Monday, July 1, 2013

முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள் 

1. 29/6/2013 அன்று டெல்லியில் AIRF தொழிற் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ரெயில்வே , பாதுகாப்பு ப் படை மற்றும் மத்திய அரசு ஊழிய்ர் மகா சம்மேளனத்தின் தலைவர்கள் கூடி எடுத்த முடிவின்படி விரைவில் போராட்டத் திட்டம் வகுக்கப்படும் .
ஏழாவது ஊ தியக்குழு அமைத்தல் , பஞ்சப்படியை அடிப்படை  ஊ தியத் துடன் இணைத்தல் போன்ற முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து மத்திய அமைச்சரவை ச் செயலரிடம் கோரிடவும் , துறை சார்ந்த கோரிக்கைகளை அந்தந்த சங்கங்கள் சம்பந்தப்பட்ட துறைசெயலரிடம் தந்திடவும் , இது தொடர்பான மேல் நடவடிக்கை வருகிற ஆகஸ்ட் 2013 முதல் வாரத்தில் மேற்காண் சம் மேளனங்கள் கூடி முடிவெடுக்கும் 
எனவும திட்டமிடப்பட்டுள்ளது .

2. மத்திய அரசு ஊழிய்ர் மகா சம்மேளனத்தின்  மாபொது ச்செயலரும் , நமது NFPE சம்மேளனத்தின் மா பொது ச்செயலரும் , நமது அஞ்சல் மூன்றின் பொது ச்செயலருமான தோழர் M . கிருஷ்ணன் அவர்கள் பெரு முயற்சியால் GDS ஊழியர்களை நிரந்தரமாக்குவது என்ற கோரிக்கை இன்று 35 லட்சம் மத்திய அரசு ஊ ழியர்களின்முக்கிய கோரிக்கையாக முன் வைக்கப்பட உள்ளது .

3. JCM -DEPARTMENTAL COUNCIL கூட்டத்தினை விரைந்து கூட்டிட நமது  சமமேளனம் கோரியுள்ளது . அதற்கான SUBJECTS தரப்பட்டு விட்டது . 

4. நமது NFPE மாபொது ச்செயலர் தோழர் M . கிருஷ்ணன்அவர்கள் , நமது துறையால்  அழைக்கப்பட்டு , IPS பயிற்சி முடிககவுள்ள இளம் அதிகாரிகளுடன் தொழிற் சங்க அவசியம் பற்றி கருத்துரை மற்றும் கலந்துரையாடல் நிகழ்த்தினார் .

--------    அஞ்சல் மூன்று , நான்கு  மற்றும் GDS  சங்கங்கள் , 
   திருப்பூர் , மேட்டுபாளையம் , தாராபுரம்  


No comments :

Post a Comment