Friday, November 27, 2015

டிசம்பர் 1 & 2 வேலை நிறுத்தம் தள்ளிவைப்பு .


டிசம்பர் 1 & 2 வேலை நிறுத்தம் தள்ளிவைப்பு .
அன்புள்ள தோழர்களே !
26.11.2015 அன்று டெல்லி யில் கூடிய நமது சம்மேளன செகட்ரியேட் கூட்டம், ஏழாவது சம்பள கமிஷன் தனது அறிக்கையை அரசிடம் கொடுத்துவிட்ட சூழல்,  மற்றும் GDS  ஊழியர்யளுக்கென  ஓய்வு  பெற்ற அதிகாரியின் தலைமையில் ஒரு கமிட்டி  அமைக்கப்பட்ட பின்பு  உள்ள சூழலை ஆய்வு செய்தது
மேலும் இந்த புதிய சூழலில் GDS  ஊழியர்களின்  சம்பள ஆய்வினை ஏழாவது ஊதிய குழுவிற்கு உட்படுத்த வேண்டும் என்பது உட்பட ,அவர்களின் நியாயமான கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக NFPE  மற்றும் AIPEU GDS (NFPE ) டிசம்பர் 1 & 2 தேதிகளில் விடுத்துள்ள  வேலை நிறுத்த அறைகூவல் குறித்தும் பரிசீலனை செய்தது .
அரசு மற்றும் அஞ்சல் வாரியத்திடம் கொடுக்கப்பட்ட கோரிக்கை சாசனத்தின் மிக முக்கியமான கோரிக்கை, GDS  ஊழியர்களின்  சம்பள ஆய்வினை ஏழாவது ஊதிய குழுவிற்கு உட்படுத்த வேண்டும் என்பது தான் . இந்த  கோரிக்கையை  வென்றெடுப்பதற்காக  தர்ணா ,உண்ணாவிரதம் , GDS ஊழியர்களின் பாராளுமன்ற பேரணி, NFPE  & FNPO இணைந்த JCA சார்பாக பாராளுமன்ற பேரணி, 12.12.2012 ஒரு நாள் வேலை நிறுத்தம், 12.02.2014 & 13.02.2014 இரண்டு நாள் வேலை நிறுத்தம் என பல்வேறு இயக்கங்களை NFPE  நடத்தியுள்ளது.  நமது இத்தகைய போராட்ட இயக்கங்களினால்தான் GDS  ஊழியர்களை ஏழாவது சம்பள கமிஷன் பரிசீலனைக்குள் கொண்டு வர வேண்டும் என்ற பரிந்துரையை  தபால் வாரியம் தனது சாதகமான சிபாரிசுடன் நிதி அமைச்சகத்திற்கு அனுப்பியது ஆனால் நிதி அமைச்சகம்  மூன்று முறை நிராகரித்த பின்னணியில்தான் GDS  ஊழியர்களை ஏழாவது சம்பள கமிஷன் பரிசீலனைக்குள் கொண்டு வர அரசை வலியுறுத்தி  NFPE & AIPEU  GDS  (NFPE )  டிசம்பர்  1& 2 , 2015  இரண்டு நாட்கள்  வேலை நிறுத்தம்  செய்திட அறைகூவல் விடுத்தது .
GDS  ஊழியர்களை  ஏழாவது சம்பள கமிஷனில் சேர்ப்பதற்கு அரசு மறுத்துவிட்டபோதும்GDS  ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கி  அவர்களுக்கு விகிதாச்சார அடிபடையில் இலாகா ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து பயன்களும் வழங்கப்படவேண்டும் என்ற  அவர்களது  முக்கியமான கோரிக்கையை ஏழாவது சம்பள கமிஷன் பரிசீலித்ததுஆனால் ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான சம்பள கமிஷன்  நமது கோரிக்கையை பரிசீலித்து GDS  ஊழியர்கள் அரசு பதவியை வகித்தாலும் அவர்கள் அரசு ஊழியர்கள் அல்ல என்று திட்டவட்டமாக அறிவித்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானதுஏழாவது சம்பள கமிஷனின்  இத்தகைய கருத்துரைக்குப்பிறகு, GDS  ஊழியர்கள் ஏழாவது சம்பள கமிசனில்  சேர்க்கப்பட்டாலும்  அவர்களது கோரிக்கையில்   நல்ல தீர்வு  கிடைத்திடாது .  எனவே அரசின் முன்பு நாம் வைக்கும் கோரிக்கையினை மாற்றிட வேண்டிய நிர்ப் பந்தத்தை இது நமக்கு ஏற்படுத்தியுள்ளது.
NFPE  ஆரம்பம் முதலே அதிகாரி கமிட்டி நியமனத்தை எதிர்த்து வந்தது . NFPE  & AIPEU GDS  (NFPE) , அதிகாரி கமிட்டி நியமனத்தை தவிர்ப்பதற்கும் , GDS  ஊழியர்களை ஏழாவது ஊதிய குழுவில் சேர்ப்பதற்கும்  நமது இலாகாவை வலியுறுத்தி வந்ததுஆனால் NDA  அரசு நமது கோரிக்கையை  நிராகரித்து  ஓய்வு  பெற்ற அதிகாரி தலைமயில் ஒரு கமிட்டியை தன்னிச்சையாக நியமித்து மூன்று லட்சம் GDS  ஊழியர்களை ஏமாற்றிவிட்டது . ஓய்வு  பெற்ற அதிகாரிகள் கமிட்டி  GDS  ஊழியர்களுக்கு ஒருபோதும் நீதி வழங்கியது கிடையாது என்பது  நமது கடந்த கால அனுபவமாகும்.
அரசு ஊழியர் அந்தஸ்து என்ற நமது கோரிக்கையை ஏழாவது சம்பள கமிசன் நிராகரித்து,   அரசும் GDS  ஊழியர்களுக்கான அதிகாரி கமிட்டி யை  நியமித்துள்ள பின்னணியில் , ஏழாவது  சம்பள கமிசனின் பரிசீலனைக்கு GDS  பிரச்னையை அனுப்பிட கோரி வேலை நிறுத்தம் செய்வது பொருத்தமாகாது  என்று நமது சம்மேளன செகட்ரியேட் கருதுகிறது . தற்பொழுது NDA  அரசு GDS  ஊழியர்களை அரசு ஊழியராக கருதி நிரந்தரமாக்கும் ஒரு கொள்கை முடிவை  எடுத்தால்தான் GDS  ஊழியர்களுக்கு நீதி கிடைக்கும்அத்தகைய கொள்கை முடிவை அரசு தானாக எடுத்திடாதுஅரசின் கொள்கையில் அத்தகைய மாற்றத்தினை ஏற்படுத்திட மிகப்பெரிய அளவில் GDS  உள்ளிட்ட தபால் ஊழியர்களை திரட்டி , அனைத்து  மத்திய அரசு ஊழியர்களின் ஆதரவினை மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் மூலமும்  மற்றும் JCM  தேசிய குழுவில் உள்ள ஊழியர் அமைப்புகளின் ஆதரவோடு  வேலை நிறுத்தம் செய்வது அவசியம். எனவே , டிசம்பர் 1&2 தேதிகளில் நடைபெற இருந்த வேலைநிறுத்தத்தை தள்ளி வைப்பது என சம்மேளன செகட்ரியேட் ஏக மனதாக முடிவு செய்துள்ளது .
அரசிற்கு நமது வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதற்கும் GDS  ஊழியர்களை இலாகா  ஊழியர் ஆக்கிட வலியுறுத்தியும் NFPE சம்மேளன மாபொதுசெயலர் மற்றும் சம்மேளனத்தைச்  சார்ந்த அனைத்து பொதுச்செயலர்கள்  டிசம்பர் 1&2 தேதிகளில் டெல்லியில் அஞ்சல் இயக்குனரகம் முன்பு இரண்டு நாள் உண்ணாவிரதம் இருப்பதென  முடிவு செய்யப்பட்டுள்ளது .கோட்ட , மண்டல  மற்றும் மாநில அளவில் 11.12.2015 அன்று நாடு தழுவிய உண்ணா விரதம்  இருந்திட அறைகூவல் விடுத்துள்ளது .


No comments :

Post a Comment