மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் செயற்குழு கூட்டம் 27.11.2015 அன்று டெல்லியில் நடைபெற்றது . ஏழாவது ஊதியக்குழுவின் சிபாரிசுகளின் மீது விரிவான விவாதம் நடத்தி கீழ்க்கண்ட முடிவுகளை எடுத்துள்ளது.
1. ஏழாவது ஊதியக்குழுவின் பல சிபாரிசுகள் பிற்போக்கானது. அவை அரசினால் அமுலாக்கப்படுவதற்கு முன்பாக மாற்றியமைக்கப்பட வேண்டும். குறிப்பாக மிகவும் குறைத்தும் தவறாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்த பட்ச ஊதியமும் சம்பள நிர்ணய பார்முலாவும் மாற்றப்படவேண்டும் .மேலும் பல்வேறு அலவன்சுகளை ரத்து செய்ய வகை செய்யும் சிபாரிசுகள் நிராகரிக்கப்படவேண்டும்.
2.தேசிய கூட்டு நடவடிக்கை குழு (NJCA ) குடையின் கீழ் இரயில்வே , ராணுவம் மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனம் இணைந்து நடத்தும் ஒன்று பட்ட போராட்டம் ஒன்றே ஏழாவது ஊதியக்குழுவின் மோசமான பரிந்துரைகளை மாற்ற அல்லது நிராகரிக்க வேண்டிய கட்டாயத்தை மத்திய அரசுக்கு ஏற்படுத்தும் என சம்மேளனம் உறுதியாக கருதுகிறது .
3. அத்தகைய ஒன்று பட்ட போராட்டம் என்பது, அரசு சம்பள கமிசனின் சிபாரிசுகளை அமுலாக்குவதில் விரைவாக இருப்பதால் , குறிப்பிட்ட கால கெடுவுக்குள் அறிவிக்கப்படும் கால வரையற்ற வேலை நிறுத்தமாக
இருக்கவேண்டும் என தீர்மானிக்கிறது . அதற்கு முன்பாக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவதுடன் ஊழியர்கள் மத்தியில் விரிவான பிரச்சாரம் செய்து அவர்களை அணி திரட்டவேண்டும் .
4. NJCA கோரிக்கை சாசனத்தில் GDS கோரிக்கைகளை சேர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறது .அனைத்து காலியிடங்களையும் நிரப்பிடவேண்டும் என்ற கோரிக்கையும் இடம்பெற வேண்டும் என தீர்மானிக்கிறது .
5. ஒருவேளை, NJCA இன் கீழ் எதிர்பார்க்கும் இயக்கங்கள் சாத்தியமாகாமல் போகுமானால் மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளன செயற்குழு கூடி தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது

No comments :
Post a Comment