Monday, December 1, 2014

RESULTS OF THE BI-MONTHLY MEETING WITH THE PMG, CCR ON 28.11.2014

சென்னை பெருநகர மண்டல தோழர்களுக்கு  அன்பு வணக்கம். கடந்த 28.11.2014 அன்று  PMG, CCR  அவர்களுடன் இரு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டி   நடைபெற்றது . அதில்  மாநிலச் செயலர்  தோழர். 

J . R . அவர்களும்  மாநில உதவிச் செயலர் தோழர்  S . வீரன் அவர்களும் கலந்து கொண்டனர். 

கூட்டத்தின் முடிவுகள் வருமாறு :-

1.சென்னை பெரு  நகர மண்டலத்தில் , குறிப்பாக தாம்பரம், விருகம்பாக்கம், அண்ணா நகர், எழும்பூர்  அலுவலகங்களில்  ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் அறிவிக்கப்பட்டுள்ள  துரித அஞ்சல் பட்டுவாடா  ரத்து செய்தல் வேண்டும்.

இது குறித்து  மாநிலச் செயலர் தெளிவான  வாதங்களை எடுத்து வைத்ததன் பேரில் PMG, CCR  அவர்கள்  15 நாட்களை இந்தப் பிரச்சினை தீர்க்கப் படும் என்று உறுதி அளித்தார். 

2.சென்னை பெருநகர மண்டலத்தில் அனைத்து COUNTER  களிலும் அனைத்து சேவையும் வழங்கிட அளிக்கப் பட்டுள்ள  உத்திரவு  ரத்து செய்திட வேண்டும்.
.
முதற்கட்டமாக அனைத்து CBS  அலுவலகங்களிலும் இந்த உத்திரவு ரத்து செய்யப் படுகிறது. மேலும் CBS  இல்லாத MAJOR  OFFICE  களில்  இந்த உத்திரவு அமலாக்கள் குறித்து உரிய பரிசீலனை  செய்யப் படும்.  

3. தாம்பரம், கோட்டத்தில்  பழுது பட்ட  CASH  COUNTING  MACHINE , FAKE  CURRENCY  DETECTOR . GENERATOR  சரி செய்திட ஆவன நடவடிக்கை கேர்கொள்ளப் படும்.

திருவண்ணாமலை , ஆரணி தலைமை அஞ்சலகங்களில் பழுதுபட்ட  பிரிண்டர்கள்  மாற்றப்படும். இதுபோல அரக்கோணம் , தி. மலை  கோட்டங்களில்  பழுது பட்ட  BATTERY , UPS சரி செய்திட நடவடிக்கை எடுக்கப் படும்.

தி. மலை , அரக்கோணம்  கோட்டங்களில்  REPORT  SHEETS SUPPLY  முறைப் படுத்தப்படும்.

இது தவிர செங்கல்பட்டு கோட்டத்தில் SYSTEM  ADMINISTRATOR  கள்  DEPUTATION  செய்வது குறித்தும், கல்பாக்கத்தில் ஊழியர் பற்றாக்குறை மற்றும் ரயில்வே  RESERVATION  COUNTER  குறித்தும் கடிதம் அளித்து பேசப்பட்டது. 

உடன் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று PMG அவர்கள் உறுதி அளித்தார்கள்.

மேலும் , வட சென்னை  FORT  ST  GEORGE  அலுவலகத்தில் காசாளர்  பணி  நியமனம்  குறித்தும் , கிண்டி INDUSTRIAL  ESTATE  தோழர். வாசுதேவன்  REVIEW  DPC பிரச்சினை குறித்தும் , அரக்கோணம்  கோட்டத்தின்  தோழர் லெனின் அவர்களின் துணைவியார்  SPOUSE  CATEGORY  TY . TRANSFER  குறித்தும்  விவாதிக்கப் பட்டது.  உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று PMG அவர்கள் உறுதி அளித்தார்கள்.

இறுதியாக சென்னை பெருநகர மண்டலத்தில்  MINUS  BALANCE  RECOVERY  குறித்து நாம் ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் கடிதம் அளித்து  அதன் மீது WRITE  OFF செய்திட உறுதி அளிக்கப் பட்டதை சுட்டிக் காட்டி  உடன் நடவடிக்கை கோரினோம்.

அதற்கு PMG அவர்கள்  நம் கடிதத்தின் மீது  உரிய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகவும்  மொத்தம் ரூ 43 லட்சம் WRITE  OFF செய்திட நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகவும்  , இதன் மீதான கோப்பு  DTE  ஒப்புதல் பெறப்பட்டு  IFA வுக்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும் , இதுவரை எந்த ஒரு மண்டலத்திலும் இது போல  அதிக தொகை WRITE  OFF செய்யப் பட்டதில்லை என்றும்  நம் மாநிலச் செயலர் தோழர். J .R . இடமும்  மாநில உதவிச் செயலர் தோழர் வீரனிடமும் தெரிவித்தார்.

நிச்சயம்  இது நமது மாநிலச் சங்க முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியே !  

நமது PMG  திரு  மெர்வின்  அலெக்சாண்டர்  அவர்களுக்கு  நன்றி தெரிவிக்க நாம் கடமைப் பட்டுள்ளோம். அவரது ஊழியர் நலப் பணிகள் மேலும் சிறக்க வேண்டுகிறோம்.

No comments :

Post a Comment