மத்திய
அரசு ஊழியர்களின் தேசிய கூட்டு நடவடிக்கைகுழு (NJCA) கூட்டம்
நாம் மிகவும்
எதிர்பார்த்த ஏழாவது சம்பள கமிஷன் தனது சிபாரிசினை வழங்கிவிட்டது. பொது மக்கள் மத்தியில்,
மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.5% சம்பள உயர்வு என தவறான பிரச்சாரம்
செய்யப்படுகிறது. ஆனால் உண்மையில் நமக்கு 14.29% உயர்வே
வழங்கபட்டுள்ளது. வெறும் இரண்டு பஞ்சப்படி
உயர்வு வழங்கினால் வரக்கூடிய உயர்வே நமக்கு சிபாரிசுசெய்யப்பட்டுள்ளது . 20.11.2015 அன்று
நடைபெற்ற ரயில்வே , பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் கூட்டு
அமைப்பான NJCA கூட்டத்தில்
, ஏழாவது சம்பள கமிசனின் பிற்போக்கான , மோசமான
சிபாரிசுகளுக்கு எதிராக போராடுவது என ஏக மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது .
சம்பள உயர்வல்ல ! சம்பள குறைப்பு !
இந்த Rs .2250/- உயர்விலும் ஏழாவது சம்பள கமிசன் சிபாரிசின் படி CGEGIS Rs 1500/- மற்றும் புதிய ஓய்வு திட்டத்திற்கான 10% தொகையில் உயர்வு Rs 1100/- என இரண்டையும் கழித்தால் சம்பள குறைப்பு Rs 350/- என்பதுதான் யதார்த்தம்.
ஒரு கண்ணில் சுண்ணாம்பு ! ஒரு கண்ணில் வெண்ணை!
இருப்பதையும் பறித்து கொண்டால் ??
*Small Family Allowance , Cash handling allowance , Treasury allowance , SB Allowance என பல Allowanceகளை ரத்து செய்ய சிபாரிசு செய்துள்ளது.
*Festival Advance ,Cycle/Motorcycle Advance என பல Advanceகளை ரத்து செய்ய சிபாரிசு செய்துள்ளது.
*தற்போதுள்ள MACP இல் உள்ள குறைபாடுகளை நீக்கிடாமல் MACP வழங்குவதற்கு கடுமையான நிபந்தனைகளை - தேர்வு உட்பட - உருவாக்கியுள்ளது
.
*புதிய ஓய்வு திட்டத்திற்கு எதிராக எந்த ஒரு சிபாரிசினையும் வழங்கிடவில்லை.
*Child Care Leave இல் முதல் 365 நாட்களுக்கு முழு சம்பளம் என்றும் அடுத்த 365 நாட்களுக்கு 80% சம்பளம் எனவும் ஊதிய குறைப்பிற்கு சிபாரிசு செய்துள்ளது.
*PERFORMANCE RELATED PAY என்ற பெயரில் புதிய ஆபத்து
*இருபது வருட சேவை முடிவில் EFFICEINCY என்ற போர்வையில் ஊழியர்களை வேலையை விட்டு , வீட்டுக்கு போகச்சொல்லும் ஆபத்து
கறுப்பு தினம்
சுருக்கமாக சொல்லுவதென்றால் ஏழாவது ஊதிய குழுவின் சிபாரிசு மத்திய அரசு ஊழியர்களுக்கு வெறுப்பையும் ,விரக்தியையும், ஏமாற்றத்தையும் தந்துள்ளது. எனவே NJCA 27.11.2015 அன்று அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் கலந்து கொள்ளும் வலுவான ஆர்ப்பாட்டத்தினை இந்தியா முழுவதும் நடத்திட அறைகூவல் விடுத்துள்ளது. அன்று கறுப்பு பேட்ச் அணிந்து கறுப்பு தினம் அனுசரிக்கவும் அறைகூவல் விடுத்துள்ளது. 08.12.2015 அன்று மீண்டும் NJCA கூடி அடுத்த கட்ட நடவைக்கை குறித்து முடிவெடுக்கும்.
ஆர்ப்பாட்டம்
நமது திருப்பூர் தலைமை அஞ்சலகம் முன்பு 27.11.2015 அன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் பெருந்திரளாக கலந்து கோரிக்கையை வென்றெடுக்க அணி திரள அறைகூவி அழைக்கின்றோம்
இது வெறும் ஆர்ப்பாட்டம் அல்ல ! உங்களின் உணர்வு !
இது வெறும் போராட்டமல்ல ! உங்களின் வாழ்வு !
பரவட்டும் ! போராட்ட தீ பரவட்டும் !
முழங்கட்டும் ! உரிமை முழக்கம் முழங்கட்டும் !
எட்டட்டும் 46 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் உரிமைக் குரல் மத்திய அரசின் செவிகளுக்கு எட்டட்டும் !
No comments :
Post a Comment