Tuesday, December 4, 2012

REPORT ON AIPEU-GDS (NFPE) – TAMIL NADU CIRCLE CONFERENCE


REPORT ON AIPEU-GDS (NFPE) – TAMIL NADU CIRCLE CONFERENCE


அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் GDS (NFPE ) இன் 
தமிழ் மாநில முதல் மாநாடு மாபெரும் வெற்றி  !

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு  பிரச்சினைகள் எதுவும் இல்லாத , GDS  ஊழியர்கள்  மிகவும் மகிழ்ச்சியுடன்  பங்கேற்ற,  வரலாற்று சிறப்பு மிக்க NFPE  சம்மேளனத்தின் கீழ் அமைந்த AIPEU GDS (NFPE ) சங்கத்தின் முதலாவது தமிழ் மாநில மாநாடு  கடந்த 02.12.2012 அன்று  நாமக்கல்  நகரில் அமைந்துள்ள S.P.S. திருமண மண்டபத்தில்  காண்போர் வியக்கும் வண்ணம்  மிகச் சிறப்பாக  நடைபெற்றது. 

'படை பெருத்ததால்  பார் சிறுத்ததோ ' 'நாமக்கல் நகர்தான்  சிறுத்ததோ'  என வியக்கும் வண்ணம் 1200 க்கும் மேற்பட்ட GDS  தோழர்களின் பங்கேற்பு , அணி வகுத்த பேருந்துகள் , மகிழுந்துகள்  எனத்  தன்னார்வமாய்  குவிந்த  40 க்கு மேற்பட்ட  வாகனங்களின் வரிசை காண்போரை வியப்பில் ஆழ்த்தியது . இது 'கூட்டிய கூட்டமல்ல' , NFPE  என்ற மந்திரச் சொல்லின்பால் பற்று கொண்டு  'கூடிய கூட்டம்' என்று , மாநாட்டு அரங்கமும் தோழர்களின்   மகிழ்ச்சி வெள்ளமும்  மாநாட்டுக்கு கட்டியம் கூறியது . 

தமிழக NFPE  வரலாற்றில் முதல் முறையாக NFPE சம்மேளனத்தின் தலைவர்கள் , அகில இந்திய சங்க நிர்வாகிகள், தமிழ் மாநிலத்தின் அனைத்து மாநிலச் செயலர்கள் ஒருங்கே  ஒரே மேடையில்  கூடி AIPEU  GDS (NFPE ) சங்கத்தை வாழ்த்தியதும் , இனி தமிழ் மாநிலத்தில் 9 சங்கங்களும்  ஒரே குரலில் ஓங்கி ஒலிக்கும்  என்று முழங்கியதும் கூட  ஒரு இயக்க வரலாறுதான். 

மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களின் பட்டியல் மிக நீளும் . ஆனால் அதில் முக்கியமானவர்கள் யார் யார் என்பதை கீழே தருகிறோம் .

Com.M.Krishnan, Secretary General, NFPE,

Com.K.Ragavendran, Working President, CCGE&W,
Com.K.V.Sridharan, Leader, JCM Staffside &  former Genl. Secy, AIPEU Gr.C., 
Com.P.Pandurangarao, General Secretary, AIPEU-GDS (NFPE)
Com.C.Chandra Sekhar, Working President, NFPE,
Com.S.Raghupathy, Asst. Secretary General, NFPE,
Com.S.Appanraj General Secretary SBCO Union.
Com.N.Gopalakrishnan, Working President, Gr.C., 
Com.A.Veeramani, Orgg. Secretary, AIPEU Gr.C (CHQ)
Com.J.Srivenkatesh, Circle President, Gr.C.,
Com.J.Ramamurthy, Circle Secretary, Gr.C.,
Com.Gopu Govindarajan, Org. Secretary, P-IV(CHQ)
Com. G.Kannan, CirclePresident, P-IV.,
Com. V.Rajendran, Circle Secretary, P-IV
Com.K.Sankaran, Circle Secretary, R-III.,
Com.K.Rajendran, Circle Secretary, R-IV.,
Com.P.Nagarajan, Org. Secretary, AIPAOEU (CHQ),
Com.R.B.Suresh, Circle Secretary, AIPAEA,
Com.A.Ragupathi Umashankar, Circle Secretary, AIPAOEU.,
Com.R.Dhanraj, Dy. General Secretary, AIPEU-GDS(NFPE) (CHQ)
Com.V.Murukan, Financial Secretary, AIPEU-GDS(NFPE) (CHQ)
Com.K.C.Ramachandran, Asst. General Secretary, AIPEU-GDS(NFPE) (CHQ)
Com.DSivagurunathan, Working President, AIPCPCCWF (CHQ)
 
 மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியாக  காலை 10.00 மணியளவில்  தேசியக் கொடியை தோழர் .KVS அவர்களும் , சம்மேளனக் கொடியை தோழர். கிருஷ்ணன் அவர்களும் AIPEU  GDS (NFPE ) இன் கொடியை  தோழர் பாண்டுரங்க ராவ் அவர்களும்  ஏற்றி வைத்து நிகச்சிகளைத் துவங்கினர். 
 
வரவேற்பு குழுவின் சார்பில் நம்முடைய மூத்த தோழர் , நாமக்கல் அஞ்சல் மூன்று கோட்டச் சங்கத்தின்  முன்னாள் தலைவர்  தோழர் T . மணி அவர்கள்  அனைவரையும் வரவேற்றதுடன் நாமக்கல் கோட்டத்தின் வரலாற்று நினைவுகளை  பதிவும்  செய்தார்.  

தொடர்ந்து GDS  சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர்  தோழர். R . தனராஜ் அவர்கள் தேர்தலுக்கு முன்னதான  மாநாட்டு நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கி  தனது உரையால்  முத்திரை  பதித்தார் . 

GDS சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் P . பாண்டுரங்க ராவ் அவர்கள் துவக்க உரையாற்றினார்.  அதற்கு பின்னர்  மாநில சங்கத்திற்கான நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப் பட்டது  GDS  சங்கத்தின் அகில இந்திய நிதிச் செயலர் தோழர் முருகன் அவர்கள்  நிர்வாகிகள் தேர்தலை முன்னின்று சிறப்பாக நடத்தினார்.   

கீழ்க்காணும் நிர்வாகிகள், மாநாட்டு அரங்கில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான  தோழர்களின் உற்சாகமான கோஷங்களுக்கும் கரவொலிகளுக்கும் இடையே  ஏகமனதாகத்  தேர்ந்தெடுக்கப்பட்டு  முறையாக அறிவிக்கப் பட்டார்கள். 

 
 President                     :    Com. S.Ramaraj, Kovilpatti Dn.

Vice President:                Com.V.Kaliamoorthy,Pondicherry Dn.   
                                        :    Com. M.Elangovan, Pattukottai Dn.
                                        :    Com. N.Sadasivam , Erode Dn.

Circle Secretary          :    Com. R.Dhanaraj, Nagapattinam Dn.

Asst. Circle Secy       :     Com.K.C.Ramachandran,Namakkal Dn.
                                             Com.M.Mahalingam, Erode Dn.
                                       :     Com. R.Sivaguru, Tiruvannamalai Dn.
                                       :     Com. V.Rajasekhar, Madhurai Dn.
                                       :     Com. S.Vijayakumar, Tambaram Dn.

Financial Secretay         : Com. R.Vishnudevan, Srirangam Dn.

Asst. Fin. Secretary       : Com. M.Durai, RMS ‘T’ Dn. Trichy.

Orgg. Circle Secretary   : Com. B.Jayaraj, Coimbatore Dn.
                                             : Com. P.Panner Selvam, Trichy Dn.
                                             : Com.S.Shanmugam, Salem West Dn.

Auditor                           :     Com.M,Nagarajan, Mayiladhuthurai Dn.

தொடர்ந்து மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு  மாநிலத்  தலைவர் தோழர். ராமராஜ் அவர்கள் தலைமையேற்று சிறப்பாக நடத்தினார்.

மாநாட்டுத் தீர்மானமாக , முறையான முதலாம் அகில இந்திய மாநாட்டினை  தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் நடத்துவதென்று  தீர்மானம்  பலத்த கரவொலியுடன் ஏகமனதாக நிறைவேற்றப் பட்டது. இது தொழிற் சங்கத்தில் ஒரு வரலாற்றுப் பதிவாக எதிர்காலத்தின்  பதியப் படும் என்பதால்  நம் தமிழகத்திற்கு கிடைத்த ஓர்  அரிய  வாய்ப்பு என்றே அனைவரும் கூறி மகிழ்ந்தனர். 

வரவேற்புக் குழுவால் தமிழ் மாநில GDS  சங்கத்திற்கு ரூ. 5000/- மும் அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூ.5000/- மும்  நன்கொடையாக மேடையிலேயே வழங்கப்பட்டது.

எதிர்வரும் 12.12.12 வேலை நிறுத்தத்தில் முழுமையாகப் பங்கு பெறுவதென்றும் , தமிழக NFPE  மாநிலச் சங்கங்களுடன்  இணைந்து பணியாற்றுவதென்றும்  ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. 

நாமக்கல் கோட்ட GDS சங்கத்தின் செயலர் தோழர் K .பொன்னுசாமி  அவர்கள் நன்றி கூற , மாநாடு இனிதே நிறைவுற்றது.  

மாநாட்டு ஏற்பாடுகள் , அருமையான  உணவு, தங்குமிடம், மனம் கனிந்த உபசரிப்பு என்று எல்லாவகையிலும் மிகக் குறுகிய காலத்தில் ,   மிகச் சிறப்பாக செய்த மாநாட்டு வரவேற்புக் குழுவுக்கும்  ,  நாமக்கல், திருச்செங்கோடு NFPE அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு, GDS  சங்கங்களுக்கும்  , குறிப்பாக வரவேற்புக் குழுவின்  தோழர். PKR என்று அன்போடு அழைக்கப்படும் தோழர் P. K . ராமசாமி அவர்களுக்கும் நம் அஞ்சல் மூன்று GDS  மாநிலச் சங்கங்களின் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம். 

மாநாட்டில், தன்னார்வமாய்  தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து வந்து  எழுச்சியுடன் கலந்து கொண்ட  அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு , RMS  மூன்று, RMS  நான்கு ,GDS  சங்கங்களின் நிர்வாகிகளுக்கும் , தோழர்களுக்கும் இதர அன்புத்  தோழமை உள்ளங்களுக்கும்  நம் அஞ்சல் மூன்று GDS  மாநிலச் சங்கங்களின் நெஞ்சார்ந்த நன்றி என்றென்றும் உரியதாகும்.

நமது வெற்றியை நாளைய  சரித்திரம் சொல்லும் ! 
இப்படை தோற்கின் எப்படி வெல்லும் ? 
நீதிக்கு இது ஒரு போராட்டம் !
இதை நிச்சயம்  உலகம் பாராட்டும் ! 

மாநாட்டுக் காட்சிகள் 


மேலே - மண்டபத்திற்கு வெளியே  முப்புறமும் 
கீழே - மண்டபத்திற்கு உள்ளே கூடிய கூட்டம் 


கொடியேற்றும் காட்சிகள் 


மேடையில் தலைவர்கள் 

























No comments :

Post a Comment