மாநிலச் சங்க வரலாற்றில் இது வரை இல்லாத ஒரு புது முயற்சி !
பொதுக் கூட்டம் , மாநாடு என்றெல்லாம் இல்லாத ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி !
வகுப்பு எடுப்போர் தவிர , கலந்து கொள்ளும் அனைவருமே
இங்கு ஒரு மாணவர் தான் என்பது மகிழ்ச்சி !
இந்தப் பயிலரங்கு நிச்சயம் நமக்குத் தருமே
தொழிற் சங்க விழிப்புணர்ச்சி !
பயில ரங்கின் வலப் புறம் 50 அடி தூரத்தில் வற்றாத காவிரி ஆறு .
இடப் புறம் 100 அடி தூரத்தில் ஆறு படை வீடு முருகனின் கோயில் .
அதே சாலையில் 100 மீட்டர் தூரத்தில் வரலாற்றுப் புகழ்
திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் . இது தான் நம் நிகழ்விடம்.
DELEGATE மட்டுமே கலந்து கொள்ளலாம் என்றில்லாமல் , அஞ்சல் மூன்று
அஞ்சல் நான்கு , RMS மூன்று RMS நான்கு மற்றும் இதர பகுதி அஞ்சல்
தோழர்களும் PAID VISITOR ஆக கலந்து கொள்ளலாம் என்று பெருவாரியானோர் கோரிக்கையை ஏற்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது .
ஆனால் எத்தனை பேர் கலந்துகொள்வார்கள் என்பது முன்கூட்டியே
தெரிந்தால் மட்டுமே அவர்களுக்கான தங்குமிடம் மற்றும் உணவு
இதர வசதிகளை வரவேற்புக் குழுவால் செய்து கொடுக்க இயலும் என்பது
மறுக்க முடியாத உண்மை அல்லவா ?
இல்லையெனில் வசதி பற்றாக்குறை ஏற்பட்டு மன வருத்தம் ஏற்படும்
அல்லவா ? இதை தவிர்த்திடவே இந்த அன்புக் கோரிக்கை. மாநிலச் சங்க நிர்வாகிகள் மற்றும் கோட்ட/ கிளைச் செயலர்கள்
எதிர்வரும் வெள்ளி அன்றுக்குள் கலந்து கொள்வோர் எண்ணிக்கையை
வரவேற்புக் குழு பொறுப்பாளர்களிடம் கட்டாயம் தெரிவித்திட
வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறோம். இந்த வலைத்தளத்தை
பார்க்கும் அன்புத் தோழர்கள் , இதனைப் பார்க்காத இதர பகுதித்
தோழர்களுக்கும் அவசியம் இந்த செய்தியை தெரிவித்திட அன்போடு
வேண்டுகிறோம். வாருங்கள் நம் பயிற்சிப் பாசறை நோக்கி !
சேருங்கள் உழைக்கும்
கரங்களை தொழிலாளர் நலன் நோக்கி !
மீண்டும் தெரியும் நாம்
எழுதப் போகும் இயக்க வரலாறு !
நாளைய பொழுது இனி
நமதாகட்டும் ! குறிப்பு :-
கீழே உள்ள நிகழ்ச்சி நிரல் அழைப்பு தமிழகம் முழுதும் உள்ள அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும் , மாநிலச் சங்க நிர்வாகிகளுக்கும்
இதர பொறுப்பாளர்களுக்கும் முன்னணித் தோழர்களுக்கும் அஞ்சல் மூலம்
அனுப்பப் பட்டுள்ளது .
--- BY JR C/S P3
Your blog is different. How you are writing like this
ReplyDelete