Monday, September 17, 2012

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு ஆரோக்கியமா ? ஆபத்தா ?

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு ஆரோக்கியமா ? ஆபத்தா ?
பல்பொருள் சில்லரை விற்பனைத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற மத்திய அமைச் சரவையின் முடிவு. நாடு முழுவதிலுமுள்ள கோடிக் கணக்கான சிறுகடை வியா பாரிகளின் வாழ்வாதாரத்தை, அரசின் இந்த முடிவு அழித்து நிர்மூலமாக்கும். சில்லரை விற்பனைத்துறையில் பன்னாட்டு நிறுவனங்கள் ஏகபோக ஆதிக்கம் செலுத்த வழிவகுக்கும். மிகக்கடுமையான அளவில் நீடிக்கும் பணவீக்கம், தொடர்ந்து அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் விவ சாய நெருக்கடியின் துயரம் ஆகிய வற்றின் பின்னணியில், இந்த முடிவு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அர சின் மக்கள் விரோத, நாசகர குணாம்சத்தை அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது. அமெரிக்க மற்றும் இதர மேற்கத்திய அரசுகளின் நிர்ப்பந்தங் களுக்கு பணிந்துசெயலாற்ற மத்திய அரசு ஆவலோடு இருக்கிறது என்ப தும், தனது சொந்த மக்களின் நலன் களை பாதுகாப்பதைவிட வால் மார்ட், டெஸ்கோ மற்றும் கேர்ஃ போர் போன்ற பன்னாட்டு நிறுவனங் களின் நலன்களுக்கு சேவை செய்யவே ஆவலோடு இருக்கிறது என்ப தும் மேலும் பகிரங்கமாக அம்பலமாகியுள்ளது.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு நுழைவதற்கு நிபந்தனைகள் என்ற பெயரில் அரசு அறி வித்திருக்கும் ஏற்பாடுகள் எந்த விதத்திலும் பொருத்தமற்றவையாகவும், எந்த தரப்பு மக்களையும் பாதுகாக்க உகந்தவையாகவும் இல்லை. ரூ.520 கோடி முதலீட்டுத்தகுதி என் பது வால்மார்ட், டெஸ்கோ, கேர்ஃ போர் போன்ற பகாசுர சில்லரை வர்த் தக நிறுவனங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. ஏனென்றால் இந்த கம்பெனி கள் பல்லாயிரம் கோடி டாலர் முத லீட்டு சக்தி கொண்டவை. அந்நிய சில்லரை விற்பனை மையங்கள், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகரங்களில் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற அரசின் கட்டுப்பாடு, எந்தவிதத்திலும் அர்த்தமற்றது. ஏனென்றால், மேற் கண்ட பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியச் சந்தையில் கூடுதல் வருமா னம் கொண்ட பிரிவினரை முழுமையாக தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கு இது போன்ற மாநகரங்களில் முதலில் கடைவிரிக்க வேண்டும் என்றுதான் விரும்புகின்றனர் என்பதை கவனிக்க வேண்டும். இத்தகைய பெரும் நகரங்களில் மிக அதிக அளவிலான சில்லரை விற்பனையாளர்கள் குவிந்திருக்கிறார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.உலகிலேயே சில்லரை வியாபாரம் மிக அதிக அளவிலும், மிக விரிவான அளவிலும் நடக்கும் நாடு இந்தியா தான். இங்கு ஆயிரம் நபர்களுக்கு 11 சிறு கடைகள் இருக்கின்றன. நாடு முழுவதிலும் 1.2 கோடிக்கும் அதிகமான கடைகள் உள்ளன. இக்கடை களில் 6 கோடிக்கும் அதிகமான மக் கள் வேலை செய்து வருகிறார்கள். இவற்றில் 95 சதவீத கடைகள் தங்களுக்கு தாங்களே சுய வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொண்ட நபர்களால் 500 சதுர அடி பரப்பிற்கும் குறைவான இடத்தில் நடத்தப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பன் னாட்டு நிறுவனங்களின் சில்லரை விற்பனை கடைகள் நுழைந்தால், நகர்ப்புற பகுதிகளில் உள்ள சிறு கடை வியாபாரிகள் மிக மிகக் கடுமையான முறையில் தாக்கப்படுவார்கள். எங்கெல்லாம் சூப்பர் மார்க்கெட்டுகள் வந்தனவோ, அங்கெல்லாம் சிறு கடை வியாபாரிகள் நிர்மூலமாக்கப் பட்டார்கள் என்பதே உலகம் முழுவ திலுமுள்ள அனுபவம். அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற வளர்ச்சி யடைந்த நாடுகளில் சிறு அளவிலான சில்லரை விற்பனைக்கடைகள் என் பவை முற்றிலும் அழித்தொழிக்கப் பட்டுவிட்டன. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டதால் சிறுகடை வியாபாரிகள் தங்களது தொழிலிலி ருந்து முற்றிலும் வெளியேற்றப்பட்ட னர். இப்போது வரைமுறையின்றி வளர்ந்து நிற்கும் சூப்பர் மார்க்கெட் டுகளின் வளர்ச்சியை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு கடுமையான உரிம விதிமுறைகளை இந்நாடு கள் உருவாக்கிக்கொண்டிருக்கின்றன.சில்லரை வர்த்தகத்துறையில் நுழையும் பன்னாட்டு நிறுவனங்கள், குறைந்தபட்சம் 50 சதவீதம் அள விற்கு, சில்லரை விற்பனை நடவடிக் கைகளுக்கான அடிப்படை கட்ட மைப்பு வசதியை ஏற்படுத்துவதற்காக முதலீடு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்திருப்பதாகக் கூறி அரசு நியாயப்படுத்துகிறது. (இந்த முதலீடு உணவு மற்றும் இதர பொருட்கள் பதப்படுத்தல், தயாரிப் புப்பணி, விநியோகம், வடிவமைப்பு மேம்பாடு, தரக்கட்டுப்பாடு, சேமிப் புக்கிடங்குகள், குளிர்பதன வசதி கொண்ட கட்டமைப்புகள் மற்றும் பேக்கிங் போன்ற துறைகளில் செய் யப்படவேண்டும் என்று அரசு கூறு கிறது.) இந்த நிபந்தனை, நாட்டில் சரக்குகளைக் கையாள இன்னும் கூடுதல் வாய்ப்பு வசதிகள், குளிர்பதன கிடங்கு வசதிகள் போன்றவற்றை உரு வாக்க உதவும் என்றும், இது விவசாயி களுக்கு பலனளிக்கும் என்றும் அரசு வாதிடுகிறது. ஆனால், பன்னாட்டு பெரும் நிறுவனங்களின் சில்லரை விற்பனை மையங்களால் நடத்தப் பட்ட கொள்முதல் நடவடிக்கைகள், சிறு விவசாயிகளுக்கு எந்தவிதத்தி லும் பலனளிக்கவில்லை என்பதே உலகம் முழுவதிலுமுள்ள அனுபவம். மாறாக, விவசாயிகளுக்கு மிக மிகக் குறைவான விலையே கிடைக்கப் பெற்றுள்ளது. விளைபொருட்க ளுக்கு தன்னிச்சையாக தர நிர்ணயம் செய்துகொண்டு, விவசாயிகளின் பொருட்கள் அந்தத் தரத்தை பூர்த்தி செய்வதாக இல்லை என்று கூறி விலையை அப்பட்டமாகக் குறைப் பதே அனுபவமாக இருந்திருக்கிறது. பன்னாட்டு பெரும் நிறுவனங்களை விவசாயிகளிடமிருந்து விளை பொருட்களை கொள்முதல் செய்ய அனுமதிப்பது என்ற அரசின் திட் டம், அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தனது பொறுப்பு களை கைவிடும் முயற்சியே ஆகும். இது நாட்டின் உணவுப்பாதுகாப்பில் மிகக்கடுமையான பாதகத்தை ஏற் படுத்தும்.சிறு உற்பத்தியாளர்களும் கசக்கிப் பிழியப்படுவார்கள். பன்னாட்டு நிறுவனங்களால் முன்கூட்டியே விலைகள் தீர்மானிக்கப்பட்டு, போட் டியிலிருக்கும் இதர சிறு உற்பத்தி யாளர்கள் அனைவரும் வெளியேற் றப்படுவார்கள். அதுமட்டுமின்றி உணவுப்பொருட்கள் போன்ற அத் தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்துவிதமான நுகர்பொருட்களின் ஒட்டுமொத்த சப்ளை மீதும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது கட்டுப்பாட்டை கொண்டுவரும். உள்நாட்டுச் சந்தைக்குள் அந்நிய நாடுகளிலிருந்து கொள்முதல் செய் யப்படும் பொருட்கள் வெள்ளமெனப் பாயும். இப்படி பொருட்கள் வந்து குவிவது, சில்லரை விற்பனையில் பொருட்களின் விலை குறையவும், நுகர்வோருக்கு பலன் கிடைக்கவும் உதவும் என்று கூறப்படுவது முற்றி லும் மோசடித்தனமானது. ஏகபோக சந்தை அதிகாரமும், பெருமளவி லான பொருட்களை இருப்பு வைக் கும் திறனும் கொண்ட இந்த மிகப் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், விலைக்குறைப்பில் ஈடுபடாது; மாறாக பொருட்களை பதுக்கி வைத்து, அதன்மூலம் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கே முனையும்.கடந்த பல ஆண்டுகளாகவே இந்தியாவில் பணத்தைக்கொடுத்து பொருளை பெற்றுச்செல்லும் வர்த்த கத்தில் பன்னாட்டு பெரும் நிறுவனங் கள் ஈடுபட்டுள்ளன; இதற்காக அரசு அனுமதியும் அளித்துள்ளது. இந்த அனுமதியை பெற்ற நிறுவனங்கள், நுகர்வோருக்கு நேரடியாக பொருட் களை விற்பனை செய்யக்கூடாது என்ற தடையை தொடர்ந்து மீறியே வந்திருக்கின்றன; ஆனால் இதை தடுப்பதற்கு அரசு எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. அதேபோல சுயகட்டுப்பாடு என்ற முறையிலான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எவை யும் பின்பற்றப்படவில்லை. குறிப்பாக இந்த நிபந்தனைகளை அமல்படுத்து வதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை.இந்தியாவில் சில்லரை வர்த்தகத் துறையை தாராளமாக திறந்துவிட வேண்டுமென்று நீண்ட காலமாகவே மத்திய அரசை பன்னாட்டு பெரும் நிறுவனங்களும் அந்நிய அரசாங்கங் களும் தொடர்ந்து நிர்ப்பந்தித்து வந் திருக்கின்றன. முந்தைய ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசின் காலத்தில், இந்த முடிவை மேற்கொள்ள விடாமல் எதிர்க் கட்சிகளும் பொது இயக்கங்களும், சிறு வணிகர் சங்கங்களும் தடுத்து நிறுத்தின. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட் சிக்காலத்தில், நாசகர சக்திகளின் நிர்ப்பந்தங்களுக்கு அரசு முழுமை யாக பணிந்துவிட்டது.அரசின் இந்த முடிவை அனைத்து தரப்பு மக்களும் அரசியல் கட்சிகளும் கூட்டாக எதிர்த்து நிற்க வேண் டும் என்று கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் , அனைத்து பொது அமைப்புகளும் , சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களுக்கு கேடு விளைவிக்கும் இது போன்ற மொத்த -சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுக்கு திறந்து விட மத்தியில் ஆளும் அரசுக்குக் காரணம் என்ன இருக்க முடியும் ?தொலைத் தொடர்புத் துறை, அஞ்சல் துறை, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், இதர பொதுத் துறை நிறுவனங்கள் இவற்றையெல்லாம் முடக்கி வருவது போலவேதான், இவற்றிலெல்லாம் அந்நிய நாட்டுக் கம்பெனிகளை நுழைய விடுவதுபோலவேதான் ....... இந்த முடிவும் எடுக்கப் பட்டுள்ளது. நமக்கு பாதகம் வந்தால் எதிர்க்க வேண்டும் என்பதும், தொழிற் சங்கங்கள் என்ன செய்தன என்று வரட்டுக் கேள்விகள் எழுப்புவதும் , இது போன்ற பொதுவான பாதகங்கள் என்றால் அதைப் பற்றி நமக்கு கவலையில்லை என்பதும் , அதற்கு சித்தாந்த சாயங்கள் பூசுவதும் ஒரு தவறான பார்வை ஆகும்.இறுதியாக இதுபோன்ற முடிவு ,விவசாயத் துறையின் மீதும் , குடிதண்ணீர் மீதும், மின்சாரத் துறை மீதும் முழுமையாகப் பாயும் போது, இந்தநாட்டின் அனைத்து குடிமக்கள் முதுகிலும் பேரிடியாக, அந்த அடி விழுந்து இருக்கும். அப்போது எல்லாம் முடிந்து போய் இருக்கும்.

மீண்டும் புதுவித காலனியாதிக்கத்தில் நாம் அடிமைப் பட்டு இருப்போம் என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும் ?

No comments :

Post a Comment