Friday, March 4, 2011

அஞ்சல் மூன்று தமிழ் மாநில மாநாடு - 09 .03 .2011 -கவரப்பேட்டை

அஞ்சல் மூன்று தமிழ் மாநில மாநாடு - 09 .03 .2011 -கவரப்பேட்டை

அன்பான வணக்கங்கள் !
கடந்த 9.2 10 .2 .2009 தேதிகளில் நீதிமன்றம் மற்றும் இலாக்கா ஒப்புதலுடன்
அகில இந்திய சங்கத்தால் நியமிக்கப்பட்ட இடைக்காலக் குழு வேலூரில் நமது
மாநில மாநாட்டை நடத்தியது . அந்த மாநாடு நடத்திட நீதி மன்றத்தில் ஒப்புக்கொண்ட
வாதி , பின்னர் மாநாட்டினை எதிர்த்து வேறு நபர்களை வைத்து நீதிமன்றங்களில்
பல்வேறு வழக்குகளை தொடுத்து மாநிலச் சங்கத்தினை முடக்கிட எடுத்த
நிலைபாட்டை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் எண்ணற்ற வழக்குகளை சந்தித்தபோதும் , நமது மாநிலச் சங்கம் தன் நிலை தவறாது ஊழியர் பணியினை விருப்பு வெறுப்பு இன்றி ஆற்றி வருவதற்கு நமது இந்த வலைத் தளமே சாட்சியாகும். கடந்த ஆறு மாதங்களில் மட்டுமே 4000 க்கும் மேற்பட்ட VISITOR களைப் பதிவு செய்திருப்பதன் மூலம் நமது சங்கம், சரியான திசை நோக்கி அழிவு சக்தியாக இல்லாமல்
ஆக்க சக்தியாக பணியாற்றி வருவதற்கு இதுவும் சாட்சியாகும்.
வேலூருக்குப்பின் இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் , சங்க விதிப்படியும்
தேர்தல் விதிமுறைப்படியும் அடுத்த மாநாடு நடத்தவேண்டி இருப்பதால் , புனே நகரில்
கூடிய உச்ச மட்ட அமைப்பான அகில இந்திய மாநாடு . தமிழகத்திற்கு புதிய
மாநிலச் சங்க தேர்தலை அகில இந்தியச் சங்கமே நேரிடையாக நடத்த வேண்டி
ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.அங்கு கலந்து கொண்ட 22 மாநிலங்களில்.இருந்து வந்திருந்த ஒரு சார்பாளர் கூட இந்தத் தீர்மானத்தை எதிர்க்க வில்லை.
ஏனெனில் , ஊழியர் நலன் காக்கப்பட, நிச்சயம் மாநிலச் சங்கம் தடை இன்றி நடைபெறவேண்டியதன் அவசியத்தினை அனைவரும் உணர்ந்துள்ளனர் என்பதே இதன் பொருள் ஆகும்.ஆனால் இன்னமும் கூட சில சங்க விரோதிகள் , தனி நபர் நலன் கருதி , தவறான வழியைத் தேர்ந்தெடுத்து அந்த திசை நோக்கி செல்கின்றனர் . இந்தத் தவறுகளை ,பொது நலனுக்கெதிரான துரோகங்களை, இனியும் நீங்கள் அனுமதித் திடக் கூடாது ,
ஆதரித்திடக்கூடாது என்று அன்பாக வேண்டுகிறோம் . இந்த மாநில மாநாடு நடைபெறும் களம் நோக்கி நீங்கள் விரைந்து வருதல் வேண்டுகிறோம் !வெல்வது யாராயினும் வீழ்வது சங்கமாக இருக்கக் கூடாது ! அந்த திசை நோக்கி சிந்தியுங்கள் !நீதி மன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் வீழ்ந்து கிடப்பதா ?ஜன நாயக முறைப்படி தேர்தலை சந்திப்பதா ? ஒட்டுமொத்த ஊழியரின் உச்ச மட்ட தீர்மானமான , அகில இந்திய மாநாட்டின் தீர்மானத்தினை வழி ஏற்று மாநிலச் சங்கத்தினை அமைப்பதா ?குறுக்கு வழியில் சங்க சீர்குலைவு வேலைகளை செய்வோரின் தவறான திசை காட்டலை ஏற்பதா ?தனி நபர் மற்றும் ஒய்வு பெற்ற தீவினை வாதிகளின் பிரதிநிதி அல்லவே ? சங்கம் நம் அனைவரின் சொத்து ! தனி நபர் சொத்து அல்ல ! இதை நாம் நினைவில் கொள்வோம் ! நிச்சயம் இந்த மாநில மாநாட்டில் உங்களின் பங்களிப்பு முழுமையாக இருக்க வேண்டுமென அன்புடன் வேண்டி முடிக்கிறோம் !என்றும் தோழமையுடன் ....
N.SUBRAMANIAN DIVISIONAL SECRETARY NFPE P3 TIRUPUR

No comments :

Post a Comment