் 

Monday, December 5, 2011

BEST EFFORT- புது முயற்சி -பயிலரங்கு


மாநிலச் சங்க வரலாற்றில் இது வரை இல்லாத  ஒரு  புது  முயற்சி !

பொதுக் கூட்டம் , மாநாடு என்றெல்லாம் இல்லாத ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி !

வகுப்பு எடுப்போர் தவிர , கலந்து கொள்ளும்  அனைவருமே 
இங்கு ஒரு மாணவர் தான் என்பது  மகிழ்ச்சி !

இந்தப் பயிலரங்கு நிச்சயம்  நமக்குத் தருமே 
தொழிற்  சங்க விழிப்புணர்ச்சி !

பயில ரங்கின்  வலப் புறம்  50 அடி தூரத்தில் வற்றாத  காவிரி ஆறு .
இடப் புறம்  100  அடி தூரத்தில் ஆறு படை வீடு  முருகனின் கோயில் .
அதே சாலையில் 100  மீட்டர் தூரத்தில்  வரலாற்றுப் புகழ் 
திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் . இது தான் நம் நிகழ்விடம்.

DELEGATE மட்டுமே கலந்து கொள்ளலாம் என்றில்லாமல் , அஞ்சல்  மூன்று
அஞ்சல் நான்கு , RMS மூன்று   RMS நான்கு   மற்றும்  இதர பகுதி  அஞ்சல் 
தோழர்களும்   PAID VISITOR  ஆக கலந்து கொள்ளலாம்  என்று  பெருவாரியானோர் கோரிக்கையை ஏற்று  முடிவு எடுக்கப்பட்டுள்ளது .

ஆனால் எத்தனை பேர் கலந்துகொள்வார்கள் என்பது முன்கூட்டியே 
தெரிந்தால் மட்டுமே  அவர்களுக்கான  தங்குமிடம்  மற்றும் உணவு 
இதர வசதிகளை  வரவேற்புக் குழுவால் செய்து கொடுக்க இயலும் என்பது 
மறுக்க முடியாத உண்மை அல்லவா ?  

இல்லையெனில் வசதி பற்றாக்குறை ஏற்பட்டு  மன வருத்தம்  ஏற்படும் 
அல்லவா ?  இதை தவிர்த்திடவே  இந்த அன்புக் கோரிக்கை. 
மாநிலச் சங்க நிர்வாகிகள் மற்றும் கோட்ட/ கிளைச்  செயலர்கள்
எதிர்வரும் வெள்ளி அன்றுக்குள் கலந்து கொள்வோர் எண்ணிக்கையை 
வரவேற்புக் குழு பொறுப்பாளர்களிடம்  கட்டாயம்  தெரிவித்திட 
வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறோம்.  இந்த வலைத்தளத்தை 
பார்க்கும் அன்புத் தோழர்கள் ,  இதனைப் பார்க்காத இதர பகுதித் 
தோழர்களுக்கும் அவசியம்  இந்த செய்தியை தெரிவித்திட அன்போடு 
வேண்டுகிறோம்.     
வாருங்கள்  நம் பயிற்சிப் பாசறை நோக்கி ! 
சேருங்கள்  உழைக்கும் 
கரங்களை தொழிலாளர் நலன் நோக்கி ! 

மீண்டும்  தெரியும்  நாம் 
எழுதப் போகும்  இயக்க வரலாறு !
நாளைய பொழுது  இனி 
நமதாகட்டும் ! 
 
 குறிப்பு :-
கீழே உள்ள  நிகழ்ச்சி நிரல்  அழைப்பு தமிழகம் முழுதும் உள்ள அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும்  , மாநிலச் சங்க நிர்வாகிகளுக்கும்
இதர பொறுப்பாளர்களுக்கும் முன்னணித் தோழர்களுக்கும் அஞ்சல் மூலம்
அனுப்பப் பட்டுள்ளது .   



---   BY   JR  C/S  P3

Friday, December 2, 2011

Thursday, December 1, 2011

மாநில அளவிலான தொழிற் சங்கப் பயிற்சி முகாம்


STATE LEVEL TRADE UNION STUDY CAMP ON 11 AND 12.12.2011

                     மாநில அளவிலான தொழிற் சங்கப் பயிற்சி  முகாம் 

                     நாள் :  11.12.2011   ஞாயிறு  மற்றும் 12.12.2011  திங்கள் 

                     இடம்: வசந்த மஹால் திருமண மண்டபம் ,

                                   எண்: 62 , திருமஞ்சன வீதி , சுவாமிமலை  612 302
                                  கும்பகோணம் .

                    நிகழ்ச்சி துவக்கம்  : 11.12.2011 காலை சரியாக  10.00  மணி .

 காலை சரியாக 09.00  மணிக்கே CREDENTIAL பெறப்படும். 

நமது சம்மேளன மா பொதுச் செயலர் தோழர் . M..கிருஷ்ணன் அவர்களும்
நமது சம்மேளன முன்னாள் மா பொதுச் செயலர்  தோழர்.  K.R. அவர்களும்
நமது அகில இந்திய பொதுச் செயலர் தோழர். KVS   அவர்களும்  மற்றும்
பல துறை சார்ந்த வல்லுனர்களும்  கலந்து கொண்டு பயிற்சி தர உள்ளார்கள்.

இரண்டு நாட்களும்  தங்குமிடம் , மூன்று  வேளை உணவு,  பயிற்சிக்கான
COURSE MATERIALS உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படும் .

  DELEGATE FEE    :   RS. 500/- Rs.Five hundred only  FOR TWO DAYS.

COMPOSITION OF DELEGATES  FOR THE STUDY CAMP  WILL BE  DECIDED
AS FOLLOWS:-
Branches having less than 50                         -                       ONE
Membership              

Branches having more than 50                      -                       TWO
But below 100 Membership

More than 100 Membership                          -                       FOUR

All Circle office bearers & Mahila Committee members are also the delegates for the workshop, All Branch/Divisional Secretaries should attend the workshop positively.

விரிவான விபரங்கள் அடங்கிய நிகழ்ச்சி  நிரல் - அழைப்பிதழ் 
அஞ்சலில் அனைத்து கோட்ட/கிளைச் செயலர்களுக்கும் 
தமிழகத்தைச் சேர்ந்த சம்மேளன/அகில இந்திய / மாநிலச் சங்க
நிர்வாகிகளுக்கும்  முன்னோடிகளுக்கும்  அனுப்பப்பட்டுள்ளது.  

குறிப்பு :- 
1.கடந்த 25.09.2011  அன்று  தேனாம்பேட்டையில் நடைபெற்ற
 கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டத்தின் முடிவாகத்தான் 
இந்த STUDY CAMP நடத்தப் படுகிறது. 
2 .ஏற்கனவே இது குறித்து தமிழக அஞ்சல் முழக்கம் அக்டோபர் 2011
இதழில் விரிவான செய்தியும் வெளியிட்டுள்ளோம். 
3 . எனவே அனைத்து கோட்ட/கிளைச் செயலர்களும் /முன்னோடிகளும் 
மாநிலச் சங்க நிர்வாகிகளும் தவறாமல்  கலந்து கொள்ள 
இதையே முன் அழைப்பாக  ஏற்று  உடன் பயண ஏற்பாட்டை 
செய்திட அன்போடு வேண்டுகிறோம். 
4 . யாரேனும் இந்த வலைத்தளத்தை பார்க்க வில்லை என்றோ
அழைப்பிதழ் கிடைக்கவில்லை என்றோ குறை சொல்லாத 
வண்ணம் செய்தி தெரிந்த ஒவ்வொருவரும் இந்த செய்தியை
 அந்தந்த  மண்டல/ கோட்ட/ கிளை/இதர பொறுப்பாளர்களிடம்
தெரிவிக்க வேண்டுகிறோம். 
5. நிகழ்ச்சிகள்  கண்டிப்பாக அறிவிக்கப்பட்ட சரியான நேரத்தில் 
நடத்தப் படும். எனவே கால தாமதத்தினை கண்டிப்பாக தவிர்க்கவும்.
6 . ரயில் / பேருந்து பயண மற்றும் தங்குமிட விபரங்களுக்கு 
தோழர். A.மனோகரன் , மத்திய மண்டலச் செயலர் 94439 88308
தோழர். R. பெருமாள் , குடந்தை கோட்டச் செயலர் 94435 25485
ஆகியோரை அணுகிட அன்புடன் வேண்டுகிறோம். 
நிகழ்ச்சி சிறக்க உங்கள் அனைவரின் அன்பான ஒத்துழைப்பையும் 
பணிவுடன் வேண்டுகிறோம். 
இது உங்கள் சங்கம் ! இது உங்கள்  நிகழ்ச்சி ! 

முன்னேற்றப் பாதையில் நாம் ஒன்றாக எடுத்து 
வைக்கும் அடி ...  நம் அனைவரின் வாழ்வுக்கும் நல்ல வழி !

தோழமையுடன்
மாநிலச் சங்கத்திற்காக J. இராமமூர்த்தி , மாநிலச் செயலர் .

Saturday, November 26, 2011

COLOURFUL TREE IN AUTUMN

THE PICTURE IS VERY ATTRACTIVE AND POSTED BY OUR  PMG WR

NS said...
Dear Sir,
"Colourful Tree in Autumn" is a wonderful picture. I hope the name of the tree will be 
mentioned in your next post.--- N.Subramanian Tirupur

BloggerA N NANDA said...
Thanks NS . As for the tree, they are all maples. There are two types of trees in 
India they are as enchanting as maple. They are (1) Chinar in Kashmir Valley, (2)
 Bambuka or bread fruit in Car Nicobar.

A N Nanda

COLOURFUL TREE

Friday, November 25, 2011

WELCOME



     The following Group B officers have been allotted to WesternRegion.Hearty welcome to them.

Duraisamy, ASP Sub Dn II,
 Ch City South Dn
P.Duraiswamy, ASP OD, Coimbatore Dn
A.Sundararajan, Offg SPOs
Salem West Dn
  
  ALREADY TWO OFFICERS ARE UNDER TRANSFER TO WESTERN REGION.

Wednesday, November 23, 2011

LGO தேர்வு -நியாயம் கிடைத்தது

 LGO  தேர்வில் ஹிந்தியில் கேட்கப்பட்ட கேள்விகள் தவிர்த்து , மொத்த மதிப்பெண்கள் 76 என்ற விகிதத்தில் முடிவுகள் வர உள்ளது . தமிழக அஞ்சல் மூன்றின் முன்முயற்சியால் நமது அகில இந்திய சங்கங்கள் பெற்றுத் தந்த வரலாற்று நிகழ்வு இது .விரைவில் முடிவுகள் வெளிவர உள்ளன . -நியாயம் கிடைத்தது .நீதி நிலைத்தது. தமிழ் மாநில அஞ்சல் மூன்று பாராட்டுக்குரியது.


Tuesday, November 22, 2011

BHARTIYA POST Editorial - December 2011