08.03.2016 மகளிர் தின விழா கவிதை போட்டியில்
முதல் பரிசு பெற்ற கவிதை
கவியாக்கம் : தோழியர் P .மோகனாம்பாள் , POSTWOMAN , திருப்பூர் H .O .
முதல் பரிசு பெற்ற கவிதை
கவியாக்கம் : தோழியர் P .மோகனாம்பாள் , POSTWOMAN , திருப்பூர் H .O .
பெண் - சமூக பண்பாட்டின் பாசறை
பெண்ணின்
பெருமையை விளக்கும்
மகளிர்
தினமாம் மார்ச் எட்டு
யாரிந்த
மகளிர் ? யார்? . . . இந்த மகளிர்?
அன்புப்
பிரவாகம் ; அழகு பிரளயம்;
பண்புப்
பெட்டகம் ; பாசப்பெருங்கடல் ;
அறிவுச்சுடரொளி;
அகத்தில் பேரொளி;
இனிய சங்கீதம் ; இயற்கையின் இலக்கியம் ;
அவள் சக்தி
! . . . மகா
சக்தி !!
தமிழில்
அவள் பெயர் பெண்மணி !
தரணிக்கு
அவள்தான் கண்மணி !
ஏற்ற புதல்வனைச் சான்றோனாக்கிட
இவள் படும்பாடு தியாகமல்ல ... யாகம்
பிஞ்சு
மழலையைக் கொஞ்சுமவள் அழகு
!
பேச்சு
கற்பிக்கும் அபிநயம் அழகு!
அம்புலியைக் காட்டி
அமுதூட்டல் அழகு !
நல்லன ஆவதும் ... அல்லன அழிவதும்
...
தெள்ளென
விளங்கிடும் அவளால்தானே !
நீதானே
இந்த சமூக பண்பாட்டின் பாசறை
!
பெண்ணே!
உன் உயரத்திற்கு ஒரு
தொடக்கம்தான்
கல்பனா சாவ்லா . . .
உன் பரந்த உள்ளத்திற்கு ஒரு
பாசம்தான்
அன்னை தெரசா ...
உன் அரிய கண்டுபிடிப்பிற்கு ஒரு
தொடக்கம்தான்
மேரி கியூரி . . .
சாதனை படைத்தவர்களும் !
சரித்திரத்தில்
இடம் பெற்றவர்களும் !
மறைந்து
விட்டார்கள் என
மனம் கலங்கி விடாதே ! இதோ
!
இளைய சமுதாயம் வந்து
கொண்டே
இருக்கிறது உன் பின்னே !
மானுடம்
சிறந்திட மகளிரைப் போற்றுவோம்
!
மாநிலம்
செழித்திட மகளிரை வணங்குவோம் !
========================================================================
இரண்டாம் பரிசு பெற்ற கவிதை
=======================================================================
கவியாக்கம் :தோழியர் M .அஜிபுன்னிஷா , O .A .,கோட்ட அலுவலகம்,திருப்பூர்.
பெண்ணே !
நீ ஆடை உடுத்திய
அலங்கார பொம்மையல்ல !
சோடை போவதற்கு !
பெண்மையை வரமென்றவர்களே
நம்மை வரதட்சணைக்கு
வரட்டியாக்கியது போதும் !
அடகு வைத்த உன் சிந்தனையை மீட்டு
அரியணையில் ஏற்று !
அள்ளி வீசிய உன் கனவுகளை கண்டெடு !
உன் வழிகள் எங்கும்
தூண்டில்கள் இருக்கலாம் !
நீந்த முடியாதபடி
வலைகள் விரித்திருக்கலாம் !
தண்ணீராய் மாறு !
தங்க மீனாய்தான் இருப்பேனென
தர்க்கம் செய்யாதே !
வாழ்க்கை உனக்கு
சிற்பங்களையும் பரிசளிக்கும் !
தோல்விகளையும் பரிசளிக்கும் !
தோல்விகள் மட்டுமே
உனக்கு உளிகள் தரும் சிற்பம் செய்ய !
உனது ஆறாம் அறிவு
ஆராய்வதற்கு !
அழுது அழிவதற்கல்ல !
அதிகாலை பனிக்காற்று
முதல்
அந்திநேர அரட்டைவரை
ரசிக்க கற்றுக்கொள் !
சித்திரங்களாய் சுவரில்
இருந்து பயனில்லை !
உன் சிந்தனையைக் கொண்டு
சிற்பியாய் மாறு
========================================================================
இரண்டாம் பரிசு பெற்ற கவிதை
=======================================================================
கவியாக்கம் :தோழியர் M .அஜிபுன்னிஷா , O .A .,கோட்ட அலுவலகம்,திருப்பூர்.
சிற்பியாகும் சித்திரங்கள்
நீ ஆடை உடுத்திய
அலங்கார பொம்மையல்ல !
சோடை போவதற்கு !
பெண்மையை வரமென்றவர்களே
நம்மை வரதட்சணைக்கு
வரட்டியாக்கியது போதும் !
அடகு வைத்த உன் சிந்தனையை மீட்டு
அரியணையில் ஏற்று !
அள்ளி வீசிய உன் கனவுகளை கண்டெடு !
உன் வழிகள் எங்கும்
தூண்டில்கள் இருக்கலாம் !
நீந்த முடியாதபடி
வலைகள் விரித்திருக்கலாம் !
தண்ணீராய் மாறு !
தங்க மீனாய்தான் இருப்பேனென
தர்க்கம் செய்யாதே !
வாழ்க்கை உனக்கு
சிற்பங்களையும் பரிசளிக்கும் !
தோல்விகளையும் பரிசளிக்கும் !
தோல்விகள் மட்டுமே
உனக்கு உளிகள் தரும் சிற்பம் செய்ய !
உனது ஆறாம் அறிவு
ஆராய்வதற்கு !
அழுது அழிவதற்கல்ல !
அதிகாலை பனிக்காற்று
முதல்
அந்திநேர அரட்டைவரை
ரசிக்க கற்றுக்கொள் !
சித்திரங்களாய் சுவரில்
இருந்து பயனில்லை !
உன் சிந்தனையைக் கொண்டு
சிற்பியாய் மாறு
No comments :
Post a Comment