Thursday, October 29, 2015

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனக் கூட்டம்

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனக் கூட்டம்           
                                  
அன்புத் தோழர்களுக்கு வணக்கம். நேற்றைய தினம் (27.10.2015) மாலை சுமார் 06.00 மணி தொடங்கி மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம், தமிழ் மாநிலக் கிளையின் கூட்டம் AG அலுவலகக் கட்டிடத்தில் அதன்   மாநிலத் தலைவர் தோழர். J . ராமமூர்த்தி அவர்கள்   தலைமையிலும் பொதுச் செயலாளர் தோழர்.M . துரைபாண்டியன் அவர்கள் முன்னிலையிலும்  சிறப்பாக நடைபெற்றது. இதில் சாஸ்திரி பவன் , ராஜாஜி பவன்  ஊழியர்  சங்கங்களின் இணைப்புக் குழு,  வருமானவரித்துறை, AUDIT & ACCOUNTS ,  CIVIL  ACCOUNTS ,  PAO , ICMR , NIOT, MEDICAL  STORES , CENSUS , அகில இந்திய வானொலி  உள்ளிட்ட  அமைப்பு களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மறைந்த முன்னாள் அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர். பாலு அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. 

1. ஊதியக் குழு தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசைக் கண்டித்தும் , 

2. ஊதியக் குழுவே அறிக்கையை சமர்ப்பிக்க தயாராக இருந்த போதும்  வேண்டுமென்றே  நீட்டிப்பு அளித்து காலதாமதம் செய்யும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்தும்,  

3. தன்னிச்சையான அமைப்பான  7 ஆவது ஊதியக் குழுவுக்கு , அதன் சுதந்திர செயல்பாட்டை முடக்கும் வகையில் நிதிச்சுமை குறித்து அறிவுறுத்தியுள்ள  மத்திய  நிதி அமைச்சகத்தின் தலையீடு குறித்து கண்டித்திடவும், 

NATIONAL COUNCIL  JCM  ஊழியர் தரப்பின் சார்பிலும், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் சார்பிலும்  போராட்ட அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

கூட்டத்தில் மகா சம்மேளனத்தின் மூன்று கட்ட போராட்ட அறிவிப்பை செயல்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு  முடிவுகள் எடுக்கப்பட்டன . அதன்படி 

1. எதிர்வரும் நவம்பர் 2 முதல் 6  தேதி வரை அந்தந்த துறை சார்ந்த அலுவல கங்களின் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவது.

2. நவம்பர் 6 ந் தேதி அறிவிக்கப் பட்டுள்ள  தார்ணா  போரட்டத்தை ,டெல்லி ஜந்தர்  மந்தரில் தார்ணா நடைபெறும் 19.11.2015 அன்று மாநில  தலைமை யகத்தில் சிறப்பாக  நடத்துவது .( அஞ்சல் பகுதியில்  ஆர்ப்பாட்டத்துடன் கூடிய  வேலைநிறுத்த நோட்டீஸ் அன்றைய தேதியில் வழங்க உள்ளதாலும் அன்றைய தேதியில் வேலைநிறுத்த சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளதாலும் இந்த தேதி  மாற்றப்பட்டுள்ளது ).

3.தார்ணா  போராட்டத்தை மையப் பகுதியான   CPMG  அலுவலக வாயிலில் நடத்துவது. 

4.அதே தேதியில் தமிழகமெங்கும் கறுப்புச் சின்னம் அணிந்து கண்டன  ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது. 

இதற்கான தயாரிப்பு  வேலைகளை உடனடியாக துவக்குவது என்றும் முடிவுகள் எடுக்கப்பட்டன. இறுதியில்  மாநிலப் பொருளாளர் தோழர். 
S.சுந்தரமூர்த்தி அவர்கள் (INCOME TAX) நன்றி கூற கூட்டம் இனிதே முடிவுற்றது. 

                அஞ்சல்  பகுதி  வேலைநிறுத்தம் 

அஞ்சல் பகுதியில் எதிர்வரும் டிசம்பர் 1 மற்றும் 2ம்  தேதிகளில்  நடைபெறவுள்ள  வேலைநிறுத்தம் தொடர்பாக  எதிர்வரும் 6.11.2015 அன்று மாநில , கோட்ட மட்டங்களில் அளிக்கப்படவேண்டிய வேலை நிறுத்த நோட்டீஸ் மற்றும் ஆர்பாட்டம்  குறித்தும் , 6.11.2015 அன்று சென்னையில் நடைபெற உள்ள  வேலை நிறுத்த  சிறப்புக் கூட்டம் குறித்தும் , மாநிலம் முழுவதும் நடைபெற உள்ள  பிரச்சார இயக்கங்கள்  குறித்தும்  இதர சங்கங்களுடன் கலந்துகொண்டு  தமிழ் மாநில  NFPE  இணைப்புக் குழு மூலம்  அறிவிப்புகள்  வெளியிடப்படும் என்பதை   தமிழ்  மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments :

Post a Comment