Thursday, October 10, 2013

SUBMISSION OF MEMORANDUM TO RAJYA SABHA PETITION COMMITTEE THRO' Sh. N. BALAGANGA , M.P. RAJYA SABHA ON GDS ISSUES


ராஜ்ய சபா  முறையீட்டுக் குழுவுக்கு  GDS ஊழியர் பிரச்சினை குறித்து பரிசீலிக்க  கோரிக்கை மனு . 

இந்த மனு மீது RAJYA SABHA PETITION COMMITTEE பரிசீலனை மற்றும் உரிய விசாரணை செய்து அதன் பரிந்துரைகளை  பிரதம அமைச்சருக்கு அளித்திட அதிகாரம் உள்ளது என்பதையும் அதன் மீது பிரதம அமைச்சர் அமைச்சரவைக் குழுவுக்கு  முடிவுகளை தெரிவிக்க வேண்டியது அரசியல் சாசன விதி ஆகும் என்பதையும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

 09.10.2013  அன்று காலை சுமார் 12.00  மணியளவில் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பில் அதன் மாநிலச் செயலர் தோழர். J.R. அவர்களும்  மாநிலச் சங்கத்தின் நிதிச் செயலரும் , அகில இந்திய சங்கத்தின் உதவிச் செயலருமான தோழர். A. வீரமணி அவர்களும் மற்றும் தமிழ் மாநில AIPEU GDS NFPE சங்கத்தின் மாநிலச் செயலரும், அதன் அகில இந்திய துணைப் பொதுச் செயலருமான தோழர். R. தனராஜ் அவர்களும் 

 அகில இந்திய  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்கள் அவை  உறுப்பினரும் , அதன் மாநிலங்களவை கொறடாவும், அஞ்சல் வாரிய ஆலோசனைக்குழு உறுப்பினரும், அதன்  வட சென்னை (தெற்கு ) மாவட்டச் செயலருமான  

திருமிகு . நா. பாலகங்கா  

அவர்களை அவரது  எழும்பூர் இல்லத்தில்  GDS ஊழியர்களின்  பிரச்சினைகள் குறித்தும் , அவர்களை இலாக்கா ஊழியர்கள் ஆக்கிட உள்ள வழிமுறைகள் குறித்தும் அதன் சட்ட ரீதியான விபரங்கள் குறித்தும்  , ஏழாவது ஊதியக் குழுவே அவர்களது ஊதிய  மற்றும் பணித்தன்மைகளை பரிசீலித்திட வேண்டியும்  இந்திய நாட்டின் மாநிலங்களவை தலைவரிடம் அளிப்பதற்கான -  PETITION COMMITTEE க்கான - (RAJYA SABHA PETITION COMMITTEE) மனுவினை அளித்தார்கள் . அப்போது எடுக்கப் பட்ட புகைப்படத்தின்  நகலையும் , அந்த மனுவுக்கான  COVERING LETTER ஐயும் கீழே பார்க்கவும்.

மனுவின் நகல் அதிக பக்கங்கள் கொண்டதால் தனியே பிரசுரிக்கப் படும்.

புகைப் படம் இடமிருந்து வலமாக  :- 

திருமிகு. நா. பாலகங்கா, தோழர். J.R., தோழர். A. வீரமணி,  
தோழர். R. தனராஜ் .

Wednesday, October 9, 2013

World Post Day



World Post Day is celebrated each year on 9 October, the anniversary of the establishment of the Universal Postal Union (UPU) in 1874 in the Swiss capital, Berne. It was declared World Post Day by the UPU Congress held in Tokyo, Japan, in 1969.

AWARENESS

The purpose of World Post Day is to create awareness of the role of the postal sector in people’s and businesses’ everyday lives and its contribution to the social and economic development of countries. The celebration encourages member countries to undertake programme activities aimed at generating a broader awareness of their Post’s role and activities among the public and media on a national scale.

NEW PRODUCTS AND SERVICES

Every year, more than 150 countries celebrate World Post Day in a variety of ways. In certain countries, World Post Day is observed as a working holiday. Many Posts use the event to introduce or promote new postal products and services. Some Posts also use World Post Day to reward their employees for good service.
In many countries, philatelic exhibitions are organized and new stamps and date cancellation marks are issued. Other activities include the display of World Post Day posters in post offices and other public places, open days at post offices, mail centers and postal museums, the holding of conferences, seminars and workshops, as well as cultural, sport and other recreational activities. Many postal administrations issue special souvenirs such as T-shirts and badges.

Tuesday, October 8, 2013

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் வேலை நிறுத்த 
ஆயத்த மாநாடு மற்றும்  மாநில மாநாடு மாபெரும் வெற்றி !

கடந்த 05.10.2013 சனிக் கிழமை காலை சுமார் 10.30  மணியளவில் , சென்னை தி. நகர் , ஜெர்மன் ஹாலில் சம்மேளனத்தின் மாபொதுச் செயலர் தோழர். கிருஷ்ணன் அவர்கள் தியாகிகள் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்த மாநாடு இனிதே துவங்கியது

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தமிழ் மாநிலத் தலைவர் தோழர். A.G. பசுபதி அவர்கள் தலைமை வகித்தார் . மாநிலப் பொருளாளர் தோழர். சுந்தரம் அவர்கள்  வரவேற்புரையாற்ற ,  மாநிலப் பொதுச் செயலர் தோழர். M. துரைபாண்டியன் அவர்கள்  மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார்

 பின்னர்  மாபொதுச் செயலர் தோழர். கிருஷ்ணன் அவர்கள் , ஏழாவது ஊதியக்குழு 01.01.2011 முதல் அமைக்கப் படவேண்டும் எனவும்   50% பஞ்சப் படி  01.01.2011  முதல் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப் பட வேண்டும் எனவும்,  GDS ஊழியர்களுக்கும்  ஊதியக் குழுவே அவர்களது ஊதிய மற்றும் பணித்தன்மை குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும், 5 கட்ட பதவி உயர்வு வழங்கப் படவேண்டும், புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும், வேலை நிறுத்த உரிமை சட்டமாக்கப் பட வேண்டும்  ,  கருணை அடிப்படையிலான  பணி நியமனங்கள் முழுமை யாக வழங்கப் படவேண்டும் போன்றவை உள்ளிட்ட 1 5 அம்சக் கோரிக்கை களை வலியுறுத்தி  மத்திய அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவேண்டும் என்பது குறித்த  பிரச்சார இயக்கத்தை  துவக்கி வைத்து நீண்ட  உரை ஆற்றினார்

உணவு இடைவேளைக்குப் பிறகு  மதியம் 02.00  மணியள வில்  மாநில மாநாடு துவங்கியது . தோழர். AGP அவர்கள்  தலைமை வகித்தார். மாநாட்டில்  நமது NFPE சம்மேளனத்தின் முன்னாள் மாபொதுச் செயலர் தோழர். K.R., அஞ்சல் மூன்றின் முன்னாள் பொதுச் செயலர் தோழர் K.V.S.,  AUDIT & ACCOUNTS சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலர் தோழர். A.V.V.,  NFPE சம்மேளனத்தின் உதவிப் பொதுச் செயலர் தோழர். ரகுபதி,  உள்ளிட்ட  பலதுறை சார்ந்த சங்கங்களின் தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினார் கள்.  அதன் பின் மாநாட்டு அறிக்கை தோழர்  துரைபாண்டியன் அவர்களால்  வழங்கப் பட்டது. தொடர்ந்து வரவு செலவு கணக்குகள் தோழர். சுந்தரம் அவர்களால்  சமர்ப்பிக்கப் பட்டது

மாநாட்டில் 60 ஆண்டுகளுக்கு மேலாக  தொழிற் சங்க இயக்கத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு தனது 82 ஆவது வயதிலும்  முழு நாள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி நடத்திக் கொடுத்த , தமிழ் மாநில மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின்   தலைவர் தோழர் A.G.P. அவர்களும், கடந்த 10  ஆண்டுகளாக  அனைத்து துறை ஊழியர்களிடமும் இனிமையாகப் பழகி, இயக்கம் வளர்ச்சி பெற அனைத்து போராட்டங் களிலும் ஊழியர்களை ஒருங்கிணைப்பதில்  தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு  செயலாற்றிய  மாநிலப் பொருளாளர் தோழர் சுந்தரம் அவர்களும்  நமது மாபொதுச் செயலரால் பாராட்டி  கௌரவிக்கப் பட்டார்கள். தொடர்ந்து தோழர். AGP அவர்கள் வழங்கிய ஏற்புரை எழுச்சி மிக்கதாக அமைந்தது .

இதன் பின்னர்  பல துறை சார்ந்த சங்கங்களில் இருந்து  சார்பாளர்கள் கலந்துகொண்டு  அறிக்கை மீதான விவாதத்தில் தங்களது கருத்துக் களை வழங்கினார்கள்.  இறுதியாக  மாநாட்டு நிர்வாகிகள் தேர்தல் ஒருமனதாக நடைபெற்றது.  கீழ்க் கண்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்

மாநிலத் தலைவர்          :    தோழர். J. இராமமூர்த்தி , NFPE  P3 அஞ்சல் துறை.

மாநில உதவித் தலைவர் :தோழர். B. கம்பீரம் ,  CGHS
                                                           தோழர். S. சாம்ராஜ்,  சாஸ்த்ரி பவன்  COC
                                                           தோழர். K. சங்கரன் , NFPE R3 அஞ்சல் துறை 

பொதுச் செயலர்                   :   தோழர். M. துரைபாண்டியன் ,  AG'S  OFFICE

செயலாளர்கள்                      :   தோழர். V. ராஜேந்திரன், NFPE P4, அஞ்சல்துறை.
                                                           தோழர்.  M. சந்தானம் NFPE R4,  அஞ்சல் துறை 
                                                           தோழர்.  சுரேந்திரன்,  A.I.R. &  DD

மாநிலப் பொருளாளர்        : தோழர். S. சுந்தரமூர்த்தி , INCOME TAX

அமைப்புச் செயலர்கள்    :   தோழர். P. நாகராஜன், NFPE  ADMIN 
                                                                              அஞ்சல்துறை                           
                                                           தோழர்.K.K. விஜயன் , INCOME TAX
                                                            தோழர்.S. அப்பன்ராஜ்,  NFPE SBCO 
                                                                            அஞ்சல்துறை 
                                                            தோழர். R.R. ஷ்யாம்நாத் , INCOME TAX
                                                            தோழர். A. பாலசுப்ரமணியன், CIVIL ACCOUNTS
                                                            தோழர். R. தனராஜ், GDS, அஞ்சல் துறை 
                                                            தோழர். A. சதாசிவம்,  ATOMIC ENERGY
                                                            தோழர். K. மருதநாயகம், NFPE P3, 
                                                                              அஞ்சல்துறை 
                                                            தோழர். A. பாலசுந்தரம் ,  CG WATER BOARD
                                                            
தணிக்கையாளர்                  :   தோழர். சந்தோஷ் குமார், NFPE  
                                                                              A/C,அஞ்சல்துறை

மாநாட்டில்   தமிழகத்தின்  பல்வேறு பகுதிகளில் இருந்தும்  பல்வேறு துறைகளில் இருந்தும்  சுமார் 600 க்கும் மேற்பட்ட  பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள் . காலை முதல் மாலை வரை  சார்பாளர்கள்  கலையாமல் முழுமையாக  பங்குகொண்டது  சிறப்பான  நிகழ்வு ஆகும். மாலை  05.30  மணியளவில்  தோழர்.  M.S. வெங்கடேசன் , INCOME TAX அவர்கள் நன்றியுரையாற்ற ,  மாநாடு இனிதே  முடிவுற்றது.     


Friday, October 4, 2013